Thursday, July 16, 2015





எல்லோரும் கொண்டாடுவோம்"  ரமலான் ஸ்பெஷல்



இன்று அளவும் மத நல்லிணக்கத்துக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது "எல்லோரும் கொண்டாடுவோம்" (பாவமன்னிப்பு) என்ற இந்த பாடல். அந்தப்பாடலை இஸ்லாமிய அன்பர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாய் அளிப்பதில் பெருமையடைகிறேன். மற்ற மதத்தினரும் இதில் உள்ள பொருளை உணர்ந்து நடைமுறையில் செயல்படுத்தலாம்...

https://www.youtube.com/watch?v=FBG96zbo2z8 பாவமன்னிப்பு முழுப்படத்தை பார்க்க இங்கே க்ளிக்கவும்

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்தபின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவு செய்வோம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்

கருப்புல வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
உடலுக்கு அன்னையென்போம் உரிமைக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக்கண்டு ஒன்றாய்க்கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்

படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவர் கொடுக்கவைப்போம் கொடுத்தவர் எடுக்கவைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்.

ஒரு பரிசோட விட்டுவிட்டால் நன்றாக இருக்குமா என்ன? இதோ மற்றும் ஒரு பாடல்

மேரா நாம் அப்துல்ரகுமான்' (சிரித்து வாழ வேண்டும்) எம்ஜியார் அவர்கள்  எந்தவொரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் வரும் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துச்சொல்வது  வழக்கம்.. அந்த வகையில், தான் ஏற்றுநடித்த சிரித்துவாழ வேண்டும் என்ற படத்தில் அப்துல் ரகுமான் கதாபாத்திரத்தின் மூலம் அவர்தரும் கருத்தாழமான பாடல். இப்பாடலையும் ஈத் பெருநாள் பரிசாக அளிப்பதில் பெருமையடைகிறேன்.

என்னத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோருக்கும்
அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அழைக்கும்
ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

ஆடும் நேரத்தில் ஆடிப்பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் இரண்டும் உலகில் தேவை
ஆடும்போதும் நேர்மைவேண்டும் என்றோர் கொள்கை தேவை

மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் உறைந்தே நின்றான் அவனே அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்

மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்

ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்...
இன்னும் ஒரு அருமையான பாடல்

கலைஞரின் குடும்ப நிறுவன தயாரிப்பில் 'அணையாவிளக்கு' என்ற படத்தில்  மு.க.முத்து சொந்தக்குரலில்  பாடிய பாடல் இப்பாடலையும் ஈத் பெருநாள் பரிசாக அளிப்பதில் பெருமையடைகிறேன்.

கூன் பிறையை போற்றிடுவோம்!
குர் ஆனை ஓதிடுவோம்!
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்!

நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உனை நானும் வேண்டாவா?

யாரும் வருவார் யாரும் போவார்
நாகூர் ஆண்டவர் சந்நிதியில்
நானும் ஒன்றே நீயும் ஒன்றே
நபிகள் நாயகம் முன்னிலையில்

நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உனை
நானும் வேண்டாவா?...

இந்த பாடல்களை எல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல பாட்டை ரசிக்க தெரிந்த அனைவரும் பாடி மகிழ்ந்து  மாற்று மதத்தினரோடு சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்த தமிழரின் மனதில் விஷத்தை இந்த அரசியல் வாதிகள் தங்கள் சுயநலத்திறாக விதைத்து வேற்றுமையை வளர்த்துவிட்டனர்.

நண்பர்களே மதத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும் தமிழால் நாம் ஒரே குடும்பத்தினர் என்று உணர்ந்து இந்த சுயநல அரசியல்வாதிகளை ஒரங்கட்டுவோம்.

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

12 comments:

  1. நல்வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. கருத்துள்ள இனிமையான பாடல்கள்...

    இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. may almighty bring u peace and prosperity
    enjoy
    machan
    vote +

    ReplyDelete
  4. மிக மிக அருமையான பதிவு தமிழா! நாங்கள் மிகவும் ரசிக்கும் பாடல்களை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த இனிய ரமலான் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வணக்கம்,
    நல்ல பகிர்வு,
    அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.
    அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பேரைச் சொல்லி
    நன்ரு

    ReplyDelete
  8. இரண்டுமே அருமையான பாடல்கள்! இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான பாடல்கள்.....

    இனிய ரமலான் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. எனக்கு "எல்லோரும் கொண்டாடுவோம்" பாட்டு ரொம்ப பிடிக்கும் சகா!! நாகூர் ஹனிபாவின் குரல் சான்சே இல்ல... அவர் குரலுக்காகவே கல்லூரி நாட்களில் அவரது கேசட் வாங்கி இஸ்லாமியப் பாடல்கள் கேட்ட காலம் எல்லாம் உண்டு! ஓகே. நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்:)

    ReplyDelete
  11. எனக்கு பிடித்த அருமையான . பாடல்கள் இனிய ரம்லான் வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.