உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 7, 2014

குடிகாரப்பயலுங்க!இவனுங்க திருந்தவே மாட்டாங்க!!!!
பண்ற அயோக்கிய தனத்தை மறைச்சிட்டு யோக்கினாக வேஷம் போடும் இந்த உலகத்தில் வாரத்திற்கு ஒரு தடவையோ அல்லது மாசத்திற்கு 2 தடவையோ சரக்கு அடிச்சிட்டு ஊரெல்லாம் நான் குடிகாரன் குடிகாரன் என்று தம்பட்டம் அடிக்கும் மதுரைத்தமிழனுக்கு புத்தி சொல்லி திருத்தனும் என்று சக பதிவர் சகோ ராஜி அவர்கள் முடிவு பண்ணி சரக்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்று ஒரு விடியோ எடுத்து அதி அனுப்பி சகோ இதைப் பாருங்கள் என்று சொன்னார்கள்

அந்த விடியோவில் அவர்கள் ஒரு கிளாஸில் தண்ணிரும் இன்னொரு கிளாஸில் சரக்கும் ஊற்றி வைத்துவிட்டு முதலில் ஒரு புழுவை தண்ணிரில் போட்டார்கள் அது சாகவே இல்லை அதே புழுவை எடுத்து அதை சரக்கு ஊற்றிய கிளாஸில் போட்டார்கள் . போட்ட சிறிது நேரத்தில் அது செத்துவிட்டது.உடனே பாத்தீங்களா சகோ சரக்கில் போட்ட புழு செத்துவிட்டது. இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் சகோ சர்க்கின் விளைவுகளை என்று புன்னகையோடும் பெருமிதத்தோடும் விளக்கி இருந்தார்கள்..
அதை பார்த்து விட்டு மதுரைத்தமிழன் வழக்கமாக அடிக்கும் சரக்கைவிட இன்னும் ஒரு கிளாஸ் அதிகமாக அடித்துவிட்டு பதில் இமெயில் ஒன்டு அனுப்பி வைத்தான்.அதில் சகோ ராஜி நீங்கள் அனுப்பி வைத்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதில் நீங்கள் சொன்னபடி சரக்கு அடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கல் எல்லாம் செத்துவிடும் என்று இருந்ததால் நான் வழக்கமாக அடிப்பதை விட கூட கொஞ்சம் அடித்தேன். இப்பதான் எனக்கு நிம்மதி காரணம் என் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் இந்நேரம் செத்து இருக்கும் அதனால் என் வாழ்வு மிக ஆரோக்கியமாக இருக்கும். அத்ற்கு என் நன்றி என்று மதுரைத்தமிழன் பதில் எழுதி இருக்கிறான்என்னங்க என் சகோ ராஜிக்கு நான் எழுதிய கடிதம் சரிதானுங்கோ? கொஞ்சம் சொல்லிட்டு போங்கோங்க...
அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

 1. மதுரக் காரனெண்டா சும்மாவா :P

  ReplyDelete
 2. நீங்க எழுதிய கடிதத்தால ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். நாய்வாலை நிமித்த முடியாதுன்னு!! அதனால, ஒரு ஃபுல் வாங்கி அனுப்புறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்குறதுதான் வாங்குறீங்க ஒரு டஜனா வாங்கி அனுப்புங்க...மறக்காம நம் ஊர் பகோடாவையும் சேர்த்து அனுப்பி வையுங்க.....

   Delete
  2. நாய்வாலை நிமித்த முடியலைன்னா அதை ஒட்டா நறுக்கிடனுமுங்க

   Delete
 3. புல் + பக்கோடா.. குட் காம்பினேஷன்.

  அண்ணே என்ன பிராண்டு உங்களோடது?

  ReplyDelete
 4. ஏற்கனவே படித்த ஜோக் என்றாலும் உங்கள் பாணியில் - ரசித்தேன்.

  ReplyDelete
 5. அவங்க கிளாஸ்ல போட்டது டாஸ்மாக் சரக்கு. நீங்க மட்டும் டாஸ்மாக் இந்தமாதிரி அடிச்சிருந்தீங்கன்னா, படுக்கேல புழுவா நெளிவீங்க.

  கோபாலன்

  ReplyDelete
 6. பிரச்னை புழுக்களை அழிப்பது என்றால் quick and sure remedy எனக்கு தெரியும்.
  சொன்னால் யாரும் அடிக்க வருவார்களோ என பயமாக உள்ளதால் ம்ஹும் ... சொல்லமாட்டேன்.
  நமக்கு எதுக்கு வம்பு .......

  ReplyDelete
 7. உங்களைப் பற்றித் தெரிந்தும் - அதாவது மதுரைத் தமிழனிடமிருந்து என்ன பதில்-லொள்ஸ்- அலம்பல்ஸ் வரும் என்றுத் தெரிந்தும் சகோதரி உங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பினார்கள் பாருங்கள்..!!!.......அவங்க நினைச்சுருப்பாங்க..."எனக்கு இதுவும் வேணும்...இன்னமும் வேணும்னு......அவங்க அந்த மெயில அவங்க அண்ணிக்கு அனுப்பியிருந்தாங்கனு வைங்க.......சரி சரி வேண்டாம் இதற்கும் உங்களிடமிருந்து "உங்கள் ஸ்டைல்" பதில் வரும்.......மிகவும் ரசித்தோம்!!!! மதுரைத் தமிழன்ன்னா கொக்கானான்னா...

  ReplyDelete
 8. அடடே... அந்தக்கா ஒனிக்கு தப்புத் தப்பா அட்டுவைசு பண்ணிச்சுபா... பூச்சி மர்ந்த்துக்கு பதிலா சோம பானம் சுரா பானம்லாம் ரெக்கமண்டு பண்ணிர்ச்சே...! சஸ்ட் மிஸ்ஸுபா...

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
 9. உங்களை மாதிரி ஆட்களுக்கு நல்லதே சொல்லக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
  நீங்களே சொல்லிட்டீங்க, வாலை நிமிர்த்த முடியலைன்னா, ஓட்ட நறுக்கிடணும்னு. ஆனா உங்க மனைவி அந்த வாலை ஒட்ட நறுக்கிக்கிட்டு தான் இருக்காங்க, ஆனா வளர்ந்துக்கிட்டே இருக்கே. பாவம் அவுங்களும் என்னதான் பண்ணுவாங்க.

  ReplyDelete
 10. என்ன கொடுமை சரவணன் இது?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog