உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, February 18, 2014

தமிழ் பெண்ணிடம் பேசும் போது இந்த வார்த்தையைமட்டும் சொல்லாதீங்க! (ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை )ஷாப்பிங்க் போகும் போது ஒரு அழகிய அமெரிக்க பொண்ணை பார்த்தேனுங்க உடனே அந்த பெண்னை பார்த்து யூ ஆர் ஸோ ஹாட் என்றேன். யூ ஆர் நாட்டி என்று சொல்லியவாறு என் பூட்டத்தில் செல்லமாக தட்டி விட்டு சென்றாள்
அதே போல இன்னொரு நாள் ஒரு ஜெர்மன் பொண்ணை பார்த்து யூ ஆர் ஸோ க்யூட் என்றேன் அதற்கு அவள் சிரித்தவாறே தாங்க்ஸ் என்று சொல்லியவாறு ஒரு ஹக் கொடுத்துவிட்டு சென்றாள்..மற்றொரு நாள் ஸ்பெனிஷ் பெண்ணை பார்த்து யூ ஆர் டேம் செக்ஸி என்றேன் உடனே அவள் என் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள்இன்னொரு நாள் சைனிஷ் பொண்ணிடம் யூ ஆர் ஸோ பியூட்டிபுல் என்றேன் அதற்கு அவள் கெக்கேபிக்கே என்று சிரித்தவாறு சென்றாள்.


அதை போலதாங்க இந்தியா வந்த போது ஒரு பெண் அழகான எனக்கு பிடித்த மாம்பழக் கலர் புடவைகட்டி தலைநிறைய மல்லிகை பூ வைத்து சென்றாள் உடனே நான் அவளிடம் நீங்க ரொம்ப அழகாக இருக்கேன்ணு சொன்னேன். உடனே அவள் செல் போனை எடுத்து யாரிடமோ பேசினாள் உடனே நாலைந்து தடிமாடுகள் போல உள்ள ஆட்கள் வந்து என்னை அடித்து துவைத்து போட்டு இனிமே இப்படி எவளிடமாவது சொன்னே தோலை உரிச்சு போடுவோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்..என்னங்க நீங்க சொல்லுங்க தமிழ் பெண்ணை பார்த்து நீங்க அழகாக இருக்கீங்க என்று சொல்வது தமிழ் நாட்டில் மோசமான சொல்லா என்ன?அப்ப அங்கே வந்த என் பொண்டாட்டி என்னங்க இப்படி இருக்கீங்க யாரவது அடிச்சிட்டாங்களா என்று கேட்டாள். அதற்கு நான் சொன்னேன் அடியே தமிழ் நாட்டில் தமிழ் பேசினதுக்காக என்னை இப்படி அடிச்சிட்டு போயிருக்காங்கடி என்று சொன்னேன். நடந்த உண்மையை சொல்லி அவளிடம் அடிவாங்குவதற்கு என்னிடம் தெம்பு இல்லைங்க


இந்த உண்மையை என் மனைவியிடம் சொல்லி போட்டு கொடுக்க வேண்டாம் என்று சசி,ராஜி,உஷா,அருணா,மஞ்சு அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன். இதுக்கு இந்த பொண்ணுங்க பெயரை குறிப்பிட்டு சொன்னேன் என்றால் மதுரைத்தமிழன் அடிவாங்கினாள் சந்தோஷப்படுற முதல் ஆளுங்க இவங்க அதனாலதான் சொன்னேன். அப்ப ஆண்கள் போட்டு கொடுக்கமாட்டாரகள் என்று கேட்குறீங்களா? அவங்க எப்பவும் யாரிடமும் போட்டு கொடுக்க மாட்டாங்க என்னா அவங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை ( எல்லோரும் நம்மளை போலதான் இந்த புள்ளையும் இருக்குதுன்னு நினைச்சுகுவாங்க)அன்புடன்
மதுரைத்தமிழன்23 comments :

 1. ஹலோ அண்ணி! உங்க மெயில் ஐடில ஒரு லிங்க் அனுப்புறேன். அதுல அண்ணா என்னவோ சொல்றாரு பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. நீங்க நல்ல இருப்பீங்க இவ்வளவு சொல்லியும் என்னை மாட்டிவிடுறீங்களே! சரி உங்க ஆசையாவது நிறைவேற அண்ணியோட கரெக்டான இமெயில் அடிஉதை@அண்ணி.காம்

   Delete
 2. துவைச்ச விஷயத்தை கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னிக்கு கூடுதலா ரெண்டு இட்லி, தோசைன்னு திருப்தியா சாப்பிட வேண்டியதுதான்...! அடுத்ததா உங்க ஹவுஸ் பாஸ்கிட்டயும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லிட்டு ஒரு சொம்பு ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதுதான்................
  கவலையே படாதீங்க கட்டு போட்டிருக்க உங்களை பார்க்கறதுக்கு நான்க எல்லாம் குரூப்பா வந்துடறோம்.............!

  இப்படிதான் ஒருத்தங்க எங்கிட்ட வந்து ' நீங்க அழகாயிருக்கீங்க ....' ன்னு சொன்னாங்க... முத வாட்டி சொல்லும் போது அமைதியா போயிட்டேன்... இரண்டாவது முறையும் வந்து சொன்னாங்க பாருங்க... எனக்கு வந்துச்சே கோவம்...." ஹேய்.. முதல்ல கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடுன்னு..." சொன்னேன் பாருங்க..........ஹா... ஹா... !

  ReplyDelete
  Replies
  1. உங்களை பேரழகி என்று சொல்லாமல் விட்டதால்தானே இப்படி கோபம் வருகிறது ....பாவம் அந்த அப்பாவி எப்படி பேசுறதுன்னுகூட தெரியலை..சொல்லுறது பொய் அதிலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்லக் கூட தெரியவில்லை

   Delete
  2. //ஒரு சொம்பு ஹார்லிக்ஸ்//
   குடும்பம் செல்வ செழிப்போட வெளங்கிரும்.

   Delete
 3. ஹாஹாஹா! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை சொன்னீங்களா அல்லது அதற்கு போட்டீருந்த படத்தை படத்திற்காக சொன்னீங்களா?

   Delete
 4. பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள் தலைவா. புரியலையா மனைவியிடம் அடி வாங்குவதிலிருந்து முன்னேறி மற்றவர்களிடமிருந்தும் அடி வாங்குறீங்களே அதைச் சொன்னேன்

  ReplyDelete
  Replies
  1. தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி அதனால் என் தொண்டானாகிய நீங்கள் அடி வாங்க உடம்பை தயார் செய்து கொள்ளுங்கள்

   Delete
 5. அடடா...! கூட்டணி சேர்ப்பதற்கும் கில்லாடியாக உள்ளீர்களே...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. கூட்டணி இல்லையென்றால் வெற்றி பெற முடியாதே? ஆமாம் நம்ம கூட்டணி வெற்றி பெறுமா?

   Delete
 6. பூரிக்கட்டைக்கு ரெடியாயிட்டீங்கனு சொல்லுங்க!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லுறதை பார்த்தா எங்க வூட்டுகாரம்மா கிட்ட நல்லா போட்டு கொடுத்த மாதிரி இருக்கே ?

   Delete
 7. //இனிமே இப்படி எவளிடமாவது சொன்னே தோலை உரிச்சு போடுவோம்//
  இந்த எச்சரிக்கை தமிழ்நாட்டு பொண்ணுகளுக்கு மட்டுமா அல்லது பன்னாட்டு பொண்ணுகளுக்குமானதா

  ReplyDelete
  Replies
  1. தமிழ்னாட்டு பொண்ணு பன்னாட்டுகளில் இருந்தாலும் இதேதான். நார்த் இண்டியன் பொண்ணுங்ககிட்ட தைரியமா சொல்லலாம்

   Delete
 8. அவங்க அடிச்சதில என்ன தப்பு. பொய் சொன்னா அடிப்பாங்க... எந்த தமிழ் ஆண்மகனிடமாவது நீங்கள் அழகு என்று ஒரு பெண் சொன்னால் அவங்க அடிக்க போவதில்லை. ஏனெனில் நாங்க இயற்கையிலே ரொம்ப அழகு.. அவங்க அப்பிடியா????

  ReplyDelete
 9. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

  தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

  ReplyDelete
 10. ஈமெயில் ஐடியும் கிடைச்சாச்சு பாவம் மாட்டி விட்ட என்ன ஆவாரு
  பூரிக் கட்ட ,சட்டி ,பானை ,அம்மிக் குழவி அப்பாடா நினைச்சுப்
  பார்க்கவே கஸ்ரமா இருக்கு வேண்டவே வேண்டாம் தப்பிச்சு போகட்டும் .

  ReplyDelete
 11. இது கூட பரவாயில்லை நண்பா. நான் என் மனைவிய ஒரு முறை நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னேன். உடனே, நீ என்ன தபு பண்ணி இருந்தாலும் பரவாயில்லை, நான் மன்னிப்பேன், என்ன தப்பு பண்ணன்னு உண்மைய சொல்லிடு சொல்லிட்டாங்க.

  ReplyDelete
 12. //தமிழ் நாட்டில் தமிழ் பேசினதுக்காக என்னை இப்படி அடிச்சிட்டு போயிருக்காங்கடி என்று சொன்னேன்.//

  இன்னா ஒரு சமாளிபிகேசன் ஆப் இண்டியா...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
 13. பிள்ளைக்கு காய் நல்லா நசுங்கி போச்சு போல....!

  ReplyDelete
 14. துவச்சிக் காயப்போட்டத விட்டானுங்களே.... வடிவேல் பாணியில் எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாருன்னு மூத்தரச் சந்துக்கு கொண்டு போகலையே...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog