மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க......
நாம் ஆசைப்படுவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட நம்மிடம் இருப்பதில் கிடைக்கும் சந்தோஷம் அதிகமே
நாம் உடுத்தும் வேஷ்டியும் கைலியும்தான் மிக சௌரியமாக இருக்கும் சுகத்தையும் தரும். ஆனால் நாம் உயர் தர பிராண்ட் நேம் கொண்ட ஜீன்ஸ் சர்ட் போன்றவைகளை அணிய ஆசைப்படுவோம்..
நாம் உடுத்தும் வேஷ்டியும் கைலியும்தான் மிக சௌரியமாக இருக்கும் சுகத்தையும் தரும். ஆனால் நாம் உயர் தர பிராண்ட் நேம் கொண்ட ஜீன்ஸ் சர்ட் போன்றவைகளை அணிய ஆசைப்படுவோம்..
அது போல ரோட்டோர டீ கடையில் ஒரு சாயா குடித்து கொண்டு பஜ்ஜியை கடித்து கொண்டு நண்பர்களிடம் வாய்விட்டு சிரித்து பேசி மகிழ்வோம் ஆனால் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் உயர்தர மக்களுடன் உணவு அருந்த ஆசைப்படுவோம் .
அது போல தன்னந்த தனியாக அமைதியாக நீண்ட நடைபயணம் நமக்கு தரும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்பதும் நமக்கு புரியும். ஆனாலும் விலை உயர்ந்த கார் வாங்கி அதில் நீண்ட தூரம் பயணம் செய்ய ஆசைப்படுவோம்.
அது போல எங்கோ ஒரு ரேடியோவில் ஒலிக்கும் ஒரு பாடல் நம் முகத்தில் புன்னகை வரவழைக்கும்.. ஆனால் அதிக மெம்மரி கொண்ட ஸ்மார்ட் போனை வாங்கி அதில் நமக்கு பிடித்த நூற்றுக் கணக்கான பாடல்களை சேர்த்து வைப்போம் அல்லது அப்படி செய்ய ஆசைப்படுவோம்.
வீட்டில் உள்ள கண்ணாடியில் நம் முகம் பார்க்கும் போது கிடைக்கும் உண்மையான சந்தோஷத்திற்கு ஈடு இணையில்லைதானே.
ஆனாலும் ஆயிரம் செல்பி எடுத்து புரொபைலில் வைக்க ஆசைப்படும் மனம்.
இப்படிதான் நம்மிடம் இருப்பது மிகவும் சந்தோஷமளிக்கிறது என்
றாலும் நம் மனம் இல்லாதவற்றிற்கு ஆசைப்படும். இது விந்தையாக்தான் இருக்கிறது.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி நாம் ஆசைப்பட்டது எல்லாம் நமக்கு கிடைத்தாலும் நம்மிடம் இருப்பதில் கிடைத்த சந்தோஷம் நிச்சயமாக நாம் ஆசைப்பட்டதில் கிடைப்பது இல்லை.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி நாம் ஆசைப்பட்டது எல்லாம் நமக்கு கிடைத்தாலும் நம்மிடம் இருப்பதில் கிடைத்த சந்தோஷம் நிச்சயமாக நாம் ஆசைப்பட்டதில் கிடைப்பது இல்லை.
அன்புடன்
மதுரைத்தமிழன்
சிந்திக்க வைத்தது விடயங்கள்
ReplyDeleteத.ம.1
நம்ம இலையில உள்ள சாப்பாடே நல்லா இருக்கும், இருந்தாலும் பக்கத்துல இருக்குறவன் இலைய பார்க்கும் போது நாக்கும் ஊரும்.
ReplyDeleteஇல்லாத விஷயத்துக்கும், இழக்கப்போகும் விஷயத்திலும் இருக்கும் பற்று இருந்து கொண்டே இருக்கும் பொருளுக்கு இருக்காது என்பது உண்மை. ஒரு பொருளை அடையும் வரைதான் அவதி.
ReplyDeleteகண்ணாடி பழக்கமும், செல்ஃபி எடுக்கும் பழக்கமுமில்லை சகோ
ReplyDeleteமனித இயல்பு மதுரைத் தமிழன். பைபிள்ல கூட இது வருமே (தொலைந்த ஆட்டை நினைத்துத்தான் கவலைப்படுவான், அது மீண்டும் கிடைக்கும்போது அவன் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. தன்னோட இருக்கும் ஆட்டைப் பற்றி ரொம்ப சந்தோஷப்பட மாட்டான்).
ReplyDeleteஒரு பாடல் நினைவுக்கு வருகிறது...இல்லாததை நினைத்து வருந்திகிறான் அது எட்டாததை நினைத்துக் கொட்டாவி விடுகிறான் எல்லாம் மனதுள்ள இருக்க இன்பம்...
ReplyDeleteநல்ல பதிவு மதுரை..அடையும் வரைதான் அப்புறம் சலிப்புதான்...
ரொம்ப சரி சகோ மதுரையானந்தாவின்மொழி!!!! ரொம்ப ரொம்ப சரி!! எனக்கும் இந்த அனுபவம் உண்டு...
கீதா
துளசி: அட! மதுரை தமிழன்!!! அரசியலிலிருந்து மாறுபட்ட பதிவு! நல்ல பதிவு. பல சமயங்களில் ஆசைகள் நம்மை வீழ்த்தும்....ஸோ சிம்பிள் லைஃப் தான் நம்ம சாய்ஸ்....
ReplyDeleteகீதா: கண்ணாடி பார்க்கும் பழக்கம், செல்ஃபி எடுக்கும் பழக்கம், திரைபப்டங்கள்/பாடல்கள் ஒரு சில தவிர சேவ் செய்யும் பழக்கம் இல்லை விரும்பும் போது கேட்பதோடு சரி, காரில் செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லை (ட்ரைவ் செய்வது ரொம்பப் பிடிக்கும் அதுவும் ஒரு கலையாக....ஆனால் நடை மற்றும் ட்ரெக்கிங்க் ரொம்பப் பிடித்த விஷயம்..) சாதாரண உணவகம் தான்...ஏனோ தெரியவில்லை பெரிய ஹோட்டல்கள் ஈர்ப்பதில்லை....குறிப்பாக ஃபைவ்ஸ்டார்..க்ரான்ட் ஹோட்டல்கள்...ஈர்ப்பதில்லை..ஒரு வேளை பழக்கம் இல்லாததால் கூச்சம் காரணமாக இருக்குமோ....அப்புறம் ட்ரெஸ்ஸும்..அப்படியே... சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு...
கண்ணாடிமுன் நின்று தன் அழகு பார்க்காதோர் உண்டோ நல்லது இது விருப்பம் இது என்று தெரிந்தும் இல்லாதவற்றுக்கும் கிடைக்காதவற்றுக்கும் ஏங்குவது மனித இயல்புபோல் இருக்கிறது
ReplyDeleteநல்ல சிந்தனை. இல்லாதது நாடும் மனம் இயல்பு.
ReplyDeleteஇக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்களே அதுதான் மனித குணம்.
ReplyDelete