உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 5, 2015

ஸ்டாலினை கிண்டல் செய்யும் அவர் குடும்பத்தினர் (கலைஞர் உள்பட)ஸ்டாலினை கிண்டல் செய்யும் அவர் குடும்பத்தினர் (கலைஞர் உள்பட)

இன்று நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின் அருகில் இருக்கையில் கலைஞர் பேசியது இதுதான்

திமுகவை அழிக்க நினைப்பவர்கள் இன்று கேலிச்சித்திரங்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.


ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களாக நமக்கு நாமே என்ற திட்டத்தின் படி ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து போட்டோ எடுத்து போட்டது இணையம் எங்கும் கேலிக்குரியதாகி கேலிச் சித்திரங்களாக உலா வருகின்றது என்பதை இணையம் வரும் யாருமே மறுக்க முடியாது,

அப்படி இருக்கையில் திமுகவை அழிக்க நினைப்பவர்கள் இன்று கேலிச்சித்திரங்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்று சொல்லுவது ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்வது போல இருக்கிறதுதானே.

கிண்டல் செய்ய கலைஞருக்கு யாராவது சொல்லிதரவா வேண்டும். தனக்கு வேண்டியவர்களையே அருகில் உட்கார வைத்து மறைமுகமாக கிண்டல் செய்வது கலைஞருக்கு கை வந்த கலையாச்சே?


சென்னைக்கு வந்த அழகிரியிடம் மீடியா ஆட்கள் ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் பற்றி கேட்டதற்கு அவர் சொன்னது அது டைம்பாஸ் காமெடி என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள் என்று சொல்லி சென்று இருக்கிறார்.


ஸ்டாலின் ஜால்ரா சொல்லுவது : ஸ்டாலின் தங்க மனிதர்
கலைஞர் சொல்லுவது : ஸ்டாலின் இரும்பு மனிதன்
அழகிரியிடம் கேட்டால் அவர் சொல்லப் போவது  ஸ்டாலின் ஒரு தகரடப்பா அதில் சவுண்டை தவிர ஒன்றும் இருக்காது என்றுதானே

திமுக-வை மகா சமுத்திரமாகும் வரை நான் ஓயமாட்டேன் -கலைஞர்


பாவம் கட்சியை காப்பாற்ற ஸ்டாலின் தெரு தெருவாக சுற்றினாலும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களே அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் போல இருக்கிறது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. மனசுக்கு வருத்தமாக இருக்கு இதுக்காகவே இன்றைக்கு கடைக்கு போகணும்...

  ReplyDelete
  Replies

  1. இதுக்குதான் நம்ம வீட்டிற்கு பக்கத்தில் இருக்கனும் என்கிறது கடைக்கே போகவேண்டாம் வீட்டிலே ஸ்டாக் எப்பவும் உண்டு

   Delete
  2. ஹும் உங்களுக்கு எல்லாம் மனசு வருந்திச்சுனா என்னமோ ஒண்ணு... .......பொண்ணுங்களுக்கு என்ன இருக்கு...சொல்லுங்க சகோஸ்.....அழுவாச்சிதான்....அதனால இனி பொண்ணுங்க கண்ணீர் விடுறாங்கனு சொல்லக்கூடாது ஹஹஹஹ்

   கீதா

   Delete
 2. இன்னும் ஏழு நாள் கூட இல்ல. என்னா வில்லத்தனம். வாரும் வாரும்.
  இங்க வந்துதானே ஆகனும் அப்ப பாத்து கிடுவோம். பாவமய்யா அவரு உப்பு விக்க போனா ஓன்னு மழையடிக்குது.. மாவு விக்க போனா சோன்னு காத்தடிக்குது.. இந்த வயசுல அவர் என்னதான் பன்னுவார்.. (நீர் யாரைக்கிண்டுனீரோ அவருக்காக போட்ட பின்னூட்டம்தான் இது நீரா வேறு யாரையாவது நெனைச்சி கிட்டா கம்பனி பொறுப்பாகாது...!)

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா யாராவது விழாவிர்கு ஏன் வரவில்லை என்றால் அன்பு என்னை மிரட்டுகிறார் அதனால் வரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லிவிடலாம்

   Delete
 3. மகாசமுத்திரம் என்றால் அதில் உப்பைத் தவிர அதிகம் எதுவும் இருக்காதோ?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog