உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 18, 2014

சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்

செய்தி :சென்னை ஏர்போர்ட்டில் 31 வது முறையாக கூரை இடிந்து விழுந்ததாம்,

அதுதான் எங்களுக்கு தெரியுமே என்று சொல்லுறீங்களா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள் இங்கே உங்களுக்காக


தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் சென்னை ஏர்போட்டிற்கு சென்று வரலாம்.

சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்லும் பயணிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் பாலிசியை LIC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உயிருக்கு பாதுகாப்பற்ற இடங்களில்  சென்னை விமான நிலையமும் ஒரு இடமாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது


ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் சென்னை விமான நிலையம் மூலமாகத்தான் வர வேண்டும் என்ற உத்திரவை மத்திய அரசாங்கம் இட வேண்டும் என்று தமிழக் கட்சிகள் மோடியிடம் வேண்டுகோள் விடுவித்துள்ளனர்

சாப்பிடத குழந்தைகளை சாப்பிட வைக்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் சென்னை ஏர்போட்டிற்கு உன்னை அனுப்ப போகிறேன் என்று சொல்லி மிரட்டி சாப்பிட வைக்கிறார்கள்


காதலில் வெற்றி பெற முடியாதவர்கள் செல்லும் இடம் சென்னை ஏர்போர்ட் என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன

மனைவி : என்னங்க உங்க அம்மா ஊர் சுற்றி பார்க்க ஆசைப்படுறாங்க அதனால நீங்க அவங்க சென்னை விமான நிலையமூலமாக இந்தியா சுற்றி பார்க்க டிக்கெட் எடுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்11 comments :

 1. இன்றைய கலாட்டா சென்னை ஏர்போர்டா. நல்ல காமெடி தான். ஆனால் இப்படி கிண்டல் செய்கிற அளவிற்கு தான் இருக்கு நம்ம ஏர்போர்ட்.

  ReplyDelete
 2. நகைச்சுவையாக சென்னை விமானநிலையத்தின் நிலை....

  ReplyDelete
 3. இன்னும் சில விஷயங்கள் நான் கேள்வி பட்டேனே..

  சென்னையில் இருந்து பயணம் செய்யும் எல்லா பிரயாணிகளும் ஹெல்மட் அணிய வேண்டும்.

  சென்னை விமான நிலையம் மூலமாக பயணம் செய்பவர்கள் விமானத்தில் இருந் இறங்கி விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றவுடன் டிக்கட் பணத்தை கட்டலாம்.

  ரெண்டாவது முறை அதே தலை உடைந்தால் ட்ரீட்மென்ட் இலவசம்....

  ReplyDelete
 4. சென்னை ஏர்போர்ட் உங்ககிட்ட சிக்கிடுச்சா.....

  ReplyDelete
 5. அந்த ராஜபச்சே மேட்டர்!!! ஐ லைக் it மா:)))

  ReplyDelete
 6. நான் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.
  எத்தனையோ நாடுகளின் வழியாக சென்னைக்கு வந்திருக்கிறேன்.
  நான் பார்த்த ஏர்போட்டிலேயே மிகவும் சோம்பேறியான வேலையாட்களைக்
  கொண்ட ஏர்போர்ட்டும்.... பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஊழியர் உள்ள
  ஏர்போர்ட்டும் நம் சென்னை ஏர்போர்ட் மட்டுமே....

  ReplyDelete
  Replies
  1. நாங்க யாரு? தமிழன்டா!

   Delete
 7. ட காமெடிங்களா...

  சராசரியா வருசத்துக்கு ஒரு முறை வந்த அனுபவத்துல எல்லம் உண்மைன்னு நினைச்சிட்டேன்...

  ( ராஜபக்சே மேட்டர் டாப் ! )


  ( எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். (


  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr
  ReplyDelete
 8. நண்பரே தங்களை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் வருகை தரவும்

  ReplyDelete
 9. கிண்டலான பகிர்வாக இருந்தாலும் இன்றைய நமது விமான நிலையங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog