உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 1, 2016

போலித்தனங்கள் நிறைந்த தமிழக போக்குவரத்து வட்டார நிறுவனமும் ஆய்வாளர்களும்போலித்தனங்கள் நிறைந்த தமிழக போக்குவரத்து  வட்டார நிறுவனமும் ஆய்வாளர்களும்

தனியார் பள்ளிகூட பள்ளிப் பேருந்துகளில் சிக்கி மாணவர்கள் சிலர் இறந்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்றன. இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்படி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்துவருகின்றனர்.அது போல இந்த ஆண்டும் பள்ளிகூடங்கள் திறக்க விருப்பதால் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர்கள் பள்ளி கூட வாகனங்களை சோதித்து அது பாதுக்காப்பானதுதானா என்று ஆராய்ந்து அதற்கு உரிமம் வழங்குகிறார்களாம் அப்படி சோதிக்கும் போது அந்த பஸ்ஸில் முதலுதவி பெட்டியில் உள்ள மருந்து பொருட்களும் எக்ஸ்பைரி ஆனாதா என்று சோதித்தும் அப்படி இல்லையென்றால் அந்த பஸ்ஸிற்கு உரிமத்தை ரத்தும் செய்துவருகிறார்கள் என்ற செய்தியை படித்தேன் இது நல்லதொரு நடவடிக்கைதான் அதில் குற்றம் கூறுவதற்கு ஒன்றுமில்லைதான்..

ஆனால் அரசு பஸ்களில் ,அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செல்கிறார்கள்தானே ?  ஆனால் இதே சோதனையை அரசு பேருந்துகளில் செய்யாமல் இருப்பது ஏன்? தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் பாதுகாப்பாக போக வேண்டும்  ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி போனாலும் பரவா இல்லையா என்ன ? அரசாங்க பஸ்ஸில் பயணம் செய்பவர்களின் உயிர்களுக்கு மதிப்பு இல்லையா ?இது போன்ற பஸ்ஸில்தானே குழந்தைகளும் பொதுமக்களும் பயணிக்கிறார்கள்


இந்த அதிகாரிகள் அரசாங்க பஸ்ஸையும் இந்த முறையில் சோதித்து அது மக்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பனதா என்று உறுதி செய்வதும் இந்த துறை அதிகாரிகளின் கடமை அல்லவா அதை செய்யாமல் இருக்கும் இவர்கள் மீது ஏன் நாம் பொது நல வழக்கு தொடுக்க கூடாது.. தனியாருக்கு ஒரு சட்டம் அரசாங்கத்திற்கு ஒரு சட்டமா ? இதே ஏன் செய்தி நிறுவனங்கள் மற்றும் மீடியாக்கள் பேசவில்லை ?

தனியார் பள்ளிகூடப் பஸ்ஸில் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பாக அந்த கல்வி நிலைய நிர்வாகத்தை கைது செய்யும் அரசு. அரசாங்க பஸ்ஸுக்களில் இப்படி பட்ட விபத்துக்கள் ஏற்பட்டால் அந்த நிர்வாக அதிகாரியை கைது செய்ய்யாமல் அல்லது அந்த துறை அமைச்சரை அல்லது தமிழக முதல்வரை கைது செய்ய்யாமல் விடுவது மட்டும் நியாயமா என்ன?


போக்குவரத்து துறை அதிகாரிகளே உங்கள் கவனம் தனியார் துறைகள் நடத்தும் பஸ் சர்வீஸ்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்யும் அரசு பஸ்ஸிலும் கவனம் செலுத்துங்களேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. தனியார் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தால் ஆய்வாளருக்கும் ஏனையோருக்கும் பலன் உண்டு. ஆனால் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்தால் யார் அவர்களை கவனிப்பார்கள்? எனவே ஆய்வாளர்களும் ஏனையோரும் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். நீங்கள் கரடியாகக் கத்தினால் பேருக்கு ஆய்வு நடக்கலாம். அதனால் ஒருவருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை. அரசு பஸ்களின் தரமே இதற்கு சாட்சி.

  ReplyDelete
 2. அரசு எந்திரம் அரசு எந்திரத்தை சோதிப்பதில்லை! சிம்பிள் லாஜிக்! மற்றபடி நல்ல கேள்வி!

  ReplyDelete
 3. நல்ல கேள்வி தமிழா! சரியான கேள்வியும் கூட! செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்களுக்கு எதுவும் தேறாது. நம் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகலின் லட்சணம் மகா கேவலம். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பேருந்துகள் நன்றாகவே இருக்கின்றன. ஏன் கேரளா கூட இப்போது எவ்வளவோ தேவலாம்...

  சித்ரா சுந்தர் அவர்கள் எங்களின் சமீபத்திய பதிவிற்கு இட்ட பின்னூட்டம் "எங்க ஊர் டவுன்பஸ்ஸில் ஓட்டுனர் இருக்கை கயிறால் கட்டப்பட்டு, என்ஜின் பகுதி எல்லாம் பிய்ந்துபோய்" இதுதான் நமது அரசுப் பேருந்துகளின் நிலைமை...

  கீதா

  ReplyDelete
 4. நிஜத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்

  ReplyDelete
 5. Yes.absolutely right. Now away from India so no lap top. Difficult for me to type in Tamil cut paste and comment.

  ReplyDelete
 6. என் மனசுலயும் எழுந்த கேள்வி ... நெத்தியடி

  ReplyDelete
 7. ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் இடுகை. தனியார் கம்பெனிகளுக்கும், பள்ளிகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் எதற்கு ஆய்வுக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவர்களும், வேலில போற ஓணானை மடியில் கட்டிக்கொள்ளாமல், கேட்டதைக் கொடுத்துவிடுவார்கள். தொழிற்சாலைகளில் ஆய்வுக்காக வருபவர்கள், காசையும் வெட்கமில்லாமல் கறந்துகொண்டு, வேலை பார்ப்பவர்கள் காதில் விழும்படியாக, அதைச் சரி செய்யுங்கள், இதை இப்படி வைத்துக்கொள்ளாவிட்டால் ரிபோர்ட்டில் எழுதிவிடுவோம் என்று படம் காட்டுவார்கள்.

  இந்தக் கும்பல், அரசு ஆஸ்பத்திரி, பேருந்து, தொழிற்சாலை போன்ற எதிலும் தலை காட்டாது. நியாயமாகப் பார்த்தால், ஒவ்வொரு விபத்தின்போதும், காரணம் கண்டுபிடித்து, அது வண்டியை ஆய்வு செய்தவரின் குறை என்றால், அவர்களை டிஸ்மிஸ் செய்தால்தான், வேலையை ஒழுங்காகச் செய்வார்கள். இல்லையென்றால், படம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்வார்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog