உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 19, 2014

ரஜினிகாந்திற்கு ஒபாமா எழுதிய கடிதம்


அமெரிக்காவில் இந்த வருடம் மிக கடுமையான குளிரும் மிக அதிக பனிப் பொழிவும் இருக்கின்றது. பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ரோடுகளில் போடும் சால்ட்டுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது

இதற்கு காரணம் என்னவென்பதை விஞ்ஞானிகள் ஆராய முற்பட்டபோது இதற்கு காரணம் உலக அளவில் ஏற்பட்ட குளோபல் வெதர் காரணமில்லை என்றும் ஆனால் இப்படி ஏற்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை திறந்தவர் மூட மறந்ததுதான் முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டதால். அமெரிக்க பிரெசிடெண்ட் ஒபாமா மிக அவசர அவசரமாக தலைவர் ரஜினிகாந்த உடனடியாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம்தான் படத்தில் உள்ளது.


அதுமட்டுமல்லாமல் எல்லோரும் விரும்பிபடிக்க கூடிய தளமான அவர்கள் உண்மைகள் தளத்திற்கும் அந்த கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளார்.ஒரு வேளை ரஜினிகாந்திற்கு ஒபாமா அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லையென்றால் இந்த தளத்தில் வெளியிட்ட கடிதத்தை பார்த்தாவது உடனடியாக அவர் தன் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை மூடி அமெரிக்க மக்களை இந்த குளிரில் இருந்து காப்பாற்றுவார் என அமெரிக்க அரசாங்கம் நம்புகிறது.தலிவா எங்களை இந்த குளிரில் இருந்து காப்பாற்று.......அன்புடன்,

மதுரைத்தமிழன்.

14 comments :

 1. ஹ்ம்ம் .... இன்னைக்கி பூரி கட்டையால் அடி வாங்கிய கதை ஒண்ணும் கிடைக்கலையா????? தலைவர்தான் கிடைச்சாரா ???? #கோபம்

  ReplyDelete
 2. வெய்யில்தான் மண்டைக்கு ஏறும்பாங்க... உங்களுக்கு குளிர்ல மண்டை கலங்கிடுச்சி போலிருக்கே.........

  ReplyDelete
 3. உங்களுக்குமா ?......!!!!!!! எனக்கும் கூட கடிதம் அனுப்பி இருந்தார்
  ஆனா விசயம் என்னவென்று சொல்ல மாட்டனே .(இனித் தான்
  யோசிக்கணும் நான் என்ன மதுரைத் தமிழனா இப்படி வயிறு
  குலுங்கச் சிரிக்க வைக்கும் ஐடியாவா வந்து கொட்டுறதுக்கு .
  என்ன அறிவுடா சாமி இதயெல்லாம் வெளியில சொல்லக் கூடாது :))) )
  சரி வந்தது தான் வந்திச்சு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
 4. ஹா...ஹா...கலக்கல்

  ReplyDelete
 5. //இவங்கள எல்லாம் ஏன்பா இன்னும் சுனாமி தூக்கமா இருக்கு // ஒரு இந்திய புலம்பல்

  ReplyDelete
 6. ரஜனிகாந்த் உங்க தளத்தை பார்க்கனும்னு வேற ஆசையா. ஏன் அவர் நல்லா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு.

  பின்னாடி ஒரு காலத்துல அரசியல்ல அடி எடுத்து வைக்கலாம்னு அவரே நினைச்சாக்கூட, அவரை உங்க வலைப்பூவை படிக்க வச்சு வரவிடாம பண்ணிடுவீங்க போல.

  ReplyDelete
 7. ஹாஹாஹா தங்கள் ஹாஸ்யத்திற்கு எங்கள் ரசனை கூடி வருகின்றதே!

  எல்லோரும் விரும்பிப் படிக்கின்றார்கள் இந்தத் தளத்தை என்பதால்தான் தங்களுக்கு அனுப்பிய நகலிலும் தங்கள் படத்தையும் முத்திரை "குத்தி" அனுப்பி உள்ளாரா ஒபாமா? நல்ல வேளை உங்களைக் குத்தாமால் விட்டாரே! (அவரும் பூரிக்கட்டை பூசை வாங்குபவரா?!!!)

  ReplyDelete
 8. திரு. ரஜினிகாந்த் வீட்டு குளிர்சாதனப் பெட்டி கதாவு மூடப்பட்டு விட்டதாம். இப்ப குளிர் எப்படி இருக்கு?

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரர்
  தங்களது நயாண்டி குணத்தை வெகுவாக ரசித்தேன். அழகான கற்பனை. நன்றி சகோதரர்.
  எனது தளத்தில் அவசியம் பார்க்க
  http://pandianpandi.blogspot.com/2014/02/blog-post_19.html

  ReplyDelete
 10. சந்திரமுகி படத்த ஒபாமா பாக்கல போல ஜலதோஷம் பிடிச்சிருந்தா மருந்து சாபிட்டலும் குணமாக ஏழு நாள், சாப்டா விட்டாலும் ஏழு நாள்னு சொல்லிட்டாரே தலீவரு ! அதனால இன்னும் ஒரு ஏழு நாளைக்கு ஓபாமாவ காத்திருக்க சொல்லுங்க .

  ReplyDelete
 11. என்னா நடக்குது இங்க.

  ஒபாமா இந்தியாவுக்கு வர, தமிள்நாட்ல தங்கியிருக்க, TVல சந்திரமுகி படம் பாக்க, எவனோ அவ்ருக்கு லொக்கல் சரக்கு ஊத்திவிட, அவ்ரு ஒடனே லெட்டர எளுத, பேனாவ எடுத்து கையெளுத்து போட, இது ஒங்க கைல கெடக்க. ச்ச இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு முடிவே இல்லாம போச்சு.

  கோபாலன்

  ReplyDelete
 12. ஹா... ஹா... ரசிக்க வைத்தது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog