நூறு கோடிகளுக்கு மேல் செலவழித்து எடுக்கப்படும் விஜய்யின் அடுத்த புதிய படம் தமிழகத்தில் உள்ள பஸ்ஸில் வைத்து எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது
தமிழக அரசு பஸ்ஸில் பயணம் செய்யவிரும்புவர்கள் தங்கள் ஆதார்கார்டை கொடுத்துதான் டிக்கெட் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய ஆணையை பிரபித்துள்ளது
அமெரிக்க அதிபர் தமிழகத்தில் வரும் போது அவரை ஏர்போர்ட்டில் இருந்து ஜெயலலிதாவின் சமாதிக்கு தமிழக அரசு பஸ்ஸில் அழைத்து வந்து கெளரவித்தனர். இதுற்கு தமிழக எதிர்கட்சிகள் இது எல்லாம் மிக அனாவசியமான செலவு என்று போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகம் வரும் போது அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச அனுமதி அளிக்கப்படும் என்று அறிந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை தமிழகத்தில் குவித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு பஸ்ஸில் வந்த எடப்பாடியை பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.பஸ்ஸில் வந்து பிரச்சாரம் செய்யும் அளவிற்கு பணம் கரைபுரண்டோட இவர்களால் எப்படி முடிந்தது என்று எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் செய்தனர்
தமிழக அரசு எம்.எல்,ஏக்களுக்கு அரசு பஸ்ஸில் இலவசமாக செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்தை எதிர்த்து ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்
அந்த குழந்தைகள் தமிழக அரசு பஸ்ஸில் ஸ்கூலுக்கு போகிறார்களாம்.. நிச்சயம் அவங்க பெரும் பணக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்.
நிருபர் :உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தால் என்ன பண்ணுவீங்க?
ஒரு மாதம் முழுவதும் ஆசை தீர தமிழக அரசு பஸ்ஸில் பயணம் செய்வேன்
இறைவன் பக்தனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பக்தன் இறைவா எனக்கு சந்திர மண்டலம் சென்று வர ஆசையாக இருக்கிரது என்றான்
அதற்கு இறைவன் அதெல்லாம் டூமச் வேற வரம் ஏதாவது கேள் என்றார்
அப்ப எனக்கு சென்னை டூ நாகர் கோவில் அரசு பஸ்ஸில் சென்ற வர ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்
அதை கேட்ட இறைவன் பக்தா சந்திர மண்டலதிற்கு சென்று வர உனக்கு மட்டும் டிக்கெட் வேண்டுமா இல்லை உன் குடும்பத்திற்கே டிக்கெட் வேண்டுமா என்றார்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது.
மதுரைத்தமிழன் :சைடிஷ் சாப்பிடுவதால்தான் கல்லீரல் பாதிக்கபடுகிறது என்று நிருபிக்கபடுமோ என்னவோ
ஸூப்பர் நக்கல்ஸ் தமிழரே...
ReplyDeleteரசி(ரி)த்தேன்.
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா செம நக்கல்!! ரொம்பவே ரசித்தோம்...சிரித்தோம்...
ReplyDeleteம்ம்ம் ஆமாம் மதுரை சென்னை டு நாகர்கோயில் ரொம்பவே கூடிப் போச்சு....பேசாம ஹெலிகாப்டர் வாங்கலாமானு யோசிக்கிறேன்....
ReplyDeleteகீதா