Saturday, January 13, 2018

அமெரிக்காவிலும் இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன

பொதுவாக இந்தியாவில் ஏதாவது ஒரு நிகழ்வு  நடை பெறும் போது அதை நாம் பரபரப்பாக பேசுவோம் இன்னும் இந்தியா முன்னேறவில்லை . தலைவர்கள் மோசம்  சட்டங்கள் மோசம் என்று. உதாரணமாக இறந்த மனைவியை எடுத்து செல்ல ஹாஸ்பிடல் நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால் மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவரை பற்றிய செய்தி வைரலாக பரவி அந்த நிகிழ்வை  கண்டு அதிரிந்து மக்கள் அரசாங்கத்தை காறி துப்பினர் கழுவு ஊற்றினர்.   அதை அறிந்து அரபு மன்னர் ஒருவர் அந்த குடும்பத்திற்கு உதவி செய்தார் என்று எல்லாம் செய்திகள் படித்து அறிந்தோம்..



அந்த நிகழ்வுக்கு ஈடாக அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வால் ஒரு வீடியோ வைரலாக பரவி களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற சம்பவ்ங்கள் ஆங்காங்கே நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் என்ன அது வெளி  உலகிற்கு தெரிந்த பின் அந்த நிகழ்விற்கான காரணமானவர்கல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது


அமெரிக்காவில் உள்ள பால்டிமோரில்  ஒரு பெண்மணி ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆட்களால்  இரவில் நடுங்கும் குளிரில்  ஹாஸ்பிடலுக்கு வெளியே விடப்பட்டார். அந்த நேரத்தில் அவர் அணிந்து இருந்தது  காலில் சாக்ஸும் ஹாஸ்பிடலில் அணியும் அங்கியும்தான்..

அப்படி  அவரை வெளியில் விடுவதை பார்த்தா ஒருத்தர் அதைவீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோதான் வைரலாகி அமெரிக்காவிலும் இப்படி ஒரு அசிங்கம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டி இருக்கிறது.


அமெரிக்காவில் யாருக்காவுது உடல்நிலை மிகவும் சரியில்லை என்று சென்றால் அவரிடம் பணம் இருக்கிறதோ அல்லது இன்சுரன்ஸ் இருக்கிறதோ இல்லையோ  ஆனால் அவர்களுக்கு சிசிச்சை மறுக்காமல் அளிக்க வேண்டும் என்பது சட்டம். அதன்படி இந்த பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அந்த சிகிச்சைக்குபின் அதிக நாட்கள் அவர்களால் வைக்க முடியாததால் அவரை அழைத்து செல்ல யாரும் இல்லாததால் அவரை இரவு நேரத்தில் ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆட்கள் அவரை வீல் சேரில் வைத்து வெளியே குளிரும் இரவில்  தெருவில் கொண்டு விட்டுவிட்டனர்.






நல்ல வேளை அதை பார்த்த ஒருவர் அதை வீடியோ எடுத்ததுமட்டுமல்லாமல் உடனே 911 யை அழைத்து போலீசை வரவழைத்து அதஏ ஹாஸ்பிடலில் கொண்டு சேர்க்க வைத்துவிட்டார்.


இப்போது அந்த ஹாஸ்பிடல் நிர்வாகம் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்  அந்த நிகழ்விற்கான காரணமானவர்கள் மிது  நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் அதுதான் இங்கு கிடைக்கும் நீதி


அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. நல்ல உள்ளங்கள் இன்னும் இருப்பதால் தான் போலும் அந்த அம்மணி மீண்டும் மருத்துவம் பெறமுடிகின்றது அமெரிக்காவில்.

    ReplyDelete
    Replies

    1. நல்ல உள்ளங்கள் உலகெங்கிலும் இருப்பதால்தான் பலரும் பயன் பெற முடிகிறது.. நல்லலெண்னம் கொண்ட தலைவர்கள் டாக்டர் ஆசிரியர்கள் காவலர்கள் பொதுதுறை அதிகாரிகள் பொதுமக்கள் இப்படி பலரை சொல்லிக் கொண்டே போகலாம் அவர்கள் மட்டும் இல்லையென்றால் உலகம் என்றோ அழிநதிருக்கும்

      Delete
  2. அமெரிக்காவில் எனக்குப் பிடிக்காத விசயம் இந்த இன்சூரன்ஸ் தான், ஒருவருக்கு மிகவும் சீரியசான வருத்தமாம், அவரின் இன்சூரன்ஸ் தொகை 200 ஆயிரமாம், அது முடிந்து விடவே, வைத்தியத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம்... இது என்ன கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. இன்சுரன்ஸ் என்பது இங்கு ஒரு பிரச்சனைதான் .. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது பணம் இருக்கோ இல்லையோ இன்சுரன்ஸ் இருக்கோ இல்லையோ ஆனால் சிரியஸான நிலமையில் வரும் யாருக்கும் எந்த கேள்விகள் கேட்காமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் சட்டம் ஆனால் உயிரை காப்பாற்றிய பின் அதன் பின் தொடரந்து ஹாஸ்பிடலில் வைத்து சிகிச்சை அளிப்பதா அல்லது வீட்டிற்கு அனுப்புவதா என்பது இன்சுரன்ஸை பொருத்தது.. இந்தியாவில் மிக சிரியாஸான நிலையில் பேஷண்ட் வந்தாலும் சிகிச்சைக்குறிய முன்பணத்தை செலுத்தாவிட்டால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள்

      Delete
    2. இந்த ஹெல்த் அட்டை கலாச்சாரம் சென்னையிலேயே பரவிக்கொண்டிருக்கிறது.

      Delete
  3. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. அழகிய கவிதையோடு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி சீராளன்

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

      Delete
  4. அநியாயம் நடக்க இடம் தடையில்லை போலும். காசு.... காசு.... காசு...

    ReplyDelete
    Replies
    1. பணம் என்பதைவிட மனிதநேயம் குறைந்து வருகிறது என்பதுதான் முக்கிய காரணமாக கருதுகிறேன்

      Delete
  5. என்ன கொடுமை!! நீங்கள் சொல்வது சரிதான்..மனிதநேயமும் உயிரின் மதிப்பும் அழிக்கப்படுகிறது.. :(

    இன்சூரன்ஸ்!!!! மருத்துவம்!!! ஐயோ ஓடிவிடலாம் என்ற நிலையில் தான் நானும்!! எனக்கென்னவோ நம்ம ஊரு தேவலை என்றே பல நேரம் தோன்றுகிறது..

    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வாழ்த்திற்கு நன்றிம்மா.........உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...

      இங்குள்ள நிலமைகண்டு ஊருக்கு போக நினைக்க வேண்டாம் ஊரு இதை விட நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருக்கிறது....இங்கிருந்துவிட்டு நீங்கள் வேண்டுமானல் ஊருக்கு செல்ல நினைக்கலாம் ஆனால் உங்கள் குழந்தைகள் அப்படி நினைக்கமாட்டார்கள்

      Delete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    மாப்ஸ் எங்கே இருந்தாலும் இது இயல்புதான்.
    ஆனால் ஆறுதலான விஷயம் உடனடி நடவடிக்கை

    ReplyDelete
  7. :( இக்கரைக்கு அக்கரை பச்சை .உயிரைவிட பணமா முக்கியம் ?
    நைஜீரியா நாட்டு பெண்மணி அமெரிக்கா வுக்கு நைஜீரியாவில் இருந்து மெடிக்கல் ட்ரீட்மென்டுக்கு போனார் ஆனா அமேரிக்கா உள்ளேயே விடலை அங்கே மீண்டும் நைஜீரிய திரும்பும் வழியில் திடீர்னு பிரசவ வலி எடுக்க ஹீத்ரூவில் இறக்கப்பட்டார் .quadruplets பிறந்து இரண்டு சாமிகிட்ட போய் மற்ற இரண்டு ஸ்பெஷல் கேரில் சி 500,000 பவுண்ட்ஸ் கட்டணுமாமே அந்த லேடி அதுக்கு இங்குள்ள சேரிட்டிஸ் அரேஞ் பன்றாங்க .நல்ல உள்ளங்கள் இல்லைனா அவர் நிலை அதோகதிதான் ,

    எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கு ஆனா வெளி நாட்டில் மனித நேயம் மிக்கோர் அதிகம் இருப்பதால் உயிர்கள் பிழைக்குது

    ReplyDelete
  8. :( இக்கரைக்கு அக்கரை பச்சை .உயிரைவிட பணமா முக்கியம் ?
    நைஜீரியா நாட்டு பெண்மணி அமெரிக்கா வுக்கு நைஜீரியாவில் இருந்து மெடிக்கல் ட்ரீட்மென்டுக்கு போனார் ஆனா அமேரிக்கா உள்ளேயே விடலை அங்கே மீண்டும் நைஜீரிய திரும்பும் வழியில் திடீர்னு பிரசவ வலி எடுக்க ஹீத்ரூவில் இறக்கப்பட்டார் .quadruplets பிறந்து இரண்டு சாமிகிட்ட போய் மற்ற இரண்டு ஸ்பெஷல் கேரில் சி 500,000 பவுண்ட்ஸ் கட்டணுமாமே அந்த லேடி அதுக்கு இங்குள்ள சேரிட்டிஸ் அரேஞ் பன்றாங்க .நல்ல உள்ளங்கள் இல்லைனா அவர் நிலை அதோகதிதான் ,

    எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கு ஆனா வெளி நாட்டில் மனித நேயம் மிக்கோர் அதிகம் இருப்பதால் உயிர்கள் பிழைக்குது

    ReplyDelete
  9. நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இவ்வுலகம்
    உ யிர்த்திருக்கும்....அமெரிக்காவில் இது கொஞ்சம் அதான் அந்த இன்சூரன்ஸ்...வேதனைத்தான்...இங்கும் வந்துவிட்டது...கனடா பரவாயில்லை என்றான் என் மகன்....அங்கு 10 மாதம் இருந்ததால்...யு கே யில் public health நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுருக்கேன்...என் நாத்தனார் இங்கு இப்போது வந்த பிறகும் அவரது ப்ரெயின் ட்யுஉமர். பிரச்சனைக்கு அங்குதான் சென்று வருகிறார்....லண்டனில் 40 வதுடங்களுக்கு மேல் இருந்தவர்....

    கீதா

    ReplyDelete
  10. இது உலகம் முழுக்க உள்ளதுதான்...என்ன இங்கு நீதி கிடைக்காது...கிடைக்கும் என்றால் அதற்குள் நோயாளி டிக்கெட் வாங்கி இருப்பார்....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.