உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 14, 2015

இவர்களின் பிரார்த்தனை இப்படிதான் இருக்குமோ


இவர்களின் பிரார்த்தனை இப்படிதான் இருக்குமோ

டாக்டர் : கடவுளை எங்கள் குடும்பத்தினரை நோய்நொடி வராமல் காப்பாற்று. ஆனால் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் அதிக நோய்களை கொடு

வக்கில் : ஊரில் இருக்கும் எல்லோரும் கொலை மற்றும் குற்றங்கள் செய்து போலீஸிடம் மாட்டிக் கொள்ளா செய்யப்பா

நீதிபதி : கடவுளே எனக்கு மிக அதிக அளவில் ஊழல் பண்ணியவர்களின்  வழக்குகளை மட்டுமே கொடு.

தலைவர்கள் : கடவுளை தப்பு செய்யும் எங்களை கடவுளாக கருதும் இந்த தமிழ் மக்களின் எண்ணத்தை மட்டும் மாற்றிவிடாதே.


போலீஸ்: கடவுளே இன்று நிறைய பேர் ஹெல்மேட் போட்டாமல் வரணும் சாலை விதிகளை மீறணும் அப்படி செய்பவர்களின்  பர்ஸில் மினிமம் 500 ரூபார் இருக்கும் படி செய்து என்னை காப்பற்றப்பா

ஆசிரியர்: கடவுளே என் மாணவர்கள் இணையத்தில் பலதையும் படித்து அறிவை வளர்த்து கொண்டு என்னிடம் வந்து கேள்வி கேட்காமல் இருக்க செய்யும் அப்புறம் என் வகுப்பில் படிக்கும் மாணவகள் அனைவரையும் பாஸாக்கிவிடு ஆனால் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு போன பின் பாஸாகமல் இருக்க செய்துவிடு


பேஸ்புக் பெண் அக்கவுண்ட்கோல்டர் : கடவுளே இந்த மார்க்கிடம் சொல்லி 5000 நண்பர்கள் லிமிட்டை 50.000 மாக மாற்றிக் கொடுக்க வழி வகை செய்யும் இந்த ஆண்களின் கெஞ்சல் தாங்க முடியவில்லை

பேஸ்புக் ஆண் அக்கவுண்ட்கோல்டர் : கடவுளே உனக்கு கண் இல்லையா எங்களுக்கு மட்டும் அதிக லைஸ்வராமலே சோதிகிறாயே இது நியாயமா?

சினிமா பத்திரிக்கை நிருபர்; கடவுளே நயன்தாரா இப்ப யாரை காதலிக்கிறார் என்பதை எனக்கு மட்டும் தெரியப்படுத்துப்பா?

இந்திய மக்கள் : கடவுளே இந்த மோடி இந்தியாவின் பிரதமாரகத்தான் வேலை செய்க்கிறாரா அல்லது இந்திய முதலாளிக்களுக்கு புரோக்கராக இருக்கிறாரா என்பதை தெளிவாக சொல்லிவிடப்பா?

அமெரிக்க பிஸினஸ்காரர்கள் : காட் இங்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்தியாவில் ஒரு நல்ல மார்கெட்டை கொடுங்கப்பா

கல்யாணம் ஆகாத நர்ஸ் : கடவுளே யாரவது ஒரு ஆண்மகனாவது என்னை சிஸ்டர் என்று கூப்பிடாமல் டார்லிங்க் என்று கூப்பிடும்படி செய்.

கோவில் பூசாரி : கடவுளே பணக்கார பக்தர்களை மட்டும் அனுப்பி வையப்பா?

மதுரைத்தமிழன் : மனைவி எவ்வளவு வேண்டுமானலும் பூரிக்கட்டையால் அடிக்கட்டும் ஆனால் அந்த அடிகள் வாங்கும் போது எனக்கு வலியில்லாமல் இருக்க மட்டும் செய் ஆனால் அடி வாங்கும் போது நல்லா அலறும் படி மட்டும் செய்துவிடு. இறுதியாக ஒரு சின்ன வேண்டுகோள் இதை படித்துவிட்டு கருத்து சொல்லாம போகிறவங்களுக்கு மட்டும் வயிற்று போக்கு ஏற்படும்படி செய்துவிடு...அப்படி செய்தால் உன் பெயரை சொல்லி வரும் சனிக்கிழமை மாலை 10 பேருக்கு பீர் வாங்கி கொடுக்கிறேன் அப்புறம் இன்னும் ஒன்று சொல்ல மறந்துட்டேன் பீர் வாங்க காசை மட்டும் எனக்கு கொடுத்துவிடு


அன்புடன்
மதுரைததமிழன்( டி.ஜே.துரை)

7 comments :

 1. முடிவில் உங்க பஞ்ச்-ம் செம...! ஹா... ஹா...

  ReplyDelete
 2. கடவுளே அப்படியே வயிற்றுப்போக்கு வந்தவங்க அத்தன பேரையும் மதுரை தழிழன் வீட்டிற்கு அனுப்பி விடு....

  ReplyDelete
 3. ஏப்பா,,,,,,,,,,
  எங்கள் வேண்டதல் பலிக்காமல் போக,,
  டாக்டரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்,,,,,,,,,,,
  உங்களுக்கு பூரிகட்டை அடி பத்தாது,,,,,,,,,,,
  அவர்களிடம் சொல்ல வேண்டும்.
  நன்றி.

  ReplyDelete
 4. ஹா... ஹா....
  அனைத்தும் அருமை...
  கடைசி கலக்கல்....

  ReplyDelete
 5. உங்க வேண்டுதலில் என்னா ஒரு வில்லத்தனம்! :)

  ReplyDelete
 6. ஹஹஹஹஹஹ்....ரெண்டு நாளா இதை அப்படியே வைச்சுக்கிட்டு வாசிச்சுட்டு கருத்து போட முயன்று தோற்று...உங்க வேண்டுகோள் நிறைவேறிடுச்சுப்பா....ஸோ உங்க செலவுக்கு கடவுளுக்கு அக்கவுண்ட் சொல்லிடுங்க...

  ரொமபவே ரசிச்சோம்...ஒருத்தர் வேற ஊரா ஸோ வாசிச்சு சிரிச்சுட்டு வரதுக்குள்ள உங்க வேண்டுகோள்...ஹஹஹ...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog