உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 26, 2017

இந்திய குடும்பம் ஒரு இனிய பல்கலைகழகம்

avargal unmaigalஎப்படி அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி என்று தனித்தனியாக பல்வேறு மனக் கசப்புடன் வாழ்ந்து வந்தாலும்  வீட்டில் விஷேசம்  என்றவுடன் மனக் கசப்புகளை மறந்து எப்படி குழந்தை குட்டிகளுடன் வந்து பெற்றோர் தலைமையில் கூடி சந்தோஷமாக இருப்ப்போமோ அப்படிதான்  இந்தியாவில் மக்கள் பல மாநிலங்களாக பிரிந்து மனக் கசப்புடன் வாழ்ந்து வந்தாலும் சுதந்திர தினம் & குடியரசு தினம் என்று வந்துவிட்டால் பிரதமர் மற்றும் குடியரசு   தலைவர் தலைமையில் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் இந்த சமயத்தில் மனக் கசப்புகளை மறந்து கூடி கொண்டாடி நாம் இந்தியர்கள் என்று பெருமை கொள்ளவேண்டும்.

அதைவிட்டு விட்டு இந்த தினங்களை கறுப்பு தினம் என்று கூறிக் கொண்டு கறுப்பு கொடி ஏற்றுவது என்பது நம் தாயை அவமதிப்பது போலத்தான் குடியரது தினத்தில் கருப்பு கொடி ஏற்றுவது என்பது விஷேசதினத்தின் போது சுமங்கலியாக இருக்கும் தாயிற்கு வெள்ளை சேலை எடுத்து கொடுத்து கட்டி அழகு பார்ப்பது போலத்தான். அப்படித்தான் நாங்கள் செய்வோம் என்றால் நீங்கள் ஒரு இழி பிறவிதான்.


அப்படி ஏதும் செய்யாமல்  இந்திய குடும்பம் ஒரு இனிய  பல்கலைகழகம் என்று பல தேசமக்களுக்கும் நாம் உணர்த்துவோம்


என் வலைத்தளத்திற்கு வருகைதரும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


ஜெய்ஹிந்த்!


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. யார் கறுப்புக்கொடி ஏற்றி இருக்கிறார்கள்? நீங்கள் சொல்வது போல அது தவறுதான்.

  குடியரசு தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு...

  குடியரசு தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தலைப்பும் இந்தப் பதிவும் அருமை.

  பல்வேறு வேற்றுமைகளிலும் ஏதோவொரு ஒற்றுமை என்பதே நம் பாரதத் திருநாட்டின் தனிச்சிறப்பாகும்.

  ஜெய்ஹிந்த் !

  ReplyDelete
 4. நல்ல பதிவு தமிழா! இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்!

  கீதா: பதிவு அருமை! நானும் உங்கள் பதிவு, வெங்கட்ஜி பதிவு எல்லாம் பார்த்ததும் இப்போது நான் எதிர்மறையா எழுதிட்டோமோ அப்படினு தோனுது...ஆனால் நிச்சயமாகக் கறுப்பு தினம் என்றெல்லாம் மனதில் தோன்றவே இல்லை.....வெங்கட்ஜியின் தளத்திலும் அதைத்தான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன கருத்துகளுக்குப் போராட்டம் காரண்ம இல்லை மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில்...நம்ம வீட்டுல தவறு நடந்தா நாம் சுட்டிக் காட்ட மாட்டோமா...அதனால நம்ம நாட்டு மேல பற்று பாசம் இல்லாது போகாது...அது இருப்பதனால் வருவதே என்று...நாம் கேக்காம யாரு கேக்கப் போறாங்கனு...நம்ம நாட்டுல இன்வெஸ்ட் பண்ணுற பன்னாட்டு நிறுவனங்களா இல்லை ஊழல் பண்ணுறவங்களா கேள்வி கேப்பாங்க?...அதான் இப்படி ஆதங்கம் வெளிப்பட்டுச்சு மதுரை சகோ..தமிழகத்துல வியோ மில்க்னு லிட்டர் 120/125 ரூ நு கோக் கம்பெனியோடது வந்துருக்கு பாருங்க. அதுக்குக் காரணம் யாரு? மகக்ளா? இல்லையே அரசுதானே காரணம்?..100% தாராளமயமாக்கல் விவசாயத் துறைல..அதனாலதான் மக்களால் மக்களுக்காகனு தலைப்பும்....மனது கஷ்டப்படுது...ஆனால் இன்றேனும் நேர்மறையாகப் போட்டுருக்கலாமோனு ஒரு சின்ன வெக்கமும் கூடவே வருது உங்கள் பதிவு, வெங்கட்ஜி பதிவு எல்லாம் பார்த்ததும்...

  இனிய குடியரசுதின நாள் வாழ்த்துக்கள்! சரி கடலை மிட்டாய் கிடைத்ததா...


  ReplyDelete
 5. அருமையான கருத்து ..ஆயிரம் வெறுப்புகள் கோப தாபங்கள் இருப்பினும் எனக்கும் கருப்பு கொடி போன்ற அவமதிக்கும் செயல்களில் உடன்பாடில்லை .
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தேசபக்தி என்பது தேசத்தை ஆள்பவர்களை வைத்து வருவதல்ல. நாம் பிறக்கும் போதே நம் இரத்தத்தோடு ஊறியது. பெற்ற தாயை எப்படி நாம் நினைத்தபடி மாற்ற முடியாதோ அப்படித்தான், தேசமும், நம் மொழியையும் நம்மால் மாற்றியமைக்க முடியாது.

  அதே நேரம் நம் வேண்டுதலுக்கு செவிகொடாத அரசின் கொண்டாடங்களை புறக்கணிப்பதில் தவறில்லை. அதற்காக எதிர்க்கின்றோம் எனும் பெயரில் தனி நாட்டு கோரிக்கைகள். நான் இந்தியனல்ல என்பது போன்ற வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கறுப்புப்பெட்டி போராட்டங்கள் கூட அப்படித்தான். நம்மை நாமே அவமதித்து கொள்கின்றோம்.

  எனக்கும் எப்போதும் நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனைகளை வைத்து நாட்டையே விமர்சிப்பது ஒப்புதல் இல்லை. ஆனால் பலர் எதிர்ப்பும் இல்லை ஏற்பும் இல்லை எனும் மௌன நிலையை கடைப்பிடித்திருபப்து நல்லதொரு மாற்றத்திற்கான அறிகுறி என தோன்றுகின்றது. இதுவும் ஒரு வகை போராட்டம் தான்.

  நம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதில் மகிழ்ச்சி.அதே நேரம் இன்னும் ஒரு சிலர் தங்கள் தேச பக்தியை வெளிப்படுத்த நினைத்து தங்களை நிருபிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள்.

  கோபமும் எதிர்ப்பும் கூட இது என் மண் எனும் உரிமையினால் வருவது தான்.

  நீங்களும் இந்த பதிவை தவிர்த்திருக்கலாம். இப்படி பதிவு இட்டுத்தான் உங்களை நிருபிக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை.

  தேச பக்தி என்பது தேசத்துக்கானதாக இருக்க வேண்டும். தேசத்தில் வாழும் மனிதர்களை வைத்து நம் தேச பக்தியை எவருக்கும் நிருபிக்கும் கட்டாயம் எமக்கில்லை


  *****
  டிஸ்க், அவசியமெனில் பின்னூட்டங்கள் சிவகாமியின் சபதமாக இருப்பது தப்பில்லையாக்கும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog