உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 24, 2012

விஜய் டிவி ஜாதிய(மத) உணர்வை கிண்டல் செய்கிறதா அல்லது தூண்டுகிறதா?
விஜய் டிவி ஜாதிய(மத) உணர்வை கிண்டல் செய்கிறதா அல்லது தூண்டுகிறதா?

சன்டிவியின் ஆதிக்கத்திற்கு மாற்றாக வந்து நல்ல நிகழ்ச்சிகளை வழங்கிவரும் விஜய் டிவியில் தற்போது பல நல்ல நிகழ்ச்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் நான் நேற்று பார்த்த சூப்பர் சிங்கர் நிகழச்சி. இது தமிழக குழந்தைகளின் பாடல் திறமையினை வெளிக்கொணரும் ஒரு நிகிழ்ச்சி & நல்ல நிகழ்ச்சி.

ஆனால் நேற்று நான் இந்த நிகழ்ச்சியை பார்த்த போது அவர்கள் எடுத்து கொண்ட தீம் செட்டிங் என்னை யோசிக்க வைத்தது.அந்த தீமிற்காக குழந்தைகள் செலக்ட் செய்து பாடல்களை மிக அற்புதமாக இந்த இளம் வயதில் பாடினார்கள் அதில் எந்த கருத்து மாற்றமும் இல்லை . ஆனால் நிகழ்ச்சியாளர்கள்  எடுத்து கொண்ட அக்ரஹார தீம் மை பற்றிதான் இங்கு கருத்து வேறுபாடு எழுகிறது.

இப்போது வளர்ந்து வரும் இந்த நாகரிக உலகில் ஜாதிய வேறுபாடுகள் மறைந்து வரும் இந்த நேரத்தில் இந்த ஜாதிய தீம் மிக முக்கியமா? அதை ஏன் இந்த மீடியா மீண்டும் இப்படி வெளிக் கொணர்கிறது என்பது தான் எனது கேள்வி.


சரி அப்படிதான் இந்த தீம் யை செலக்ட் செய்ததாக வைத்து கொண்டாலும் அதை கண்ணியமாக காட்டி சோவை நடத்தி சென்று இருக்கலாமே. மாமிக்களையும் மாமாக்களையும் மந்திரங்களையும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கிண்டல் கேலி செய்யலாமா?

இப்படிபட்ட "தீம்"மை எடுத்து மந்திரங்களை கீண்டல் கேலி செய்வதற்கு பதிலாக மந்திரங்கள் தெரிந்தவர்களிடம் மந்திரங்களை சொல்ல சொல்லி அதை எப்படி சொல்ல வேண்டும் அதற்கான அர்த்தங்கள் என்ன அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்று விளக்கி அதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள செய்யலாம் அதை விட்டு பெண் தொகுப்பாளர் உனக்கு காயத்திரி மந்திரம் தெரியுமா என்று கேட்க அதற்கு மற்றவர் உஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்லி மற்றவர்களின் கன்னத்தில் தட்டி கேலி செய்வது தேவைதானா?.

இவர்கள் போகிற போக்கை பார்த்தால் அடுத்த தீம் கிறிஸ்துவ தீம் என்று எடுத்து கொண்டு மனோ பாதிரியார் வேடத்திலும் சித்ரா & மற்றவர்கள் கன்னியாஸ்திரிகள் வேடத்திலும் வருவார்கள். அது மட்டுமல்லாமல் பாதிரியார் வேடத்தில் வரும் மனோ குழந்தைகளை பாராட்டி அணைக்கும் போது தொகுப்பாளர்கள் அந்த குழந்தைகளிடம் ஏய்ய்ய் பாதிரியார் வருகிறார் ஒடி விடு இல்லை உன்னை உறவுக்கு உபயோகித்து விடுவார் என்று சொல்லுவார் அதை கேட்டு எல்லோரும் ரசித்து கை கொட்டி  சிரிப்பார்கள்..

அல்லது இஸ்லாமிய பாடல்கள் என்ற தீம் அடுத்து மனோ அல்லது சித்ராவை இஸ்லாமிய வேடம் போட்டு அவர்கள் வரும் போது குண்டு போட்டு விடுவதாக செட்டிங்க் அரேன்ஞ் பண்ணுவார்கள் அல்லது சாக்லேட் மழைக்கு பதிலாக பட்டாசு மழை பெய்யவைப்பார்கள்

நான் சொல்லவருவது என்னவென்றால் குழந்தைகளின் திறமையை வெளிக் கொண்டுவரும் இந்த நிகிழ்ச்சியில் சுவையை சிறிது கூட்டுவதாக நினைத்து இந்த ஜாதிய மத எண்ணங்களை மறந்து போகிற காலத்தில் மீண்டும் விதைக்க வேண்டாம் என்பதே

தரமான டிவி தரம் கெட்டு போக கூடாது என்பதால் எனது எண்ணத்தை நான் இங்கே சொல்லிவிட்டேன் .இதை புரிந்து நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நடந்து கொண்டால் நமது வருங்கால குழந்தைகளுக்கும் நல்லது நமது நாட்டுக்கும் நல்லது என்பதே..


டிஸ்கி: சூப்பர் சிங்கரில் பாட வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோணங்கிதனங்கள் வர வர மிக அருவருப்பாக உள்ளது. அவர்களுக்கு ஒரு கேள்வி அக்ராஹார தீமுக்கு மாமி மாதிரி வேடம் போட்டு நீங்கள் கோணங்கி தனம் செய்தீர்களே... கடற்கரை பாடல்கள் என்ற தீம் எடுத்து நிகழ்ழ்சியை நடத்தினால் மேலை நாட்டு பெண்கள் ஜட்டி பாடி மட்டும் போட்டு கொண்டு வருவார்களே நீங்களும் அப்படி உங்கள் அங்கங்களை காட்டி டிவியில் வருவீர்களா? அதை படித்த பின்னும் அடங்குங்க்கப்பா.....
நிகழ்ச்சி உங்கள் குழந்தையின் திறமையை கொண்டு வருவதற்குதான் உங்கள் கோணங்கி தனத்தை கொண்டு வருவதற்கல்ல என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்..


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் இங்கு கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு....
Super Singer,  Vijay TV

21 comments :

 1. super singer pakkaratha niruthi romba naal acchu

  www.bhageerathi.in

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   15 வருடங்களுக்கு அப்புறம் இப்பதான் தமிழ் டிவி பார்க்க ஆரம்பிச்சு இருக்கிறோம்.அதிக நேரம் செலவழிப்பத்தில்லை ஒரு சில குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்க்கிறோம் அதில் இதுவும் ஒன்று

   Delete
 2. மந்திரங்களே ஒரு பெரிய புரட்டு  இதில் உன்னுடைய வக்காலத்து வேறா ,அப்போ டிவி செய்தது சரிதான் 

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   புரட்டு என்பவர்களுக்கு அது புரட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மந்திரம். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை அதனால் எனக்கு எதுவும் கிடைப்பதில்லை

   Delete
 3. விஜய் டிவி ஜாதி உணர்வுகளை தூண்டி விடுகிறதா என்று தலைப்பு போட்டுவிட்டு ஜாதியை பற்றி பேசாமல், மதத்தை பற்றி பேசி மத உணர்வை தூண்டிவிடுவது நல்லதா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   மதங்களில் ஜாதி ஒரு உள் பிரிவுதான்....அதனால் ஜாதியைப்ப்ற்றி சொல்லும் போது மதத்தை குறிப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை.
   நன்றாக படித்து பாருங்கள் நான் ஜாதி மத உணர்வை தூண்டவில்லை. அப்படி மீடியா செயல்படக் கூடாதுதான் என்று சொல்லி இருக்கிறேன்

   Delete
 4. நல்ல கேள்வி கேட்டீங்க! சூப்பர் சிங்கர் டூப்பர் சிங்கராக மாறி வருவது வேதனை!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   சூப்பர் சிங்கர் டூப்பர் சிங்கராக மாறிவிடக் கூடாது என்பதுதான் எனது கருத்தும்

   Delete
 5. subra said...

  மந்திரங்களே ஒரு பெரிய புரட்டு இதில் உன்னுடைய வக்காலத்து வேறா ,அப்போ டிவி செய்தது சரிதான்

  மந்திரங்கள் புரட்டு என்று எப்படி சொல்கிறீர்கள்! ஓசைகள்தான் மந்திரங்கள்! மந்திரங்கள் உயிரையும் காக்கும் வல்லமை உடையன. மேலெழுந்த வாரியாக பேசக்கூடாது. காயத்ரி மந்திரம் 1008 ஜபித்து விபூதி பூசினால் ஜுரம் கூட நீங்கும்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   புரட்டு என்பவர்களுக்கு அது புரட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மந்திரம்

   Delete
 6. மனசுல பட்டதை சொல்லுங்க..மாற்று கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம். அசிங்கமான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தால் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம்.மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் ஆள் தான்.

  The above statement is false statement in your blog. You don't deserve to publish the above statement. You have conveniently deleted the opposing comments.

  ReplyDelete
 7. ithellaam paarkka neram,porumai ullathaa? aachcharyamthaan!

  ReplyDelete
 8. @இளையாங்குடி

  நீங்கள் அனுப்பிய கருத்தில் உள்ள சிலவரிகளை என்னால் இங்கே அனுமதிக்க முடியாது. அது இந்த பதிவில் நான் சொல்ல விரும்பிய கருத்தில் இருந்து அது வேறு பாதைக்கு அழைத்து செல்வதாக இருக்கிறது..மன்னிக்கவும்

  அதில் நீங்கள் சொல்லிய சில வரிகளை இங்கே மற்றவர்கள் பார்வைக்காக நான் வைக்கிறேன்

  //முட்டாள் தனமான வாதம். இந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதி மத வெறியை,மற்ற்வர்கள் மீதான உங்கல் இழிபார்வையை நீங்கள் தீர்த்து கொள்கின்றீர்கள்.பிராமணர்களை இழிவு செய்தார்கள் என்றால் அதை எதிர்க்க வேண்டியதுதான்.ஏன் கிறிஸ்துவர்களை(பாதிரியார்களை) சிறுவர்களை புணர்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை திவிரவாதிகள் என்றும் அரிப்பெடுத்து சொரிந்து கொள்ள்கின்றிர்கள்///

  இதுதான் இளையாங்குடி இட்ட கருத்தில் ஒரு பகுதி மீதி இந்து மதத்வர்களை பற்றி சொல்லி இருக்கிறிர்கள்.ஔ இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாதது அதானல்
  இதுவரை நீங்கள் சொன்ன கருத்துகளை நான் அனுமதிகின்றேன். அதன் பின் நீங்கள் எழுதிய வரிகளை என்னால் அனுமதிக்க முடியாது, அது மற்றவர்களை இங்கு வந்து மேலும் அனாவசியமான இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்கு கருத்து சொல்ல நிலை வரும் அதை நான் இங்கு அனுமதிக்க இயலாது.


  @இளையாங்குடி

  //உங்களுடைய ஜாதி மத வெறியை//

  என்னுடைய ஜாதி எது மதம் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஓன்று சொல்லிகிறேன் எங்களின் சிறு குடும்பத்தில் அனைத்து மதமும் ஃப்லோ செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அது ஒரு சில முஸ்லிம் கிறிஸ்துவ, இந்து பதிவாளர்களுக்கும் மற்றும் என்னை சுற்றி வசிக்கும் வீட்டுக்கார்களுக்கும் எனது நண்பர்கள் உறவினர்களும் தெரியும்.

  இப்போது சொல்லுங்கள் நான் எந்த மத வெறியன் என்று

  ReplyDelete
 9. @இளையான்குடி

  // மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் ஆள் தான்.
  The above statement is false statement in your blog. You don't deserve to publish the above statement. You have conveniently deleted the opposing comments.//


  நீங்கள் என்ன சொல்லவருகிறிர்கள் சகோதரரே நான் சாதாரண மனிதன் அல்ல அறிவு ஜீவி என்ற?

  அது எல்லாம் ரொம்ப அதிகம் பேசாம என்னை லூசுன்னு சொல்லிவிடுங்க சகோதரரே

  சகோதரரே உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சொல்லி கொள்கிறேன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் என்னப்பற்றி தனிப்பட்ட முறையில் சொல்லி கொள்ளுங்கள் அது என்னை எந்தவிதத்திலும் காயப்படுத்தாது. ஆனால் இங்கு மற்றவர்களை காயப்படுத்த நான் இங்கு அனுமதிக்க முடியாது. ஒகே வா

  இங்கு வருகை தந்து கருத்துக்கள் இட்டதற்கு மிகவும் நன்றி இளையாங்குடி சகோதரரே

  ReplyDelete
 10. தங்களது பதிவு மிகவும் அபத்தம். விஜய் டிவி பார்பனர்களை கேளிசெய்தால் அதனை கண்டிக்க தங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதத்தை பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்வது சரியல்ல. இளையான்குடி சொன்னதை நான் மிண்டும் சொல்லுகிறேன்.
  //முட்டாள் தனமான வாதம். இந்த பதிவின் மூலம் உங்களுடைய ஜாதி மத வெறியை,மற்றவர்கள் மீதான உங்கல் இழிபார்வையை நீங்கள் தீர்த்து கொள்கின்றீர்கள்.பிராமணர்களை இழிவு செய்தார்கள் என்றால் அதை எதிர்க்க வேண்டியதுதான்.ஏன் கிறிஸ்துவர்களை(பாதிரியார்களை) சிறுவர்களை புணர்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை திவிரவாதிகள் என்றும் அரிப்பெடுத்து சொரிந்து கொள்ள்கின்றிர்கள்/// தயவுசெய்து பதிவை நீக்கவும்.

  நன்றி
  செய்யது
  துபாய்.

  ReplyDelete
 11. @செய்யது
  http://en.wikipedia.org/wiki/John_Jay_Report John Jay Report யை படித்து பாருங்கள். நான் ஏதோ எழுதுவதற்கு என்று முட்டாள்தனமாக எழுதவில்லை .பாதிரியார்கள் அனைவரும் ஒழுங்கு அல்ல அவர்களும் சாரசரி மனிதர்கள் தான் அதனால் மீண்டும் சொல்கிறேன் இங்கு நான் ஒன்றும் நடக்காததை எழுதிவிடவில்லை . அதனால் என் பதிவை நீக்குவது அவசியம் இல்லை.

  புத்திசாலி சகோதரா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

  ReplyDelete
 12. /// பாதிரியார்கள் அனைவரும் ஒழுங்கு அல்ல அவர்களும் சாரசரி மனிதர்கள் தான் அதனால் மீண்டும் சொல்கிறேன் இங்கு நான் ஒன்றும் நடக்காததை எழுதிவிடவில்லை/// எல்லா மதத்திலேயும் சில நல்லவர்களும் சில கேட்டவர்களும் இருப்பார்கள். அதுவல்ல பிரச்னை. தங்கள் பதிவில் சொல்லவந்து விஜய் டிவியின் சாதி பிரச்சனையை ஆனால் ஏன் தேவையில்லாமல் மற்ற மதங்களை வம்புக்கு இழுக்கின்றிர்கள். உண்மையிலே நீங்கதான் மத கலவரத்தை உண்டுபன்வதுபொல உள்ளது. இது எப்படி இருக்கு தெரியுமா? ஒருவன் மற்ற ஒருவனை தேவையில்லாமல் அடித்தவுடன் அடிவான்கியவன் டேய் நீ நல்ல ஆம்பிளையா இருந்தால் அங்கெ இருக்கும் பயில்வானையோ குஸ்திவீரனையோ அடிக்கமுடியுமா என்று கேட்பது பொல உள்ளது. இது தான் சிண்டுமுடிந்துவிடும் சந்க்பரிவார் வேலை என்பது இப்போது தங்களது முகமுடி கிழிந்து உண்மையான முகம் தெரிகிறது. ஓ அவனா நீ ????? இனி சொல்லுவதில் அர்த்தமில்லை. பை பை

  நன்றி
  செய்யது
  துபாய்

  ReplyDelete
 13. @செய்யது

  //இது தான் சிண்டுமுடிந்துவிடும் சந்க்பரிவார் வேலை என்பது இப்போது தங்களது முகமுடி கிழிந்து உண்மையான முகம் தெரிகிறது. ஓ அவனா நீ ????? ///

  நீங்கள் இடும் கருத்துகளில் குற்றம் சொல்ல வேண்டும் என்ற சிறு பிள்ளைத்தனமான அவசரம் தெரிகிறதே தவிர நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்பதைக் கூட நன்றாக படித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பது புரிகிறது

  எனது முந்தைய கருத்தான இதை படித்து பார்த்தால் அதையும் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் நீங்கள் ஓ அவனா நீ ????? என்று சொல்லி இருக்கமாட்டிர்கள்

  என்னுடைய ஜாதி எது மதம் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு ஓன்று சொல்லிகிறேன் எங்களின் சிறு குடும்பத்தில் அனைத்து மதமும் ஃப்லோ செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அது ஒரு சில முஸ்லிம் கிறிஸ்துவ, இந்து பதிவாளர்களுக்கும் மற்றும் என்னை சுற்றி வசிக்கும் வீட்டுக்கார்களுக்கும் எனது நண்பர்கள் உறவினர்களும் தெரியும்.


  @செய்யது உங்களுக்கு எனது குட் பை சகோதாரா

  ReplyDelete
 14. நல்ல நேரத்தில் நல்ல அறிவுரை . நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நான் இந்த பதிவில் சொல்ல வருவதை தெளிவாக புரிந்து கொண்டவர்களில் நீங்கலும் ஒருவர்

   Delete
 15. விஜய் தி .வி நிகழிச்சிகள் பாதிக்கு மேற்பட்டு இப்படித்தான் இருக்கின்றன.அம்மாக்கள் ,அப்பாக்கள் என்று எல்லோரையும் நடனமாட விடுவதும், என்று பல கலாசார சீர்குலைவை செய்கிறது.
  கார்த்திக் [பொன்னியின்செல்வன் ] +அம்மா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog