Wednesday, January 24, 2018

படித்த செய்திகளும் நக்கல் கருத்துகளும்

// சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக ஜூயர் எச்சரிக்கை!///

ஜீயர் பேசாமல் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு யாகம் நடத்திவிட வேண்டியதுதானே

//:''யார் கட்சி துவங்கினாலும், அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.///

ஏன்னா  நாங்களே மிக நன்றாக பாதிக்க செய்துவிட்டோம் இதைவிடவா வேறு யாரும் பாதித்துவிடப் போகிறார்கள்


/இந்திய  எல்லைபுற பகுதியில் பாக் ராணுவம் தாக்கியதில் 11 இந்தியர்கள் பலியானதாகவும். 93 பேர் காயமடைந்ததாகவும், 131 கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், 74 கட்டடங்கள் சேதம்அடைந்ததாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன//

நிர்மலா சீதாராமன் உடனடியாக இந்திய ராணுவ வீரர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பிடிங்கி வைத்து கொள்ளுங்கள்...அவர்கள் ரோசப்பட்டு பாகிஸ்தானை தாக்கிவிடப் போகிறார்கள் அதனால் பெரிய போர் ஏதும் வந்துவிடப் போகிறது

///ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்--400 அமைப்புகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்--400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. ////


பாகிஸ்தான் மைண்ட் வாய்ஸ் :முட்டாள் பசங்க நாம என்ன முட்டாளா இந்தியா மீது ஏவுகணையை அனுப்புவதற்கு......நாம் அனுப்புவது இராணுவவீரர்களைத்தான் அதையே அவங்களால் சமாளிக்க முடியலை ஹீஹீ

//ஜெயலலிதா மரணம் பற்றி அறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் இப்போது மிகவும் குழப்பம் அடைந்திருக்கின்றனர்.// 

 அவர்களின் விசாரணையில் அவர் இறந்தது எந்த தேதி என்று அறியமுடியாமல் தவிப்பு

///பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் இல்லை : மோடி சூசகம்///

இதனால் அறிவது தொழில் அதிபர்களுக்கு சலுகைகள் மிக அதிகம்   கொடுக்ப்படும் என் மோடி  சூசகமாக தெரிவித்துள்ளார்  என்பதுதான் இதன் அர்த்தம்


//துக்ளக்’ ஆண்டு விழாவில்  ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது. ‘நாங்கள் சசிகலாவைச் சிறைக்கு அனுப்பி, அவரிடமிருந்து அ.தி.மு.க-வைக் காப்பாற்றி, பிரிந்துகிடந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகளை இணைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்தோம். ஆனால், அதன்பிறகும் அந்தக் கட்சி வலிமைபெற முடியவில்லை’ என்பதுதான் அவர் பேச்சின் சாரம். //

நீதி கேட்டு கோர்ட்டுக்குக் போக வேண்டாம்  நாட்டாம்மை மாமா குருமூர்த்தியிடம் போனால் போதும்


தீவிர அரசியலில் இறங்கப்போகிறேன் - உதயநிதி.


அரசியல் கடலைவிட மிக ஆழமானது அதனால் பார்த்து இறங்குங்க


 நண்பரை பேஸ்புக்கில் இணைத்து கருத்து சொல்லவைத்தாலே போதும் பலவருஷ நட்பு ஒரு நொடியில் முறிந்துவிடும்

வயதானால் 'அது' எழுந்திருக்காது அதற்கெல்லாம்வா குற்றம் சொல்லுவது # போங்கய்யா போங்க ##Tamil_Insulted

அன்புடன்
மதுரைத்தமிழன்
24 Jan 2018

4 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.