உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 14, 2018

சரியான நம்பகத்தன்மையான மருத்துவ தகவல்களை ஆன்லைனில் அறிவது எப்படி

@avargalUnmaigal
சரியான நம்பகத்தன்மையான மருத்துவ தகவல்களை ஆன்லைனில் அறிவது எப்படி

நாம் நமக்கு தேவையான  ஹெல்த்  மற்றும் மருத்துவ  சம்பந்தமான தகவல்களை  உலகளாவிய இணைய தளங்களில் தேடி  படிக்கிறோம். அப்படி படிக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையான தகவல்கள் இல்லை .நூற்றுக்கு 95 சதவிகத தகவல்கள் எந்த வித ஆதாரமின்றி எழுதப்பட்டதாகவே இருக்கிறது... அல்லது சிலர் தாங்கள் தயாரித்த மருத்துவ பொருட்களை விற்பனை செய்ய   பல ஆதாரம் இல்லாத தகவல்களை கொண்டு கட்டுரைக்கள் எழுதி வெளியிடுகின்றனர்... மேலும் பல கத்துகுட்டி டாக்டர்கள் சமுக இணையதளங்களில் தங்களை தொடரும் ஆட்களுக்கு இலவச ஆலோசனைகள் என்ற பேரில் பல மருத்துவ குறிப்புகளை அள்ளி விடுகின்றனர்.. நாம் தகவல்களை தேடும் போது குப்பைகள் போல ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.

அப்படி இருக்கையில் நமக்கு தேவையான மருத்துவம் சார்ந்த   நம்பகமான தகவல்களை இணையத்தில் நாம்  எங்கிருந்து பெறலாம். எந்த இணையதளம் ஆதராப்பூர்வமான நம்பிக்கையான தரமான தகவல்களை தரும் டாப்  ரேட்ட் தளங்களை top-rated sites  எவை  என்பதை பற்றி நான் இணையத்தில் அலசியபோது கிடைத்த தகவல்களை உங்களுக்கு இங்கே தருகின்றேன்


எந்த இணைய தளங்கள்  ஹெல்த் மற்றும் மருத்துவம்  சம்பந்தப்பட்ட சரியான தகவல்களை தருகின்றன என்று பார்க்கும்  போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அந்த தளங்கள் அமெரிக்க அரசாங்கத்தால் ஸ்பான்சர் செய்ய்பட்டு இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும் அது போல அந்த தளங்கள் லாப நோக்கின்றி செயல்படும் நிறுவனங்களின் தளமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அல்லது யூனிவர்சிட்டி, மெடிக்கல் துறையில் இருந்து வெளிவந்த தகவல்களா என்றும் பார்க்க வேண்டும்.

லாப நோக்கில் செயல்படும் நிருவன தளங்களில் நாம் மிகவும் நம்பகமான தகவல்களை பெற முடியாது காரணம் அவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் பல தவறான தகவல்களை திரித்து சொல்லி தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முயல்வார்கள்...


சரி எந்த தளங்கள் சரியானவை உண்மையான தகவல்களை தருகிறது என்பதை அறிய அந்த தளத்தின் கீழே சிவப்பு மற்றும் நீல "HONCODE" முத்திரை இருக்கிறதா என்று  பார்க்கவும், அப்படி இருந்தால்  இது நம்பகமான தகவலைக் கொண்டுள்ளது என்று  Health On the Net Foundation மூலம் அங்கிகரிக்கப்பட்டது... ஆனால் அமெரிக்க அரசு ஸ்பான்சர் செய்யும் தளங்களில் இந்த முத்திரைகள் இருப்பதில்லை. அதனால் நாம் செல்லும் தளங்களில் About us எங்களைப் பற்றி"  என்பதை க்ளிக் செய்து பார்த்தால்  அமெரிக்க அரசு ஸ்பான்சர் செய்ததா அல்லது Health On the Net Foundation மூலம் அங்கிகரிக்கப்பட்டதா என்ற தகவல் நமக்கு தெரியவரும்


சரி இப்போது HONCODE என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம் .விரிவான தகவல்களுக்குக் இங்கே க்ளிக் செய்யவும் https://www.hon.ch/HONcode/
முக்கியமான ஹெல்த் மற்றும் மருத்துவ சம்பந்தமான பிரச்சனைகளை பற்றி வரும்  மருத்துவ மற்றும் சுகாதார வலைத்தளங்களின் நம்பகதனமையை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தும் ஒரு நிறுவனம்தான் நெட் ஃபவுண்டேஷன் கோட் ஆப் ஹேண்ட்கோட் (HONCODE)

HON நிருவனம் வழங்கும் சான்றிதல், மனித சுகாதாரம் பற்றி  ஆன்லைலில் வரும் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி இணையதளங்களில்  வரும் தகவல்கள் சரியானதா என்று பார்த்து சான்றிதழ் அளிக்கிறது

இணையம் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. வலை சேவையக மென்பொருளின் கிடைப்பதன் மூலம், எவரும் ஒரு வலைத் தளத்தை அமைக்கலாம், பின்னர் எந்த வகையான தகவல்களையும் வெளியிட முடியும் என்பதுதான் பிரச்சனை

பல தளங்களில் கொடுக்கப்படும் தகவல்களுக்கான ஆதரார்பூர்வமான தகவல்கள் .ஆதாரங்கள் ஆராய்ச்சி ஆவணங்கள் ஏதும் இருக்காது
அதனால் வெளியீட்டாளரின் நம்பகத்தன்மையை மதிப்பிடுதல் செய்தல் மற்றும் நெட்டிலிருந்து து பெறப்பட்ட ஆவணத்தின் அத்தியாவசியமான மற்றும் துல்லியத்தன்மையை மதிப்பீடு செய்தல் என்பது கேள்விக்குறியதாக இருப்பதால் இந்த நிறுவனம் HONCODE அதை சரிபார்த்து சர்டிபிகேட் அளிக்கிறது. இது லாப நோக்கமின்றி செயல்படும் ஒரு நிறுவனம் . இதற்கும அரசாங்கத்திற்கும்  சம்பந்தமில்லை.

நல்ல ஆரோக்கியமும் மருத்துவ தகவலும் எல்லா நேரத்திலும் மாறி வருகின்றன என்பதை அறிந்திருங்கள், அது தற்போதையதுதான  என்பதை உறுதி செய்ய வெளியிடப்பட்ட தேதியை சரிபார்க்கவும். மேலும், நீங்கள் மருத்துவரைப் பார்ப்பதற்கு முன் ஆன்லைனில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தால், நீங்கள் தகவலைப் பெறும் தளம் உட்பட நீங்கள் அறிந்த தகவல்கள் அனைத்தையும் ஒரு காகிததில் எளிதியோ அல்லது பிரிண்ட் செய்து எடுத்து கொண்டு அதை நீங்கள் பார்க்கும் மருத்துவர் சொலவதோடு ஒப்பிட்டு  மதிப்பாய்வு செய்யலாம்.

(Top Health Sites )சிறந்த சுகாதார தளங்கள்


நம்பகமான, நம்பகமான, நடுநிலையான உடல்நலம் மற்றும் மருத்துவ தகவலை வழங்குவதற்கான சிறந்த வலைத்தளங்கள் டஜன் கணக்கானவை என்றாலும், இங்கு   நான்  செலக்டிவ்வாக சில தளங்களை உங்களுக்குஅறிமுகப் படுத்துகிறேன்


Medlineplus.gov:    இது National Institutes of Health  நேஷன்ல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் மற்றும் U.S. National Library of Medicineயு.எஸ். நேஷனல் லைப்ரரி ஆப் மெடிசன் ஆகிய துறைகளால் ஸ்பான்சர் செய்யப்பட்டு நடத்தும் ஒரு தளம்.

 மெடிலைன் ப்லஸ்  தளத்தில் 900 க்கும் அதிகமான நோய்கள் மற்றும் அதன் நிலைமைகளை "ஹெல்த் டாபிக்ஸ்" பிரிவில்,  நம்பகமான தகவல்களையும் ஆதாரங்களுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது.

அதுமட்டுமல்லாமல்  மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் , ஒரு மருத்துவ கலைக்களஞ்சியம் மற்றும் மருத்துவ அகராதி, medical encyclopedia and medical dictionary, tutorials) பொதுவான நிலைமைகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய பயிற்சிகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், கூடுதல் மற்றும் மூலிகைகள் பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவ சோதனைகளுக்கு இணைப்புகளை வழங்குகிறது. இங்கு  சீனியருக்கான குறிப்பிட்ட சுகாதார தளமும் இருக்கிறது (nihseniorhealth.gov) வழங்குகிறது, இது வயது தொடர்பான சுகாதார தகவலை எளிதாக்குகிறது.

MayoClinic.com: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மாயோ அறக்கட்டளையின் சொந்தமானது, இந்த தளம் மேயோ கிளினிக்கிலிருந்து 3,300 மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்படுகிறது, நூற்றுக்கணக்கான நோய்கள் மற்றும் சூழ்நிலைகளில் ஆழமான, எளிதான புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை வழங்குகிறது , மருந்துகள் மற்றும் கூடுதல், சோதனைகள் மற்றும் நடைமுறைகள். இது சுகாதார வலைப்பதிவுகள், நிபுணத்துவ பதில்கள், வீடியோக்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்களுக்கான இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான சுகாதார நிலைமைகளுக்கும் விரைவான பதில்களுக்கு ஒரு நிஃப்டி "சிம்பம் செக்கர்"(Symptom Checker) டூல்  மற்றும் "முதல் உதவி வழிகாட்டி"First-Aid Guide ஆகியவற்றை வழங்குகிறது.

https://www.health.harvard.eduHarvard Healthகுறிப்பிட்ட நோய்களுக்கான  தளங்கள்
குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே என்று  பல தளங்களும் உள்ளன. புற்றுநோய், இதய நோய், நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய்க்கான மருத்துவ நூலகம் சங்கம் பட்டியலிடப்பட்டுள்ள சில சிறந்த தரவரிசை தளங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய்: அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் (cancer.org), தேசிய புற்றுநோய் நிறுவனம் (புற்றுநோயியல்), புற்றுநோய் ஆன்லைன் வளங்கள் சங்கம் (acor.org) மற்றும் புற்றுநோய் பராமரிப்பு (cancercare.org).

இதய நோய்: அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (americanheart.org), நேஷனல் ஹார்ட், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் (www.nhlbi.nih.gov) மற்றும் கான்ஜெனிட்டல் ஹார்ட் தகவல் நெட்வொர்க் (tchin.org).

நீரிழிவு நோய்: அமெரிக்க நீரிழிவு சங்கம் (diabetes.org), தேசிய நீரிழிவு கல்வி திட்டம் (ndep.nih.gov), ஜோஸ்லின் நீரிழிவு மையம் (www.joslin.harvard.edu), மற்றும் நீரிழிவு கண்காணி (diabetesmonitor.com).

அல்சைமர் நோய்: அல்சைமர் அசோசியேசன் (https://alz.org/), அல்சைமர் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான (alzinfo.org) ( Alzheimers.gov.), மற்றும் அல்ஜைமர்ஸ்.


 இந்த பதிவு நீண்டு விடும் என்ற காரணத்தால் இதோடு நிறுத்தி மற்றொரு பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : அரசியல் தவிர்த்து பல பயன் உள்ள பதிவுகளை வெளியிடுவேன் என்று வாக்களித்தபடி இந்த பதிவை வெளியிடுகிறேன். யாராவது ஒரு சிலராவது பயன் அடைவார்கள் என நம்புகிறேன்

10 comments :

 1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 2. பலரும் ஆன்லைனில் சில நோயின் அறிகுறிகளைப் பார்த்து நோய் குறித்து அதிகம்கவலை கொள்கின்றனர் ஒரு நல்ல பதிவுக்கும் பொங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 3. சிறந்த வழிகாட்டல்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வணக்கம் சகோததரே!

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  உபயோகமான தகவல்.நன்றி.

  ReplyDelete
 6. நிஜமாகவே நல்ல பயனுள்ள பதிவு. எடுத்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. மச்சான் உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று
  முகநூலில் பகிர்கிறேன்

  ReplyDelete
 8. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  ReplyDelete
 9. செம பதிவு மதுரை தமிழன்....

  கீதா: நான் மேயோ தான் பார்ப்பது வழக்கம்...அது போல் மற்றோன்று...மொபைலில் அடிப்பதால் லிங் தர முடியல...கணினியில் அது எழுந்ததும் அடிக்கைறேன்....ஹார்வேர்டும் பார்ப்பதுண்டு....ரொம்ப நல்ல பதிவு சகோ

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog