உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 8, 2017

கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்

கலைஞருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரின் கேள்வி பதில்கள் இப்போது வெளிவருவதில்லை அதனால் அவரது பாணியை பின்பற்றி இங்கே கேள்விக்கு பதில்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

கேள்வி : ஜல்லிகட்டு தடைக்கு எதிர்ப்பு இல்லாமல் மக்களை இருக்க என்ன மோடி செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் பதில் : மனைவியை அடக்குகிறவன் மட்டும்தான் ஜல்லிகட்டுவில் கலந்து கொள்ளனும் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஆளே இருக்கமாட்டார்கள்


கேள்வி : ஜெ.. அண்ணன் மகள் தீபாபற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்?
மதுரைத்தமிழன் பதில் : ஜெ.. அண்ணன் மகள் தீபா பாஜகவின் B டீம் போல பல்லு இளிக்குது.


கேள்வி : பன்னீர் செல்வத்திற்கு எல்லாம் வேட்டி ஒரு கேடா அதற்கு பதில் அவர் சேலை கட்டிவரலாமே?
மதுரைத்தமிழன் பதில் : பன்னீர் செல்வம் எல்லாம் ஏன் வேஷ்டி சட்டை போடுகிறார் அதற்கு பதிலாக சேலை உடுத்தி செல்லலாமே என்று நினைத்த போதுதான் மனதில் உதித்தது சேலை எல்லாம் சூடு சுரணை மானம் ரோஷம் உள்ள பெண்கள் கட்டுவது என்பது...ஹும்ம்


ஸ்டாலின் கண் கலங்கிய போது என் மனதில் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு  எனக்கும் ஏற்பட்டது.( ஸ்டாலின் இதயத்தின் ஒரத்திலும் சிறிதளவு ஈரக் கசிவு இருக்கிறது)

கேள்வி :ஸ்டாலின் பொது செயலாளராக பதவி ஏற்றது பற்றி?
மதுரைத்தமிழன் பதில் : ஸ்டாலின் பாவம் செய்தவராகத்தான் இருக்க வேண்டும் அதனால்தான் தனது தந்தையால் விழா நடத்தி அவருக்கு கீரிடம் அணிவித்து பாராட்டி பேசி எல்லோர் முன்னிலையிலையும் அவருக்கு செயல் தலைவர் பதவி தந்தை மூலம் கிடைக்காமல்  ஏதோ அறிக்கைகள் மூலம் கிடைத்திருக்கிறது.

கேள்வி : ஜல்லிகட்டிற்கு தடை அவசியமா?
மதுரைத்தமிழன் பதில் : மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன மனிதர்கள் இறக்கிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே அராசாங்கம் தடை போடுகிறது என்றால் முதலில் டாஸ்மாக்கிற்கு தடை  போட்டுவிட்டு அதன் பின் ஜல்லிகட்டுவிற்கு தடை போடலாமே அல்லது  மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்றால் கேரளாவிற்கு செல்லும் அடிமாடுகள் நிலையை எண்ணி அதற்கு ஒரு தடை போடலாமே அப்படி செய்யமாட்டார்கள் அப்படி செஞ்சால் மலையாளி தமிழர்கள் மாதிரி அமைதியாக போராட மாட்டார்கள்


கேள்வி : ஜெயலலிதாவின் மர்ம சாவிற்கு விசாரணை கிடையாதா?
மதுரைத்தமிழன் பதில் :ஒரு வேளை ஜெயலலிதா வேற சாதியில் பிறந்து இருந்தால் அந்த சாதிக்காரர்கள் போராடி ஜெயலலிதாவின் சாவு மர்ம சாவா அல்லது இயற்கை சாவா என்று கண்டுபிடிக்க  விசாரணைக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள் இந்த நேரம்.

கேள்வி :கர்ப்பிணி பெண்களுக்கு மோடி 6000 தருவதாக சொல்லி இருக்கிறாராமே?
மதுரைத்தமிழன் பதில் : கர்ப்பிணி பெண்களுக்கு மோடி தருவதாக சொன்ன 6000 ரூபாயை  கூட பெறக் கூடிய பாக்கியம் இல்லாதவராக இருக்கிறார் மோடியின் மனைவி

கேள்வி : இஸ்லாமியர்களுக்கு மோடி ஏதாவது நன்மை செய்து இருக்கிறாரா?
மதுரைத்தமிழன் பதில் : மோடியை குறை சொல்பவன் நிச்சயம் முஸ்லீமாக இருப்பான் என்கிற எண்ணத்தை மாற்றி இந்தியமக்கள் அனைவரும் குறை சொல்வான் என்ற நிலமையை மாற்றி இருப்பதுதான் அவர் இஸ்லாமியர்களுக்கு செய்ய நன்மை


கேள்வி : வருங்காலத்தில் சசிகலாவோ ஸ்டாலினோ தமிழக முதல்வராக இருந்து ஆட்சி செய்தால் மக்கள் என்ன பேசுவார்கள்?
மதுரைத்தமிழன் பதில் : வருங்காலத்தில் தமிழக மக்கள் ஒரு வேளை இப்படிதான் பேசுவார்களோ என்னவோ? ( கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி ஒரு பொற்காலமாக இருந்தது அந்த மாதிரி ஆள இப்போது எந்த தலைவர்களாலும் முடியாதுடா )


கேள்வி :பெங்களுரில் பெண்களிடம் தவறாக இளைஞர்கள் நடந்து கொண்டதை பற்றி?
 மதுரைத்தமிழன் பதில் : நடக்க கூடாதது நடந்துவிட்ட மாதிரி பேசுகிறார்கள். இதைவிட இந்திய இளைஞர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். விதைப்பதைதானே நாம் அறுவடை செய்ய முடியும்


கேள்வி :என்னப்பா இந்த  சென்னை புத்தக கண்காட்சியில் கூட்டம் அதிகமாக இருக்கிறதே மக்களுக்கு படிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டதா என்ன?
 மதுரைத்தமிழன் பதில் : அட போடா இங்கே உள்ள கூட்டம் எல்லாம் எழுத்தாளர்கள் கூட்டம்தான் இப்ப படிக்கும் பழக்கத்தை விட எழுதும் பழக்கம் அதிகமாகிவிட்டதுதான் இந்த கூட்டதிற்கு காரணம்கேள்வி :அரசியலில் வெளிப்படை தன்மையை  ஏற்படுத்துவதில் மோடிதிட்ட வட்டம் என்று செய்தி வந்திருக்கிறதே?

மதுரைத்தமிழன் பதில் :ஆனால் பொருளாதார திட்டத்தில் மறைமுகத்தன்மையை திட்டவட்டமாக செயல்படுத்துகிறார் என்ற செய்தி மட்டும் வெளிவராது

கேள்வி : மோடிக்கு மிக திறமையானவரா?
மதுரைத்தமிழன் பதில்: தமிழகத்தில் தேர்தலின் போது வோட்டுக்கு பணம் கொடுப்பார்கள் ஆனால் மோடி அரசு வரும் ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெற அந்த மாநிலங்களில் உள்ள ஏடிஎம் மிஷின்களில் மற்றும் பேங்குகளில் மட்டும் தங்கு தடையின்றி பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப் போகிறார். இப்பவாவது மோடியின் திறமை உங்களுக்கு புரிஞ்சுதா மக்களே தமிழக கட்சிகள் கொள்ளை அடித்த பணத்தில் சிறிதை உங்களுக்கு பகிரிந்து வோட்டை வாங்குகிறார்கள் ஆனால் மோடியோ உங்கள் பணத்தை உங்களுக்கு கிடைக்க மட்டும் எளிய வழிகளை செய்கிறார்


கேள்வி : ஸ்ரீரங்கம் அம்பிகள் சசிகலாவை எதிர்க்க காரணம் என்ன?
மதுரைத்தமிழன் பதில் :எம்ஜியார் இடத்தில் ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த  ஸ்ரீரங்கத்து ஆட்களுக்கு ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைத்து பார்க்க சாதிதான் இடைஞ்சலாக இருக்கிறதோ?

கேள்வி : சென்னை புத்தக கண்காட்சியில் புத்தக விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம்?
மதுரைத்தமிழன் பதில் : முன்பு எல்லாம் பொங்கல் பண்டிகை தினத்தை ஒட்டி அராசாங்க ஊழியரகளுக்கு காதிகிராப்டில் துணிகள் வாங்க லோன் கொடுப்பார்கள் அதே மாதிரி புத்தக் கண்காட்சியிலும் புத்தம் வாங்கி அரசாங்கம் லோன் கொடுத்தால் புத்தக கண்காட்சியில் புத்தகம் அதிக விற்பனை ஆகுமே

கேள்வி : விவசாய பிரச்சனைகளை தீர்க்க பன்னீர் செல்வம் எடுத்த நடவடிக்கை என்ன?
மதுரைத்தமிழன் பதில் :விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய் படத்தில் நடித்த முன்னால் முதல்வர் எம்ஜியாரின் தபால் தலையை மத்திய அரசு வெளியிட வேண்டும் : இன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

  1. உங்கள் அரசியல் நையாண்டியை ரசித்தேன்.

    ReplyDelete
  2. மோடியை இதுவரை ஆதரித்தற்கு பகிரங்க மன்னுப்பு கோருகிறேன்.

    ReplyDelete
  3. அண்ணே.. ஒண்ணு சொன்னா கோவப்படக்கூடாது. நீங்களோ இந்திய passport-ஐ தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கனாக மாறி விட்டீர்கள். அமெரிக்கத் தேர்தலில் தான் ஒட்டு போடுகிறீர்கள். வரியை அங்கேதான் கட்டுகிறீர்கள். அப்புறம் எதுக்கு வேறொரு நாட்டு, அதாவது இந்திய, அரசியல்? இந்தியாவைப் பற்றி கிண்டல் மட்டும் செய்ய என்ன இந்தியா என்ன உங்களுக்கு அவ்வளவு மட்டமா? இந்தியர்கள் இந்தியாவைப் பற்றி கவலைப்படட்டும். நீங்கள் Trump மற்றும் உங்கள் நாடான அமெரிக்கா செய்யும் அட்டூழியத்தை பற்றி கவலைப்படுங்கள். நிறவெறி பற்றியும், துப்பாக்கிக் கலாச்சாரம் பற்றியும், அமெரிக்க அரசு வெளியுறவு கொள்கை என்ற பெயரில் செய்யும் பித்தலாட்டம் பற்றியும் எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog