உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 23, 2014

பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!


ஒரு நாள் மனைவி கூட வாக்கிங்க் போக கிளம்பினேன். அப்போது பக்கத்துவீட்டுகாரம்மா எதிரில் வந்தாங்க. அவங்களை பார்த்ததும் என் மனைவிகிட்ட சொன்னேன் அவங்க ரொம்ப அழகாக இருக்கிறார்கள் என்று அவ்வளவுதாங்க உடனே வாக்கிங்க் போவதை நிறுத்திவிட்டு உடனே வீட்டிற்கு வந்து ஏங்க நான் உங்க கண்ணிற்கு அழகாக இல்லையா என்று கேட்டே என்னை அழ வைத்துவிட்டாள்..
சரி நம்ம அழ வைச்சது பொண்டாட்டிதானே என்று நினைத்து மறந்துவிட்டேன்( ஆமாம் நீங்க நினைச்சிருந்தா மட்டும் என்ன நடக்கும் என்று நீங்கள் கேட்பது என் காதில் நிச்சயம் விழாதுங்க)இன்னொரு நாள் பொண்டாட்டி கூட வாக்கிங்க் போகும் போது அடுத்த வீட்டுப் பெண்மணி எதிரில் வந்தாங்க. அவங்களை பார்த்து சிரித்துவிட்டு பாருங்க என் மனைவி எவ்வளவு அழகாக இருக்காங்க அப்படி இப்படி என்று என் மனைவியின் அழகை ஒரு பத்து நிமிஷம் பெருமையாய் பேசினேன். அதற்கு அவங்க நீயல்லாம் ஒரு ஆளா வெக்கம் இல்லமா பொண்டாடி புராணம் பாடுற என்று நாக்க புடுங்குற மாதிரி கேட்டுட்டாங்கஅதற்கு அப்புறம் 10 நாள் தலையை வெளிய காட்ட முடியலை அதற்கு அப்புறம் அவங்க வீட்டு குழந்தைக்கு ஐஸ்கீரிம் கேக் எல்லாம் வாங்கி கொடுத்தும் வீட்டில் சமைச்சதையெல்லாம் பக்கத்து வீட்டிற்கும் கொடுத்தும் சமாதானம் பண்ணிக்கிட்டேன்நேற்று நானும் என் மனைவியும் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்த போது எதிர்த்த வீட்டிற்கு புதுசா வந்த பெண்மணி தன் குழந்தையுடன் வெளியே வந்தாங்க அவங்க அழகாக இருக்காங்க என்று எதாவது சொல்லி வம்புல மாட்டிக்க கூடாது என்று நினைச்சு அவங்க எங்கள் அருகில் வருவதற்கு முன்பு அந்த அம்மாவிற்கு தான் பேரழகு என்று நினைப்பு போல உங்க அழகிற்கு முன்னால் இதெல்லாம் சூசுபி என்று அவர் எங்கள் அருகில் வருவதற்கு முன்னால் சொன்னேன்.. அதற்கு என் மனைவியும் பக்கத்துவீட்டு பெண்மணியும் சிரித்தார்கள் அப்பாடா இன்று பிரச்சனை இல்லையே என்று.. எண்ணி என் மனம் துள்ளிக் குதித்தது அதுவும் ஒரு நொடிதான் அதுக்கு பின்தான் அவர்கள் சிரித்ததன் ரகசியம் தெரிந்தது அந்த பெண் இவர்கள் இருவருக்கு தெரிந்த தோழியாம் அதனால் அவர் வந்ததும் நான் சொல்லியதை அவரிடம் சொல்லி சிரித்தார்கள் அதன் பின் நான் வீட்டிற்கு வெளியே இப்போதெல்லாம் வருவதில்லை.இந்த பெண்களையே புரிஞ்சுக்க முடியலையே அட ராமா கோவிந்தா கோபாலா நீதாண்டப்பா என்னை காப்பாற்றணும்..இதை வேற தெரியாதனமா நான் எழுதிட்டேன்....இப்படியெல்லாம் எப்படிடா உன்னால் மொக்கை பதிவு எல்லாம் எழுத முடியுதுன்னு யாரெல்லாம் சண்டைக்கு வரப் போறாங்களோ?அன்புடன்
மதுரைத்தமிழன்


15 comments :

 1. அல்லாத்துக்கும் காரணம் பியூட்டி இல்ல வாத்யாரே... அல்லாம் "மிட் லைப் கிரைசிஸ்..."

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
 2. எல்லாத்துக்கும் காரணம் இந்த வாய் தான் இத முதல்ல இழுத்து
  வைத்துத் தைக்க வேணும் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டிருக்க
  மறுபடியும் வீட்டுக்கார அம்மா மகாவலி புரத்துக்கு போக வேணும் என்று
  வழியக் கேட்டா மண்டைய மண்டைய ஆட்டுறீயே
  நீ என்ன ஊமையா ?...உருப்படாததெற்கெல்லாம் வாய் கிழியப் பேசுவ
  இப்ப ஏன் இப்புடி இருக்கிற என்று அதே உருட்டுக் கட்டைய தூக்கினா
  பாருங்க !! இப்ப எல்லாம் வாயல வந்த வின தானே தம்பி ?......:)))))))))))

  ReplyDelete
 3. பெண்களை நம்பாதே, உன் கண்களை நம்பாதே, மனிதா அப்டீன்னு ஒரு பழய பாட்டு இருக்கு. அடி வாங்கி வாங்கி அலுத்துப் போன ஆளு எளுதியது

  கோபாலன்

  ReplyDelete
 4. மதுரைத் தமிழன் மொக்கைனாலும் மொக்கயையும் கூட நகைச்சுவ தளும்ப எழுத முடியும்னு காமிச்சுட்டீங்களே! நீங்க வெளில வரலனா ஐயோ பாவம்க உங்க வீட்டைச் சுத்தி இருக்கறவங்க..... i Mean....got it?!!!!

  ReplyDelete
 5. எப்படியோ வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க! பேசாம பிரதமர் ஆயிடுங்களேன்! ஐ,மீன் மவுனமாயிட்டே பிரச்சனை இல்லேன்னு சொல்ல வந்தேன்! கலகல பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. "அழகு என்பது முகத்தில் இல்லை.. அகத்தில் இருக்கிறது.. நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.."ன்னு யாராவது இங்க வந்து கமெண்ட் போடட்டும்.., அப்புறம் வெச்சுக்கிறேன் கச்சேரியை...!!

  ReplyDelete
 7. சைட் அடிக்குற மதுரைத் தமிழன் நொள்ளைக் கண்ணைக் குத்த வடகம்பி ஒண்ணு அமெரிக்காவுக்கு பார்சேல்

  ReplyDelete
  Replies
  1. அழகா தெரிகிறவர்களை, அழகா இருக்காங்கன்னு சொன்னா, அதற்குப் பேர் சைட் அடிக்கிறதாங்க!! என்னங்க அநியாயமா இருக்கு.
   ஏற்கனவே அவுங்க வீட்டுல பூரிக்கட்டைகளை வைக்க இடம் இல்லாம, கராஜில் வச்சிருக்காங்களாம், இப்போ வடகம்பியை வேற அனுப்பினா, எங்கங்க வைப்பாங்க?.

   Delete
  2. தலைவரே, மனைவி கிட்ட அடிவாங்கியும் உங்களுக்கு புத்தி வரலையே, அவுங்க பக்கத்துல இருக்கும்போதே,இன்னொரு பெண் அழகாக இருக்காங்கன்னு சொல்லலாமா?
   பாருங்க, இப்ப பூரிக்கட்டையோடு, வடகம்பி வேற உங்களை பதம் பார்க்கிறதுக்கு ரெடியாயிடுச்சு.

   Delete
 8. இனிமே வாயை திறக்க முடியாத மாதிரி வாங்கிகிட்டீங்கன்னா பிரச்சினை சரியா போய்டும்...................

  ReplyDelete
 9. கட்டின கணவனுக்குத் தான் கட்டின பொண்டாட்டி மட்டும் தான் அழகா தெரியனும்.
  நாங்கள் (பெண்கள் எல்லாம்) அப்படித்தானே நினைத்து வாழ்க்கையை வாழ்கிறோம்.

  எங்களுக்குகெல்லாம் முகத்தில் இரண்டு கண்கள் மட்டுமே உள்ளது.
  உங்களுக்கு உடம்பெல்லாம் கண்களா.....? மனக்கட்டுப்பாடு அவசியம் சிங்கக் “குட்டி“ தோழா!!

  ReplyDelete
 10. அவங்க எதுவுமே கேட்காத போது எதுக்குங்க அதைப் பற்றி பேசறீங்க....... ஏனோ எனக்கு ரஜினி , செந்தில் ஜோக் நினைவிற்கு வந்தது... இவருக்கு பெண் பார்க்கப் போறோம், போட்டிருக்கறது என் சட்டை...

  ReplyDelete
 11. உங்களுக்கு வாய் நீளம், அதான் வாங்கிக் கட்டிக்கிறீங்க....

  ReplyDelete
 12. எத்தாலே கெட்டன்னா, வாயால கெட்டேன்ன்னு சொன்னானாம் ஒருத்தன்! :))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog