உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 19, 2018

கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்

@avargalUnmaigal #humour
கடவுளே  எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்

Jan 1: மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஹாய் டார்லிங்க் ஹவ் ஆர் யூ?

ம.த மனைவி :காலையில் ஆபிஸிற்கு போகும் போது நல்லாதானே இருந்தீங்க இப்ப என்னாச்சு உங்களுக்கு?

மதுரைத்தமிழன் ஒன்றும் ஆகலை ஹனி ஐம் பைன்....


 ம.த மனைவிசரி சரி இந்த டார்லிங்க் ஹனியை அப்படி இப்படின்னு உளறுவதை நிறுத்திவிட்டு காபியை குடித்துவிட்டு பொண்ணை டியுசன் சென்டரில் இருந்து கூப்பிட்டு  வர்ர வழியை பாருங்க

ஹும்Jan 2  :மதுரைத்தமிழன் ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஹாய் இந்த உனக்காக பூங்கொத்து வாங்கி வந்திருக்கிறேன்

 ம.த மனைவி :ஆமாம் இப்ப இது எதற்கு?

மதுரைத்தமிழன் உன்னை சந்தோசப்படுத்ததான் வாங்கி வந்தேன்.

 ம.த மனைவி :ஆமாம் காசை கரியாக்கிட்டு வந்து இருக்கிறீங்க இந்த பூவு என்ன மல்லிகை பூவா தலையில் வைத்து சந்தோஷப்பட. போய் அந்த ப்லவர் வாஷில் போய் வையுங்க இனிமே இது போல காசை வேஷ்டாக்காதீங்க

ஹும்ம்..

Jan 3 :மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஹாய் பொண்டாட்டி இன்று நீ சமைக்க வேண்டாம் நாம் டின்னருக்கு வெளியே போய் சாப்பிடுவோம்

 ம.த மனைவி :ஏன் என் சமையலுக்கு என்ன குறைச்சல்....காசை வேஷ்டாக்காமல் வீட்டில் நான் வடிச்சு வைச்சதை  ஒழுங்கா சாப்பிட்டு காலி பண்ண வழியை பாருங்க

Jan 4: மதுரைத்தமிழன் :ஹாய் என் செல்லப் பொண்டாட்டி எழுந்துக்கோ உனக்கா நான் சீக்கிரம் எழுந்து மார்னிங்க் பிரேக் பாஸ்ட் சூடாக பண்ணி இருக்கிறேன்.. சாப்பிடு

 ம.த மனைவி :அது எல்லாம் முடியாது நான் இன்று நான் வெறும் வயித்தோட   இரத்த பரிசோதனை பண்ணப் போகனும்  . அதனால இதை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிட்டு முடியுங்க

மதுரைத்தமிழன் ஹும்ம்


Jan 5 :  மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஹாய் பொண்டாட்டி இங்க பாரு உனக்கு பிடிச்ச கேக் வாங்கி வந்திருக்கிறேன்.

 ம.த மனைவி :என்னங்க் நான் புத்தாண்டில் இருந்து கேக் சாப்பிடறது இல்லை என்று தீர்மானித்து இருக்கிறேன். இப்ப போய் காசை கரியாக்கிட்டு வந்து இருக்கிறீங்க முடிஞ்சா அதை ரிட்டன் பண்ண பாருங்க

மதுரைத்தமிழன் :ஹும்

Jan 6 :  மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொன்னவுடன்


 ம.த மனைவி :ஏங்க உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா பிள்ளை தலைக்கு மேல் வளர்ந்து இருக்கு அவ முன்னாடி இப்படியா இருப்பிங்க என்று சொல்லி  நங்கு என்று ஒரு குட்டு வைக்கிறாள்

மதுரைத்தமிழன் :ஹும்

 Jan 7 : மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து லேட்டாக வீட்டிற்குள் வரும் மனைவிடம் செல்லம் இன்று நீ சமைக்க வேண்டாம்.. நான் சர்பரைஸாக உனக்காக சமைத்து வைத்து இருக்கிறேன்.

 ம.த மனைவி :அட என்னங்க நீங்க இன்று ஆபிஸில் பார்ட்டி அதனால அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துட்டேன் அதனாலதான் லேட்டு உங்களுக்கு எதை எப்ப பண்ணனும் என்று தெரிய கூடவில்லை

மதுரைத்தமிழன் :ஹும்ம்


 Jan 8 : மதுரைத்தமிழன் :என்னம்மா இன்று கோயிலுக்கு போகலாமா? இன்று தீங்கள் கிழமை சிவனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் பண்ணுவாங்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்

 ம.த மனைவி :அட எங்க இப்படி அலையிறீங்க நீங்க கோயிலுக்கு வருவததே அங்க வரும் பெண்கள் சேலை கட்டி வருவதை பார்ப்பதற்க்குதானே.. சும்மா கம்முனு வீட்டில் இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்

மதுரைத்தமிழன் :ஹும்ம்

 Jan 9.  ம.த மனைவி :ஆபிஸில் இருந்து லேட்டாக வரும் மனைவி வீட்டிற்குள் நுழைந்ததும் என்னங்க ஏன் எல்லாம் இடத்திலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைச்சிருக்கீங்க.. பவர் கட்டா என்ன?

மதுரைத்தமிழன் :இல்லைம்மா வீடு பார்க்க ரொமாண்டிக் இடம் மாதிரி இருக்கட்டும் என்றுதான் இப்படி செய்தேன்

 ம.த மனைவி :அடச்சீ காசை கரியாக்குவதிலே இருக்குறீங்க லைட்டை போட்டு முதலில் எல்லாம் மெழுகு வர்த்தியையும் அணையுங்கள் அது எல்லாம் எம்ர்ஜன்சி சமயத்தில் உபயோகப்படுத்துவதற்காக வாங்கி வைத்தது...

மதுரைத்தமிழன் :ஹும்ம்

 Jan 10 ; மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியை பார்த்ததும் ஏய் செல்லப் பொண்டாட்டி இங்க பாரு நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் என்று?

 ம.த மனைவி :என்ன வாங்கி வந்திருக்கீங்க?

மதுரைத்தமிழன் :விக்டோரியா சீக்ரெட்டில் இருந்து உனக்கு இன்னர்வேர் வாங்கி வந்து இருக்கிறேன்.

 ம.த மனைவி :என்னங்க உங்களுக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா அதெல்லாம் விலை ஜாஸ்தி.. உள்ள போடுவதற்கு அவ்வளவு விலை கொடுத்து யாரும் வாஅங்குவாங்களா  என்ன காசை கரியாக்குவத்திலே இருக்கிறீங்க முதலில் நாளைக்கு அதையெல்லாம் ரிட்டன் பண்ணுங்க... நான் நாயூடுஹாலில் வாங்கிய இன்னர்வேரே நிறைய அதுவும் புதுசாவே இருக்குது

மதுரைத்தமிழன் :ஹும்ம்ம்ம்

Jan 11   மதுரைத்தமிழன் :என்னம்ம்மா நீங்க வாக்க்கிங்க் போன சமயத்தில உன் வேனை பார்த்தேன் அதில் பெட் ரோல் ரொம்ப கம்மியாக இருந்துச்சு அதனலா பெட் ரோல் புல்லாக நிரப்பி வேனும் கொஞ்சம் டர்ட்டீயாக இருந்ததால் அதை நல்லா வாஷ் பண்ணி கொண்டு வந்து நிறுத்திட்டேன்

 ம.த மனைவி : என்னங்க எனக்குனே உங்க அம்மா நேர்ந்துவிட்ட மாதிரி வந்து சேர்ந்து இருக்கிங்க வேனில் பெட்ரோல் குறைவாக இருப்பது எனக்கு தெரியாதா என்ன? என் தோழி  குடும்பத்தோட நீண்ட் தூரம் பயணம் செய்யவிருப்பதால் வேனை இரவலாக கேட்டாள் அவ எப்போதுமே நம் வேனில் பெட்ரோல் நிரப்பி கொடுத்தாலும் வேனை திருப்பி தரும் போது காலியாகத்தான் வைத்து திருப்பி கொடுப்பாள் அதனால்தான் இன்று அவளிடம் கொடுக்கும் போது  எம்டியாக தரலாம் என்று நினைத்து வைத்திருந்தாள் இப்படி செய்துவிட்டு வந்திருக்கீங்களே

ஹும்ம்

Jan 12 மதுரைத்தமிழன் :என்னம்மா இன்று வெள்ளிக்கிழமை அதனால இன்று நம்ம இரண்டு பேரும் கண்டிப்பா வெளியே போய் சாப்பிட்ட்டுவிட்டு அப்படியே மூவி பார்த்துவிட்டு வருமோம்

 ம.த மனைவி :சரி சரி காரை எடுங்க அப்படியே சரவண பவனுக்கு போய் சாப்பிட்டுவிட்டு ஜாலியாக வருவோம்

மதுரைத்தமிழன் :என்னது சரவணபவனா அதற்கு நம்ம ப்ரிஜ்ஜில் மிச்சம் இருக்கிறதை சாப்பிட்டுவிட்டு வீட்டுலே நல்ல மூவியாக பார்க்கலாமே

உங்களை கட்டிகிட்டதற்கு பதில் ஒரு அம்பியை  கட்டி இருந்தால்  என் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும்

ஹும்ம்


Jan 13 சனிக்கிழமை என் மனைவியின் தோழி வீட்டிற்கு விருந்திற்கு சென்றோம்.  தோழியின் கணவர் என்ன குடிக்கிறீங்க காப்பி டீ ஜூஸ் என்றார் நான் பதிலுக்கு ஒன்றும் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவர் 'தண்ணி'யை வற்புறுத்தி குடிக்க வைத்தார்.. தண்ணிர் என்றது சரக்கு என்று நினைத்துவிட வேண்டாம் அவர் கொடுத்தது வெறும் தண்ணீர்தான். பாவி மனுஷன் அவர் ஒரு குடிகாரர் அவர் வீட்டிலும் சரக்கு பாட்டில்கள் இருந்தாலும் காப்பி டீ வேண்டாம் என்றதும் சரக்கை தருவார் என்று பார்த்தால் வெறும் பச்ச தண்ணியை தருகிறார். ஓரு வேளை அவங்க வீட்டம்மா சரக்கு எதுவும் என் தோழியின் கணவருக்கு கொடுத்து மானத்தை வாங்கிவிடாதீர்கள் என்று ஒரு வேளை  சொல்லி இருக்கலாம். எங்கவீட்டும்மாவும் என் தோழியின் கணவர் சரக்கு குடிக்க கொடுத்தாலும் நீங்கள் அதை வாங்கி குடித்து மானத்தை வாங்கிவிடாதீர்கள் என்று சொல்லிதான் கூட்டி போனார்கள். ஹும்ம்


சரி பச்ச தண்ணியை குடித்தவாரே என் மனைவியும் அவர் தோழியும் ரகசியமாக என்ன பேசுகிறார்கள் என்று பார்த்தால் என் செல்லப் பொண்டாட்டி  என்  கணவர் சுத்த மோசம் அன்பா ஆதரவா பேசமாட்டேங்கிறார் அப்ப அப்ப அணைத்து நாலு நல்ல வார்த்தை சொல்ல மாட்டேங்கிறார்.ஆபிஸில் இருந்து லேட்டாக வரும் நாட்களிலும் ஏதாவது சமைத்து வைத்து சந்தோஷப்படுத்த மாட்டேங்கிறார் ரொமாண்டிக்கா இருக்கமாட்டேன்கிறார் என்று பலவித கம்பெளையண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் பதிலுக்கு அவரின் தோழியும் அவரின் கணவரை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஹும்ம் ஆண்கள் நாங்க இருவரும் பச்சை தண்ணியை குடித்து கொண்டு வார இறுதியை சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்

இப்ப சொல்லுங்க மனைவி அமைவதெல்லாம் வரம் என்று சரக்கு அடித்து கொண்டே எழுதியவன் எங்களைப் போல அடிவாங்கிய கவிஞனாகவே இருப்பான்

என்ன நான் சொல்லுறது சரிதானே


Jan 13  மதுரைத்தமிழன் :சர்ச்சிற்கு போய் ஏசப்பா எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் என்றுதான் வேண்ட வேண்டும் அப்படி இல்லையென்றால் இந்தியாவிற்கு போய் நித்தியனந்தா சுவாமிகக்கு போட்டியாக ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்.. ஹும்ம்ம் வேற வழியில்லை இந்த மதுரைத்தமிழனுக்கு

அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments :

 1. ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் :) இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.... இன்னும் மனைவியைப் புரியவே முடியல்ல ட்றுத்தால:).. ஹையோ ஹையோ:)

  ReplyDelete
  Replies
  1. மனைவின்னு சொல்லுறதுக்கு பதிலாக தமிழ் பெண்களை என்று சொன்னால் இங்கு பொருத்தமாக இருக்குமல்லவா? வேண்டுமென்றால் தேம்ஸ் நதிக்கரையோர பெண்ணிற்கு விதிவிலக்கு அளிச்சிடலாம்

   Delete
 2. உங்களை நினைக்க பாவமாத்தான் இருக்கு:)... விடா முயற்சி பண்ணிட்டே இருக்கிறீங்க:).. இதெல்லாத்தையும் விட்டுப்போட்டு முதலில் மாமியோடு 2 மணித்தியாலமா இருந்து பேசி அவட விருப்பு வெறுப்புக்களைக் கண்டறிந்து... கூலாக்கிவிட்டு... பின்பு இந்த அமெரிக்க கல்யாணம் பற்றிக் கேட்டுப் பாருங்கோவன்:)..

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மனைவியிடம் 2 மணித்தியலாமா பேசி காதை புண்ணாக்கி 5 நிமிஷம் சந்தோசமாக இருப்பதற்கு பதிலாக அமெரிக்க பெண்ணிடம் 2 வார்த்தை பேசி 5 நிமிஷம் சந்தோஷமாக இருந்து 10 நிமிஷத்தில் அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடலாம். இதெல்லாம் உங்களுக்கு தெரியாது ஹீஹீ

   Delete
 3. ஹாஆஆஹாஆஹாஆஆ:) ஹையோ பாவம்னு சொல்வேன்னு மட்டும் நினைக்காதீங்க :)

  என் மெயில் ஐடியை உங்க வீட்டம்மாகிட்ட குடுத்தீங்கன்னா நான் நாலு நல்லவார்த்தை அந்த பிள்ளைக்காதில் போட்டு வைப்பேன் அட்வைஜ் :) அப்புறம் பாருங்களேன் நீங்க இப்படி பதிவே போட மாட்டிங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஹலோ எங்க வீட்டம்மா இந்த பக்கம் தலையெடுத்து வைக்கமாட்டார்கள் என்பதால் ஏதோ பதிவுகள் எழுதி கிறுக்கி கொண்டு ஜாலியாக இருக்கிறேன் அதையும கெடுக்க முயற்சி செய்கிறீர்களே இது நியாமா? நீங்க கேட்டு நான் மெயில் ஐடி கொடுத்தால் மலர்வளையம் வாங்கி கொண்டு என் கல்லறைக்குதான் நீங்கள் வர வேண்டி இருக்கும். அதன் பின் நீங்கள் தேம்பி தேம்பி அழுவீங்க அந்த கஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க விரும்பவில்லை.

   Delete
 4. இங்கே பாருங்க ட்ரூத் :) தமிழ்நாட்டு பொண்ணுங்க மாதிரி இல்லை அமெரிக்க பொண்ணுங்க எதுக்கும் 100 தரம் யோசிச்சி முடிவெடுங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஹும்ம்ம் யோசித்து பார்க்கிறேன் தமிழ் பெண்கள் கோபப்பட்டால் பூரிக்கட்டையை எடுப்பார்கள் ஆனால் அமெரிக்க பெண்கள் துப்பாக்கியை அல்லவா எடுப்பார்கள்... என்னம்மா இப்படி கருத்து போட்டு மனசில் கிலியை உண்டு பண்ணுறீங்க.. ஒருத்தன் ஜாலியாக இருப்பது உங்களுக்கு பொறுக்காதோ.....ஹும்ம்

   Delete
  2. ஏஞ்சல் நான் நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க!! கூடவே மத வின் வரிகளையும் சேர்த்துச் சொல்ல நினைச்சேன்..அதான் உங்க மனைவியாவது பூரிக்கட்டைதான் ஆனா அ பெ எல்லாம் துப்பாக்கிய எடுப்பாங்கனு சொல்ல நினைச்சத ரெண்டு பேருமே சொல்லிட்டீங்க....ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 5. Be Careful of what you wish for Mathura.. You might get it...

  ReplyDelete
  Replies
  1. ரியலி அவ்வளவு அதிர்ஷ்டசாலியா நான் ஹீஹீஹீ

   Delete
 6. படித்தேன். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இப்பூடி எல்லாம் எஸ்கேப் ஆகக்கூடாது:) ட்றுத்துக்கு ஒரு ஐடியாக் குடுங்கோ:)) ஹா ஹா ஹா:)..

   Delete
 7. வணக்கம் சகோதரரே!

  அடடா... மதுரைக்கு வந்த சோதனையோ?
  இல்லையில்லை மதுரைத் தமிழனாகிய உங்களுக்கு வந்த வரவிருக்கிற சோதனையோ?...:))

  படித்தேன்! ரசித்தேன்!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 8. துளசி: ஹா ஹா ஹா ஹாஹா....ரசித்தேன்...

  கீதா:ஹா ஹா ஹா ஹா அது சரி ம த மனைவி வரிகள் எல்லாம் எங்க போகணுமோ அங்க போயாச்!!! ம தன் வுக்கு (இப்படித்தான் நாங்க ஷார்ட்டா சொல்லிக்குவோம்...ஆனா இங்க எழுதறதுஇல்ல..இனி இப்படித்தான் எழுதப் போறேன்...ஹிஹீ) பூரிக்கட்டை அடி வாங்கி ரொம்ப நாளாச்சு போல!!! அது நல்லாவே தெரியுது. அதான்....

  ReplyDelete
 9. ஹா... ஹா... ரசித்தேன்...
  அண்ணி அடிச்சி ஆடுறாங்க... நீங்க நித்யானந்தம் மாதாக்கள் வீடியோ பார்த்து பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டீங்க....
  வாயைத் திறந்தா என்னமா பேசுதுங்க...
  அதுகளா வேண்டும் உங்களுக்கு...?

  ReplyDelete
 10. சரி ......வேறே நாட்டில் இதை விட நல்ல வேலை உங்களுக்குக் கிடைத்தால் ?

  ReplyDelete
 11. ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு .........மேய்க்க

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog