Thursday, January 4, 2018

@avargalunmaigal
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கான  விளக்கம்


சாக்கடையை சந்தமாக்க முடியாது. ஆனால் சந்தனத்தை சாக்கடையாக எளிதில் மாற்ற முடியும்.  அந்த முயற்சியில்தான் ரஜினிகாந்த ஆன்மிகத்தை(சந்தனத்தை) அரசியலில்(சாக்கடையில்) கலந்து ஆன்மீக அரசியல் செய்யப் போகிறார். அவர் செய்வதை பொறுமையாக பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் நாறப் போகிறாரா அல்லது மணக்க போகிறாரா  அல்லது சந்தனம் சாக்கடையாக போகிறதா என்று


ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி ஆட்சேபனை இல்லை வேறு  மாநிலத்துக்காரர் என்பதாலும் ஆட்சேபணை இல்லை.... இதுநாள் வரை எந்த வித பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காதவர் அல்லது போராடதவர்.. அல்லது தன் துறையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பெரிய நடிகர் என்பதால் சங்கத்திற்கு சென்று அதை தீர்த்து வைக்காதவர். இப்போது தீடீரென்று மக்களுக்காக பாடுபட போகிறேன் அதுவும் இப்போது அல்ல சட்ட மன்ற தேர்தல் வரும் போது நான் வருவேன் என்று சொல்லுவது எவ்வளவு கேவலமாக இருக்கிறது


எப்படி ஒரு விவசாயி நிலத்தை உழுது, விதை போட்டு, களைகளை புடுங்கி. தண்ணீர்  விட்டு வளர்த்து அதை அறுவடை செய்யும் நேரத்தில் ஒருவன் தீடிரென்று ஆன்மீக பெயரை சொல்லிக் கொண்டு அந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து  தனக்கே எல்லாம் என்று சொந்தம் கொண்டாடுவது போல இருக்கிறது


அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்ன ரஜினிகாந்த அதோட வாயை மூடிக் கொண்டிருந்தால் இவ்வளவு எதிர்ப்பை சந்தித்து இருக்கமாட்டார் ஆனால் அவர் ஆன்மிக அரசியல் என்று சொன்னதுதான் இவ்வளவு எதிர்ப்புக்கு காரணம்.. அதுமட்டுமல்லாமல் ஒரு சில மாதங்களில் கட்சியின் பெயரையும் கொடி மற்றும் சின்னத்தையும் அறிவிப்பேன் என்று சொல்லியும் உள்ளாட்சி தேர்தலுக்கு களம் இறங்க நேரம் குறைவு அதனால் சட்டமன்ற தேர்தலில் மட்டும் முதலில் போட்டியிடுவோம் அது வரை கட்சியை வளர்க்கவும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடவும் போறேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படியெல்லாம் சொல்லாததினால்தான் இப்ப சமுக இணைய தளங்களில் அவர் எல்லோரும் கழுவி ஊற்றுகிறார்கள்..


என்னைப் பொறுத்தவரை ரஜினி அரசியலுக்கு வரணும் அவர் வந்த பின் தமிழக மக்கள் அவர் பின்னால் நல்லா குத்து குத்துன்னு குதுறதுல அவர் மட்டும் மல்ல மக்களுக்காக போராடதவர் எவனுக்கும் அரசியலில் குதிக்க ஒரு பயம் வரணும்.. அப்படி தமிழக மக்கள் செய்யாவிட்டால் ரஜினி பொன்றவர்கள் தமிழக மக்களை நல்லா வைச்சி செய்வார்கள் அதுக்கு அப்புறம் குத்துதே குடையுதே என்று சத்தம் மட்டும் போடக்கூடாது


அன்புடன்
மதுரைத்தமிழன்
04 Jan 2018

6 comments:

  1. மிகச்சரியான கருத்து நண்பரே...

    ReplyDelete
  2. தமிழ்நாடு எதிர்கொள்ளப்போவதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  3. கட்சி அமைக்கப் போகிறவர் முதலில் அடித்தட்டு அரசியலை அல்லவா சந்திக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு கொள்ளமாட்டேன் என்பதுபயமோ மாநிலத்தேர்தலில் ஆன்மீக வாதிகளுடன் ஐக்கியமாகவும்வழி இருக்கிறது

    ReplyDelete
  4. நல்ல விளக்கம். கட்சியை ஆரம்பிபதற்கு முன்னால் செய்ய வேண்டிய ஆலோசனைகளை, இவர் தனது அறிவிப்பிற்குப் பிறகு ஒவ்வொரு முக்கிய புள்ளிகளாக பார்த்து வருகிறார். முன்னுக்கு வந்து நிற்பாரா அல்லது பின்னுக்கு போய் விடுவாரா என்பது இனிமேல்தால் தெரிய வரும்.

    ReplyDelete
  5. நல்ல கருத்து. தமிழக மக்கள் இன்னும் எத்தனை கட்சிகளைப் பார்க்க வேண்டிய கட்டாயமொ.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.