உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 19, 2015

பருப்பை ருசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து படித்து ரசிக்கலாம் பருப்பு படும்பாடு.....avargal unmaigal
பருப்பை ருசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து படித்து ரசிக்கலாம் பருப்பு படும்பாடு.....

அந்த கிருத்திகாவை பாரேன் பருப்பில் தோடு நெக்லஸ் எல்லாம் செஞ்சு போட்டு பெருமை அடிப்பதற்காக நம்மை கொலுக்கு கூப்பிட்டு இருக்கிறாள். இருந்தாலும் இந்த பெருமை எல்லாம் கூடாதுப்பா.


அந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்தவர்களை உபசரித்து அந்த நகைக்கடை அதிபர் கொடுத்த விருந்தில் பருப்பு சாம்பார் பருப்பு வடை எல்லாம் வைத்து பரிமாறினார்களாம்.
அடேங்கப்பா அந்த நகைக்கடை ஓனர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனாகதான் இருக்க வேண்டும்


புதிதாக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஏழை தம்பதிகளுக்கு முதல் நாள் சமைக்க 250 கிராம் பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

குஜராத்தில் மூஸ்லிம் ஒருவரின்  வீட்டில் பருப்பு வைத்திருந்தாக சந்தேகப்பட்டதால் அவர் இந்துத்துவா ஆட்களால் அடித்து கொள்ளப்பட்டார்.

சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்று முதலாக வருபவர்களுக்கு 1 கிலோ பருப்பு வழங்கப்படும் என் விஜய் டிவியினர் அறிவித்து உள்ளனர்,

ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமாக ராசா வீட்டை மீண்டும் சிபிஐ சோதித்த போது 10 கிலோ பருப்பு கணக்கில் காட்டாமல் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது இது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதித்த போது 5 கிலோ பருப்பு கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களாம். இதில் பெரிய அரசியல் தலைங்க இன்வால்வ் ஆகி இருக்கும் என்று சந்தேகப்படுகிறார்களாம்

ஸ்டாலினுக்கு வந்த கூட்டம்  பருப்புக்கும் பீருக்கும் வந்த கூட்டம் அன்புமணிகாட்டம் .

பருப்பு வாங்கி வர சொல்லி மனைவியை துன்புறுத்திய கணவரை வரதட்சணை கொடுமை சட்டத்தீன் கீழ் கைது செய்தனர்,

பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு
வரதட்சணை நிறைய கேட்டாரா? இல்லைங்க... பருப்பு வடை  இருக்கான்னு கேட்டுட்டாரு!

தமிழக தொழில் அதிபர் வீட்டில்  இருந்த 1 கிலோ பருப்பு கொள்ளை அடிக்கப்பட்டது நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பருப்பு வாங்க இந்திய வங்கிகளில் மிக குறைந்த வட்டியில் நீண்டகால லோன் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

அன்பே உனக்காக நான் உயிரையே கொடுப்பேன்.
உன் உயிரை கொடுக்க வேண்டாம் ஒரு கிலோ பருப்பை கொடு.
அன்பை பருப்புக்காக நான் உன் அன்பையை விட்டுவிடுவேன்.
ஆங்.....நாம ரொம்ப ஒவராக்தான் கேட்டுவிட்டுமோ இப்ப பருப்பும் போச்சு லவ்வும் போச்சே!

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. ஆஹா பருப்பை பற்றிய பத்து தகவல்கள் சூப்பர்! வெங்காயத்து போராடின போராளிகள் பருப்புக்கு எங்கே போனாங்க??????
  எனக்கு கவலையில்லை தோட்டத்துல விளைஞ்ச ஒரு மூடை பருப்பு இருக்கே!!!!

  ReplyDelete
  Replies

  1. யோவ் யாருய்யா நீ இப்படி பொதுவுல சொல்லுற என்னா துணிச்சல் அய்யா உங்களுக்கு....உமக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு பத்தாது இராணுவத்தை வரவழைச்சுதான் பாதுகாப்பு தரணும்

   Delete
  2. ஒரு மூட்டையா தம்பி இந்த அக்காவை மறந்துடாம 1கிலோ அனுப்பிவைப்பா. ஹஹ.

   Delete
 2. சில நாட்கள் முன் ,துயரம் பருப்புன்னு நான் பதிவு போட்டது சரியாக போய்விட்டது ,உங்களின் 'பருப்பு பத்து 'வை ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு விலை அதிகமானதால் அது துயரம் பருப்பு ஆனால் எனக்கு அதுவே தினசரி மாமியால் தரப்படுவதால் அது துயரம்பருப்பாகவே இருக்கிறது

   Delete
 3. ரசித்தேன்... பருப்பு பக்காவா ரசிக்க வைத்தது...
  ஊரில் இருந்தால் இப்போது ருசிப்பதுதான் சிரமம்போல...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஊரில் உள்ளவர்களுக்கு ருசிக்க கஷ்டமாக இருப்பதால் நம்மால் முடிந்த உதவி ரசிக்க செய்வது மட்டுமே

   Delete
  2. இனி மேல உங்க பருப்பு வேகாது

   Delete
 4. ஹா.ஹா...

  பருப்புக்கு தான் இப்போது ஏக கிராக்கி!

  ReplyDelete
 5. உங்க பருப்பு இனி உங்க வீட்டு மாமிகிட்ட வேகாது போல.....

  .ம்ம்ம் இங்க பருப்பு வேகவே மாட்டேங்குது தமிழா...விலையை நினைச்சா பகீர்னு...

  இந்த மாதிரி பருப்பை வைச்சு ஓட்டினதுக்கு உங்களுக்கு ஒரு 25 கிலோ அனுப்புறாங்களாம் அம்மா ....

  ReplyDelete
 6. ஏங்க பருப்பு வாங்கனும் என்றாலே இங்கு பூரிக்கட்டை எங்கள் பக்கம் திரும்புகிறது என்ன செய்ய?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog