அந்த காலத்திலே.....
இந்த பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா உடனே ஒரு குருப் இப்படி பதிவிட ஆரம்பிச்சுடுவாங்க.... அந்த காலத்துல பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா ஒவ்வொருத்துவரும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்புவாங்க அதை எதிர்பார்த்து காத்து இருப்பது மிக சந்தோஷமாக இருக்கும் அப்படி வந்த வாழ்த்து கார்ட்டை பார்த்து பார்த்து சந்தோஷம் அடைவோம்.. இப்படி எல்லாம் சொல்லி பெருமை பேசி ஆனால் இந்த காலத்துல அப்படி எல்லாம் இல்லை எல்லாம் வாட்ஸ் அப்பிலே மெசேஜ் அனுப்புறாங்க அதுவும் பார்வ்ட் மெசேஜ்சாகவே இருக்கிறது என்று புலம்புகிறார்கள்
இந்த பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா உடனே ஒரு குருப் இப்படி பதிவிட ஆரம்பிச்சுடுவாங்க.... அந்த காலத்துல பொங்கல் பண்டிகை வந்துடுச்சுன்னா ஒவ்வொருத்துவரும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்புவாங்க அதை எதிர்பார்த்து காத்து இருப்பது மிக சந்தோஷமாக இருக்கும் அப்படி வந்த வாழ்த்து கார்ட்டை பார்த்து பார்த்து சந்தோஷம் அடைவோம்.. இப்படி எல்லாம் சொல்லி பெருமை பேசி ஆனால் இந்த காலத்துல அப்படி எல்லாம் இல்லை எல்லாம் வாட்ஸ் அப்பிலே மெசேஜ் அனுப்புறாங்க அதுவும் பார்வ்ட் மெசேஜ்சாகவே இருக்கிறது என்று புலம்புகிறார்கள்
நான் கேட்கிறேன் அந்த காலத்துல அனுப்பியது மாதிரி இந்த காலத்தில் நீங்கள் வாழ்த்து அட்டைகள் அனுப்ப கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கா அல்லது அப்படி அனுப்பினால் உங்களை சமுகத்தில் இருந்து விலக்கி வைத்து விடுவார்களா அல்லது வாழ்த்து அட்டைகளை அனுப்பினால் போஸ்ட் ஆபிஸ் அதை டெலிவரி பண்ணாது என்று யாராவது சொன்னார்களா? இல்லையேதானே அப்படி ஏதும் இல்லாத போது நீங்கள் முன்பு போல வாழ்த்து அட்டைகளை அனுப்பாமல் குறை சொல்லிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயமுங்க.
அது போல அந்த காலத்துல நாங்க தெருவிலதான் ஒடியாடி விளையாடுவோம் ஆனால் இந்த காலத்து புள்ளைங்க அப்படி எல்லாம் இல்லை எல்லாம் கம்பியூட்டர் கேம்ஸ்னு சொல்லி வீட்டுலே அடைந்து கிடக்கிறார்கள் என்று இன்னொரு புலம்பல்....
அதானே... இதுவும் சரிதான்.
ReplyDeleteஅதானே :) நல்ல கேள்வி கனம் கோர்ட்டார் அவர்களே ..எங்க இங்கிலாந்தில் இன்னமும் கிறிஸ்மஸ் கார்ட்ஸ் வருஷாவருஷம் ஒவ்வொருவீட்டுக்கும் தரும் பழக்கம் இருக்கு இது இந்த காலம் தானே :) நானே சில நட்புகளுக்கு தீவாளி மற்றும் பொங்கல் கார்ட்ஸ் செஞ்சு அனுப்பறேன் எல்லாம் நம்மக்கிட்டதான் இருக்கு செய்யணும்னு நினைச்சா செய்ய்யலாம் ..
ReplyDeleteகார்ட்ஸ் பற்றி புலம்பறவங்க எத்த்னை பேருக்கு கார்ட் அனுப்பினாங்கன்னு கேளுங்க முதலில் .கார்ட் கடைல கிடைக்காட்டி வீட்லயே பிரிண்ட் பண்ணியும் அனுப்பலாமே
அப்படி யாரும் சொல்லலை..மனமுண்டானால் இடம் உண்டு. உங்க அட் ரஸ் தாங்க அனுப்பிவிடலாம். நாங்க தயார். அஞ்சு சொன்ன மாதிரி இங்கு (ஜேர்மனி) இப்பவும் கார்ட்ஸ் அனுப்புற வழக்கம்,பழக்கம் இருக்கு.. அனுப்புறாங்க. பாங்க், இன்சூரன்ஸ்,ஆன்லைன் சொப்பிங்காரங்க, amazon இவங்களெல்லாம் அனுப்புறாங்க 😀 😀
ReplyDeleteஇங்கும் விளையாடுறாங்க புட்பால். ஓடியாடி
நிஜம்தான் பாட்டி. 😀 😀
இந்த மாதிரி அட்வைஸ் அந்த காலத்துலன்னு சொல்லி புத்தி சொல்லுற ஆளு அன்னிக்கும் இருந்தாங்க
ReplyDeleteகாலத்துக்கு ஏற்றமாதிரி நாமதான் மாற்றிக்கொள்ளுகின்றோம்))) ரோட்டில் பெண்பின்னால் சுற்றிய அனுபவம் அதிகம் இருக்கு போல?)))
ReplyDeleteநான் என்ன கார்ட் அனுப்ப மாட்டேன் என்றா சொல்றேன்:) ஆரும் அட்ரஸ் தர மாட்டினமாம்:) அப்போ எப்பூடி கார்ட் அனுப்புவது:)..
ReplyDeleteபொங்கல் மட்டுமில்ல ட்றுத்:) எதை ஆரம்பிச்சாலும்.. அந்தக் காலத்தில எனத்தான் ஆரம்பிப்பினம்..
ஓ ரோட்டிலதான் ஃபலோ பண்ணுவீங்களோ?:) அவரா நீங்க?:)
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteபண்டிகைக்குக் கார்ட் அனுப்பும் பழக்கம் இங்கே ஜேர்மனியில் இன்னும் இருக்கு!
விதவிதமான கார்ட்ஸ் வாங்கலாம். அழகென்றால் அப்படி அழகாக இருக்கும்!
பிள்ளைகளில் இருவிதமான பழக்க வழக்கங்களும், வீட்டிலேயே இருந்து கணினி விளையாடுவதும், வெளியே நண்பர்களுடன் விளையாடும் பழக்கமும் சில சிறுவர்களிடம் இங்கு காண்கிறேன்!
தாய் தந்தையரின் பங்கு இங்கே முக்கியமானது.
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!
அந்தக் காலத்திலே இந்த மாதிரிப் பதிவைக் கூட இன்லேண்ட் லெட்டரில்தான் எழுதுவார்கள். இப்போ பிளாக்கில் எழுதுகிறார்கள்! ஹா... ஹா... ஹா....
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அதானே!!!!! நல்லா சொன்னீங்க!!! ஸ்ரீராம்!!
Deleteகீதா
அக்காலத்தில் அன்பு இணக்கமாக பரிமாறப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழ்.
ReplyDeleteசரியான கேள்விதான்...நாம் புலம்புவதை விடச் செயல்களில் காட்டலாம்தான் இல்லையா...
ReplyDeleteஆனா இப்பவும் பசங்க வெளில விளையாடறவங்க இருக்காங்கதான்...எங்க வீட்டுப் பக்கதுல எல்லாம் சாதாரண மக்கள்தான் இருக்காங்க. கம்ப்யூட்டர் லாம் அவ்வளவா இல்லாதவங்க...இருக்கற வீட்டுலயும் கூடப் பசங்க வெளில விளையாடறாங்க....என்ன டிவி சில சமயம் கெடுக்குது...அதுக்கும் பெற்றோர்தான் காரணம்...
கீதா
அந்த ஆனந்தவிகடன் ஜோக் 60ல் வந்ததா? அல்லது உங்க வேலையா இது....எப்படி இருந்தாலும் நலலருக்கு...60 லயே பாட்டி கேட்டுட்டாங்களா?!!! அட்டைப்படம் மட்டும் ஆவி...அதுல அந்தக் கமென்ட் உங்களோடதோ??!!!! சூப்பர்!!ரசித்தேன்
ReplyDeleteகீதா
ரசித்தேன். ஆனந்தவிகடன் ஜோக் பற்றிய கீதா மேடம் கருத்தை வழிமொழிகின்றேன்.
ReplyDelete