உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 22, 2011

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் கதை

  அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் கதைஅழகிய ஒரு சிறு தமிழக கிராமத்திலுள்ள குன்று ஒன்றின் மீதுள்ள ஒரு ஏழையின் வீட்டில் ஒரு சிறு பெண் இருந்தாள் அந்த சிறு பெண் எப்பொழுதும் தன் வீட்டிற்கு அருகே விளையாடி வந்தாள். ஓவ்வொரு மாலைப் பொழுது விளையாடும் போது  தன் குன்றுகருகில் உள்ள மற்றொரு குன்றில் ஒரு வீடு தங்கத்தில் ஜொலிப்பதை எப்போதும் கண்டு பார்த்து பரவசம் அடைந்தாள். அவள் தன் பெற்றோரிடம் சொல்லி அந்த தங்க வீட்டுக்கு கூட்டிச் செல்லுமாறு அடிக்கடி கெஞ்சினாள். ஆனால் பெற்றோர்களோ அத மிக சாதரணவீடு தான் என்று சொல்லி வந்தார்கள். குழந்தையோ அதனை நம்பவில்லை. நாம் ஒரு நாளாவது அந்த கோல்டன் விட்டில் வாழ வேண்டும் என்ரு கனவு கண்டு வாழ்ந்து வந்தாள். நாளும் பொழுது கழிந்தது அந்த பெண்ணும் சிறிது சிறிதாக வளர்ந்து தனியே சைக்கிள்  ஓட்டும் நிலைக்கு வந்தாள். எப்பொழுது வீட்டிற்கு அருகே மட்டும் சைக்கிள் ஒட்ட அனுமதி பெற்று ஓட்டி வந்த அவள் ஒரு நாள் பெற்றோரிடம்  தான் இன்னும் சற்று அதிக தூரம் சைக்கிள் ஒட்டி வரட்டுமா என்று அனுமதி கேட்டாள். பெற்றோர்களும் சற்று யோசித்து ஒகே சென்று வா ஆனால் மிக வெகு தூரம் செல்ல வேண்டாம் கண்ணு கெட்டிய தூரம் மட்டும் போ என்று எச்சரித்தனர். அவளும் சரி என்று தலையை ஆட்டியவாறு சைக்கிள் ஒட்டத் தொடங்கினாள். அப்போது தற்செயலாக பக்கத்து குன்றை பார்த்த  அவள் அன்று அந்த வீடு மிகவும் தங்க மாக ஜொலிப்பதை கண்டுஅவள் ஆசை மிகுதியால் இதுநாள் வரை அடிக்கி வைத்த ஆசையை மீறி அதனை பார்க்கச் சென்றாள்.இறுதியில் அந்த குன்றுக்கருகில் சென்று சைக்கிளை வைத்துவிட்டு அந்த வீட்டுக்கு அருகில் சென்று பார்த்தாள், அந்த வீட்டை பார்த்ததும் அவள் மனம் மிக உடைந்து போனது காரணம் அந்த வீடு ஒரு பாழடைந்த வீடு  ஜன்னல் கம்பிகள் மிக துருப்பிடித்து அழுகடைந்தும் இருந்தது வீட்டு சுவர்கல் அங்காங்கே உடைந்து பாழடைந்து இருந்தது. அந்த வீட்டில் மிக வயதான முதியவர்கல் இருந்தனர் அவர்களும் ஏதோ சூனியம் பிடித்தவர்கள் போல இருந்தனர். அதனை கண்டு மனம் உடைந்து அழுதாவறே  அந்த வீட்டை விட்டு சிறு தூரம் சென்று அமர்ந்தாள். அழுதுமுடித்தவுடன் சற்று தலையை உயர்த்தி பார்த்த போது எதிரே உள்ள குன்று ஓன்றில் ஒரு வீடு கோல்டன் கலரில் ஜொலிப்பதை பார்த்தாள் அதை நன்கு உற்று பார்த்த போது அது தன் வீடுதான் என்பதை கண்டு கொண்டாள். அங்கு தன் பெற்றோர்களுடன் தன் வீட்டு நாய் குட்டி மகிழ்ச்சியுடன் விளையாடுவதையும் பார்த்த அவள் தன் வீடுதான் உண்மையில் கோல்டன் வீடு என்றும் அதுமட்டுமல்ல அங்கு மகிழ்ச்சி தவழ்வதையும் உணர்ந்தாள். இப்போதுதான் அவள் பெற்றோர் சொன்ன உண்மை அவளுக்கு உரைத்தது.அந்த சிறு பெண் பார்த்த கோல்டன் வீடுதான் அந்த பாழடைந்த அமெரிக்கா அன்பும் மகிழ்ச்சியும் தவளும் இடம்தான் தமிழகம்.

இதுதான் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் மட்டுமல்ல எல்லா தமிழர்களின் கதையும் கூடஆனால் அந்த அழகான கோல்டன் வீட்டை அம்மா ஜெ அழங்கோலமாக மாற்றி உங்களை அழவைத்தால் அதற்கு இந்த மதுரை தமிழன் பொறுப்பல்ல

14 comments :

 1. எப்பவுமே தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சிதானே?

  ReplyDelete
 2. அருமையான கதை
  எட்டி நின்று பார்த்தால் எல்லாம் அழகுதான்
  ஒட்டி வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்
  என்பதை மிக அழகாகவிளக்கிப் போகிறது
  உங்கள் பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்ன சொல்வதென்று தெரியவில்லை?

  ReplyDelete
 4. States இல் இருந்து கொண்டு பார்த்தால் நாங்கள் இங்கு அழுது கொண்டிருப்பது உங்களுக்கு காமெடியாகதான் தெரியும்...

  ReplyDelete
 5. கடைசி வரிகள் நச் நச் நச்

  ReplyDelete
 6. மூதறிஞர் ராஜாஜி சொன்னது:அயல் நாட்டில் எல்லாம் கிடைக்கும் .சந்தோஷத்தைத்தவிர.

  ReplyDelete
 7. @லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு வரியில் சொன்னதை நான் கதையாக சொல்லி உள்ளேன் அவ்வளவுதான். நன்றியம்மா

  ReplyDelete
 8. @ ரமணி சார் நீங்கள் பதிவு எழுதினாலும் சரி பின்னுட்டம் இட்டாலும் சரி எல்லாவற்றிலும் கவித்துவமாக இருப்பதோடு அல்லாமல் கருத்தோடும் இருக்கிறது

  ReplyDelete
 9. @டாக்டர்.கந்தசாமி அவர்களே உங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. உங்களைப் போல உள்ள பெரியவரகளிடம் இருந்துதான் இந்த கதையின் அனுபவத்தை கற்று கொள்கிறோம்.அதானல் இந்த கதையில் இருந்து நீங்கள் கற்று கொள்ளவதற்கு ஓன்றுமில்லை.

  ReplyDelete
 10. @ அகிலா மேடம்
  நான் மற்றவர்களின் அழுகையை வைத்து காமெடி பண்ணவில்லை. நான் சொல்ல வந்தது அமெரிக்காவில் நாங்கள் அழுவதை தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

  ReplyDelete
 11. @சூர்ய ஜீவா
  ///கடைசி வரிகள் நச் நச் நச் ////
  ஜீவா நச் நச் என்று நீங்கள் சொன்னது அம்மா போடப் போகும் புது "வரி"களை பற்றி தானே???

  ReplyDelete
 12. @கோமா
  எங்களுக்கு எல்லாம் அயல்நாடு என்பது இந்தியாதான். அங்கு வந்துவிட்டு மாற்றங்களை பார்த்து ஆச்சிரியப் பட்டு போவதும் நாங்கள் தான்.
  இங்கு எங்களுக்கு கிடைப்பது என்பது சுத்தமும் பொது இடங்களில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்வது எனபது மட்டும்தான் அதிலும் இப்போது ஏசியா மிடில் ஈஸ்ட் நாடுகளில் இருந்த வந்த மக்களால் அதுவும் மாறி கொண்டிருக்கிறது

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு. நன்றி. தமிழகம் அழகிய வீடுதான்.

  ReplyDelete
 14. @சாகம்பரி வரவிற்கு நன்றி
  தமிழகம் அழகிய தமிழகம்தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சென்னை இப்போது என் பார்வைக்கு தமிழகமாக இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog