உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 8, 2015

படித்த செய்தியும் கலாய்ப்பு பதிலும்படித்த செய்தியும் கலாய்ப்பு பதிலும்


செய்தி ::ஸ்டாலினின், 'நமக்கு நாமே' பயணத்தை பற்றி, எதிர்க்கட்சி தலைவர்களில் சிலர், வசைபாடுவதிலிருந்து, பயணத்திற்கான வரவேற்பு பொதுமக்களிடம் பெருகி வருகிறது என்பது புரிகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரைத்தமிழன் :அப்படி பார்த்தால் எல்லா கட்சிகளும் ஜெயலலிதாவை தொடர்ந்து வசைபாடுவாதால்  பொதுமக்களிடம் வரவேற்பு பெருகி வருகிறது என கருதலாம்தானே


'நமக்கு நாமே' நடைபயணத்தில் ஸ்டாலின் குறை கேட்பது இப்படிதான்..

.உடன் பிறப்புகளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

செய்தி :அ.தி.மு.க., - பா.ஜ., இடையே உறவு இல்லை,'' என, பா.ஜ.,வின் அகில இந்திய பொதுச் செயலர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
மதுரைத்தமிழன் :இப்பதான் இளங்கோவன் சத்தமில்லாமல் இருக்கிறார் இப்படி ஏதாவது சொல்லி அவரை தூண்டிவிட்டுவிடுவார்கள் போல இருக்கிறதே

செய்தி :அன்புமணி உள்ளிட்டோர் மீதான, குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் தடுப்பு ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அன்புமணி, தன் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, மற்றவர்களுடன் சேர்ந்து, சதியில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறி, கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு போதிய ஆதாரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், அன்புமணி மீதும், மற்றவர்கள் மீதும், இரண்டு ஊழல் வழக்குகளின் கீழ், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரைத்தமிழன் :தமிழக முதல்வர் வேட்பாளராக வரும் தகுதியை பெற்றுவிட்டார் என்று அதிகாரப் பூர்வமாக நீதிபதி தெரிவித்து இருக்கிறார்


செய்தி :தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: ஊட்டியில் ஸ்டாலின் பேட்டி
மதுரைத்தமிழன் : உங்கள் நடைப்பயணம் பற்றி நாடே சிரிக்கிறதே அது தெரியவில்லையா?


செய்தி :தமிழகத்தில் ஆட்சி மொத்தமாக முடங்கியுள்ளது. ஊழலும், லஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது,'' என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரைத்தமிழன் :தலைவிரித்து ஆடுவதை படம் எடுத்து வாட்ஸ்ப்பில் பகிருங்கள் ரொம்ப ஹிட்டாகும்
 
செய்தி :இந்தியாவின் சகிப்புத் தன்மையை சிதையவிடக் கூடாது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
மதுரைத்தமிழன் :பாவம் எவ்வளவு நாள்தான் குடியரசு தலைவராக சகிப்பு தன்மையோட இருப்பார் அதனாலதான் இன்று வாய் திறந்து அறிக்கைவெளியிட்டு இருக்கிறார்


செய்தி :தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இலவச பட்டா வழங்கப்படும் 2-ம் கட்ட பயணத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரைத்தமிழன் : அண்ணே எனக்கு உங்க வீட்டுபட்டா இலவசமா கிடைக்குமான்னே


செய்தி :அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி: ராமதாஸ்
மதுரைத்தமிழன் :பிஜேபி கூட்டணியில் பாமக சேர்ந்தால் ஊழல் வழக்குகளில் இருந்து அன்புமணி வெளியேற்றம் என்று தமிழிசை அறிவிக்கலாமே

செய்தி :மாற்றம் முன்னேற்றம் அன்புமணி
மதுரைத்தமிழன் :இதெல்லாம் தன் மீதுள்ள ஊழல் வழக்கு பற்றி அன்புமணி சொல்லியதுதான்

செய்தி :வைகோ தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு!
மதுரைத்தமிழன் :ஆமாங்க வைகோ திமுகவின் தலைமையை ஆலோசித்துதான் இனிம முடிவு எடுக்கணும் என்று சொல்லவாங்க போல இருக்கே?

செய்தி :ஸ்டாலின், '100 என்றால் போலீஸ் நினைவுக்குவரும். 108 என்றால் ஆம்புலன்ஸ் வரும். 110 என்றால் ஜெயலலிதாதான் நினைவுக்கு வருகிறது' என கிண்டலடித்தார்.
மதுரைத்தமிழன் : ஆனா மக்களுக்கு 2ஜி என்றாலே திமுக தான் இன்னும் நினைவுக்கு வருதாம்அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments :

 1. எல்லாமே ரசிக்க வைத்தது....
  தமிழக முதல்வராகும் தகுதி அன்புமணிக்கு...
  வீட்டு மனைப்பட்டா....
  2ஜி..
  இப்படி பல ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

  ReplyDelete
 2. சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் பகிர்வு.

  ReplyDelete
 3. கலாய்ப்பு பதில்கள் அசத்தல்!

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை. காணொளி பார்க்க முடியவில்லை. பிறகு முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 5. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. கலாய்த்துக் காய்ச்சிட்டீங்க!!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog