Thursday, January 25, 2018

நாட்டு நடப்புகளும் பேஸ்புக்கில் வந்த கிறுக்கல்களும்

#ரஜினி என்று எனது அரசியல் ஆன்மிக வழியில் இருக்கும் என்று சொன்னாரோ அதன் பிறகு தமிழகத்தில்  ஆன்மிகம் சாக்கடையாக மாறி நாறிக் கொண்டிருக்கிறது




இந்து மதப் பெரியவரான #விஜேயேந்திரர் தியானம் செய்யும் போது அமைதி காத்து அந்த மதப் பெரியவர் தியானம் செய்து முடிக்கும் வரை அமைதிகாப்பதுதான் சபைக்கு அழகு ஆனால் அவரை கூட்டி வந்து அசிங்கப்படுத்திருக்கிறார்கள் விழாவை நடத்தியவர்கள். அவர்கள் (ஹெச்.ராஜா) இப்போது பதில் ஏதும் சொல்லாமல் தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்# நல்லா இருப்பிங்கடே உங்களை அந்த ஆண்டாள் கூட மன்னிக்கமாட்டார்


விஜேயேந்திரருக்கு நாம் கண்டணம் தெரிவிப்பதற்கு பதில் பாராட்டதான் வேண்டும் காரணம் அவர் தியானம்செய்ததால் தான் குருமுர்த்தி ஹெச்.ராஜா, தமிழிசை போன்றவர்களின் வாய் இப்போது முடிக்கிடக்கிறது. இவர்களி வாயை மூட செய்யும் வலிமை இவருக்கு மட்டுமே இருக்கிறது

கலைஞர் இப்போது பேசக் கூடிய நிலையில் இருந்தால் உடன்பிறப்பே விஜேயேந்திருக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டாம் கொடும்பாவி எரிக்க வேண்டாம் அவரின் படத்தின் மீது சாணி அடிக்க வேண்டாம் அவரின் சொத்துகளுக்கு சேதம் அளிக்க வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்.அதன் பின் உடன்பிறப்புகள் கலைஞரின் மொழியை புரிந்து செயல்பட்டு இருப்பார்கள் ஹும்ம்


பெட்ரோல் விலை இப்படி உயர்ந்தால் தீக்குளித்து சாவுபவர்களின் நிலமை என்னாவது அதை யோசித்தாவது மத்திய அரசு விலையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்



மோடியைவிட மிக தில்லானவர் இலங்கை அதிபர்தான் அவர் தான் இந்தியாவின் மீது அடிக்கடி சர்ஜிகல் அட்டாக் பண்ணிக் கொண்டிருக்கிறார்


இனிவருங்காலங்களில் தமிழ்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் கல்வி நிறுவனங்கள்,அரசு துறை சார்ந்த நிகழ்வுகள்,  அரசு மற்றும் கல்வினிலையங்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் மட்டும் பாடப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றினாலே போதும் அதற்குரிய மரியாதை தானாகவே கிடைத்துவிடும்.

தற்போது  ஆட்சி செய்யும் அதிமுக அரசின் செயல்களை பார்க்கும் போது இனி எப்படியும் நம்மால் ஆட்சிக்கு வரவே முடியாது அதனால்  முடிந்த வரையில் சுரண்டிக் கொண்டு தெரிந்த  கூத்துக்களை பண்ணி விட்டு போவோம் என்கிற போக்கிற்க்கு அவர்கள் வந்து விட்டதாகவே தெரிகிறது.  அதுமட்டுமல்லாமல் அதிமுகவே அழிந்து போனாலும் பாஜக காலை நக்கி கொண்டே காலத்தை கழித்துவிடலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு புரியவில்லை பாஜகவும் தெருவிற்கு வரும் நேரம் வந்துவிட்டது என்று.


காஞ்சி மடத்துல வெறும்காலோட  உள்ள

பக்தர்களின் கூட்டத்தோட பூட்ஸ்காலோட இருக்கும் போலீஸின் கூட்டம்தான் இப்ப அங்கே அதிகமாக இருக்கிறதாம்..

நான் கருத்து எல்லாம் சொல்ல மாட்டேன் வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்லுவேன் குடியரசு தின வாழ்த்துக்கள் இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள் - இப்படிக்கு முதலமைச்சர் பதவிக்கு கனவு காணும் ரஜினி

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. பொறுப்புத்துறப்பு அருமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.