உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 3, 2012

"அந்த" நாட்களின் இன்பம் எங்கே போனது? யாரால் போனது?"அந்த" நாட்களின் இன்பம் எங்கே போனது?யாரால் போனது?


அதிகமில்லைங்க சுமார் முப்பது மூப்பதைந்து  வருடங்களுக்கு முன்பெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் காலை நேரத்தில் பெண்கள் வாசல் தெளித்துக் கோலம் போடுவார்கள். பெண் குழந்தைகள்  எழுந்து காலையில் படித்து விட்டு பின் வீட்டின் பின்புற தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்துத் தொடுத்து, பின் குளித்து தலைவாரி  பூ சூடிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்வார்கள் இதற்கு இடையில் கிடைத்த நேரத்தில்  அம்மாவிற்கு ஒத்தாசையாக வீடு பெருக்குவது, நீர்  இறைப்பது, அம்மியில் அரைத்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் ஆசையாக செய்வார்கள்.

ஆண் குழந்தையாக இருந்தால் காலையில் எழுந்து படித்து விட்டு  தொலைதூரங்களில் இருந்து  குடிநீரை சைக்கிளில் கொண்டு வந்து தருவதுகடைக்குப் போவதுதோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவது  போன்ற வேலைகளைச் செய்துவிட்டு பள்ளிக்குப் போவார்கள்.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நொறுக்கு தீணிகளை தின்றுவிட்டு தெருவில் போய் விளையாடுவார்கள். அதன் பின் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி கைகால் கழுவி , வீட்டுப் பாடங்களை எழுதிப் படித்து விட்டு எட்டு மணிக்கு இரவுச் சாப்பாட்டை சாப்பிடுவார்கள். அதன் பின் வீட்டு வாசலில் பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து சிறிது நேரம்  உரையாடிவிட்டு அப்படியே அம்மாக்களின் மடியில்  தூங்கி  விடுவார்கள்.

பெண்களும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கும் , கணவரை வேலைக்கும் அனுப்பி விட்டு பாத்திர பண்டங்களை கழுவி, துணி தொய்த்து  குளித்து விட்டு மதியம் ஒரு குட்டிதூக்கம் போட்டு எழுந்து காய்ந்த துணிகளை மடித்து போட்டு குமுதம் ஆனந்த விகடன் கல்கி கல்கண்டு போன்ற புத்தகங்களை சிறிது நேரம் படித்து வீட்டு அதன் பின் பள்ளியில் இருந்து வந்த குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இரவு நேர உணவை தயாரிக்க சென்று விடுவார்கள் இரவு குழந்தைகள் மற்றும் கணவருக்கு உணவு தந்துவிட்டு அதன் பின் வீட்டு வாசலில் உட்கார்ந்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேசிவிட்டு ஒன்பது அல்லது 10 மணிக்கு படுக்கைக்கு சென்று இரவு நேரத்தில் வரும் ரேடியோ பாடல்களை கேட்டு தூங்கிவிடுவார்கள்

 இன்றைய காலங்களில் பலமாடி கொண்ட அப்பார்ட்மெண்டில் குடி இருப்பதால் காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடும் வசியமில்லை அது போல வீட்டு வேலைகளைச் சுலபமாக்க கேஸ் அடுப்பு, மைக்ரோ வேவ், குக்கர் ,மிக்ஸி , வாஷிங்மெஷின், ஃப்ரிஜ், போன்ற ஏகப்பட்ட சாதனங்களால் செய்யும் வேலை நேரங்கள் குறைவது மட்டுமல்ல , உபயோகிப்பதும் எளிதாகிறது. அது மட்டுமல்லாமல் இப்போது கடைகளில்  எல்லா உணவுப் பொருட்களும் ரெடிமேடாக   கிடைப்பதால்  வேலை நேரங்கள் மிக குறைகிறது  அது மட்டுமல்லாமல் சமைப்பதும் மிக எளிதாக இருக்கிறது. விஷேச நாட்களிலோ ஆள் வைத்து சமைக்கிறார்கள் பலகாரங்கள் செய்கிறார்கள் மேலும்   இப்போது உள்ள கணவன்மார்களும் அந்த கால ஆண்களைப் போல அல்லாமல் வீட்டு வேலைகளில் அதிக அளவு உதவி செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கடைக்கு சென்று கூட பலசரக்கு போன்றவைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை போனில் ஆர்டர் செய்தால் வீட்டு கிச்சனுக்குள் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்லும் வசதியும் வந்து விட்டது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் இன்றைய நவின கால  பெண்களோ எப்போதும் நேரம் இல்லை நேரம் இல்லை நேரம் இல்லை நேரம் இல்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

நவின காலம் ,பெண்களுக்கு ஆண்களைவிட அதிக வசதி செய்து கொடுத்து இருப்பினும் ,அவர்களின் புலம்பல்கள் வசதிகளைப் போலவே அதிகரித்து கொண்டிருக்கின்றன.

பெண்களின் நேரங்கள் எப்படி களவாடப்படுகின்றன என்று பார்த்தால் அதில் முக்கிய பங்கு வகிப்பன செல்போன், லேப்டாப், டிவி

பெண்ணின் கையில் செல்போன் இல்லையென்றால் அவளின் உடம்பில் உயிர் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலமை போய்விட்டது. அது போல கணவருக்கும் ,தன் குழந்தைகளுக்கும் ,பெற்றோர்களுக்கும் காலையில் குட்மார்னிங் சொல்கிறார்களோ இல்லையோ லேப்டாப்பை திறந்து வைத்து உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகம் தெரியாதவன் ஒருவனுக்கும் குட்மார்னிங்கும் குட்நைட்டும் சொல்லி கொண்டு அதற்கு அவன் சொல்லும் பதிலுக்கு 1000 முறை லேப்டாப்பை ஒப்பன் செய்து பார்த்து கொண்டிருப்பார்கள். அடுத்தாக டிவி பார்த்து அதில் வரும் சீரியலை பார்த்து தாமும் அதை போல கஷ்டப்படுவதாக கற்பனை செய்து அழுது கொண்டிருப்பார்கள் அல்லது அந்த சீரியலை பார்ப்பதன் மூலம் எப்படி சண்டை போடுவது என்பதை கற்று கொண்டிருப்பார்கள்.

இந்த சனியன்களின் உபயோகத்தை மிகவும் குறைத்தால் எல்லா இன்பமும் அவர்களின் காலடியில் வந்து நிற்கும். அதை செய்வார்களா அல்லது இதை படித்ததும் உண்மையை போட்டு உடைத்த மதுரைத்தமிழனை கட்டையால் அடிக்க வருவார்களா காலம்தான் பதில் சொல்லும்.
.
அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments :

 1. ஒரு கேள்விதான்... அதுக்கு ஆரம்பித்த விதம் அடேங்கப்பா.அதுவும் தலைப்பு ம் ம் ம்

  ReplyDelete
 2. sarithAan!
  vaazhthukkal

  kattai varaaathu-
  vaazhthu attaiye varum!

  ReplyDelete
 3. ஆமாம்ப்பா... ஸ்கூல் முடிந்து வந்ததும் ஒரு மணி நேரமாவது தெருவில் விளையாடி விட்டுத்தான் வீட்டுக்குள் வருவேன் நான். இன்றைய குழந்தைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, நீங்க செர்ல்லிருக்கற மத்த விஷயங்களும் மிகமிகச் சரி.

  ReplyDelete
 4. இந்தியாவுல எத்தனை பெண்கள்கிட்ட லேப்டாப் இருக்குன்னு நம்புறீங்க. சொற்ப எண்ணிக்கையில்தான் சகோ. இன்னிக்கும் 4 மணிக்கு எழுந்து மாடாய் உழைக்கும் பெண்கள் உலகத்தின் எல்லா மூலையிலும் இருக்காங்க சகோ.

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வது இல்லத்தரசிகளாக
  வீட்டில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்
  வேலைக்கும் போய் வந்து வீட்டு வேலைகளும் செய்கிற பெண்கள்
  உண்மையில் கஷ்டம்தான் படுகிறார்கள்
  சிந்திக்கவைக்கும் பதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அது எப்படிங்க எல்லா பெண்களையும் நீங்க சொல்லலாம் . இப்பவும் என்னைய மாதிரி சகோதரிகள் வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டு , அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு இடையிடையே எங்கள் தமிழ் ஆர்வத்தையும் ஆண் ஆதிக்க வர்க்கத்திடம் வசவுகளை வாங்கியபடி அன்றாட நிகழ்வுகளை கழிக்கிறோம் .வசதி வாய்ப்புகளும் , முழுமையான பெண் சுதந்திரமும் இன்னமும் துணிச்சல் இல்லாத எதிர்த்துப் பேசத் துணியாத பெண்களிடம் இன்னமும் வரவில்லை என்றே சொல்லாலம் .

  ReplyDelete
 7. //இந்த சனியன்களின் உபயோகத்தை மிகவும் குறைத்தால் எல்லா இன்பமும் அவர்களின் காலடியில் வந்து நிற்கும்.//

  இவ்வரிகள் இல்லந்தோறும் (அதுவும் நடுத்தர
  குடும்பங்கள்)எழுதி வைக்க வேண்டியன ஆகும்
  நன்று நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 8. லேப்டாப் எல்லோருக்கும் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் தொல்லைகாட்சிகளும்.செல் போன்களும் அனேகமாக பெண்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது.இருக்கும் கவலைகள் போதாதென்று தொடர்களின் கவலைகளும் சேர்த்து ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் பெண்களுக்கு கோபம் வரத்தான் செய்கிறது.ஒன்றும் செய்ய முடியாது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog