உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 8, 2014

சரக்கு அடிக்காதவன் போடும் கூப்பாடு ஆடு நனையுதுன்னு ஒநாய் அழுகிறது போல இருக்கிறது (எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நினைக்க தோணுது? )


சரக்கு அடிச்சிட்டு சாவதனால் சரக்கு கடையை மூடுன்னு கூப்பாடு போடுறவங்க எல்லாம் டாக்டரின் தவறான சிகிச்சையினால் சாவதனால் ஹாஸ்பிடலை இழுந்து மூடுன்னு போராட்டம் நடத்துவதில்லையே அது ஏன்?

சரக்கு அடிச்சிட்டு சாவதை பார்த்து அதனால் குடும்பம் அழுகிறதே என்று கூப்பாடு போடுபவர்கள் பசி பட்டினியால் பல குடும்பம் தினம் தின சாகிறேதே அதுக்கு உதவாமல் நீங்கள் ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறீர்கள் ?


சரக்கினால் பல குடும்பம் சிரழிகின்றது என்று கூப்பாடு போடுபவர்கள் பேஸ்புக்காலும் பல குடும்பம் சிரழிகிறேதே அதற்கு ஏன் நீங்கள் வாய்ஸ் கொடுக்கவில்லை?


சரக்கு அடித்துவிட்டு சாவதைவிட சர்க்கரை வியாதியால் சாவுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு காரணம் தவறான உணவு பழக்கம் உடற்பயிற்சி செய்யாமையும்தானே? உலகில் சர்க்கரை வியாதி அதிகம் உள்ள நாடு இந்தியா அதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் போராடாமல் கருத்து சொல்லாமல் நமது அறிவாளிகள் சரக்கு அடிக்கிறவன் கபோதி முட்டாள் என்று கருத்து வீரர் கண்ணாயிரம் என்று நினைத்து கருத்து சொல்லிப் போகிறார்கள். சரக்கு அடிக்கிறவனும் அவன் குடும்பதை சார்ந்தவன் வேண்டுமென்றால் சரக்கு எளிதாக கிடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஆனால் அந்த சரக்கு வித்த லாபத்தினால் கிடைக்கும் இலவசங்களை பெற்றுக் கொண்டு குடிக்காதவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாமுங்க...

ஆடு நனையுதுன்னு ஒநாய் அழுகிறது போல இருக்கிறது சரக்கு அடிக்காதவன் போடும் கூப்பாடு.. இப்படி இவர்கள் கூப்பாடு போட்டால் சமுகத்தில் தாம் பெரிய மனுசனாக ஆகிவிட்டது போல நினைக்கிறாங்க பல பேர்


அட பெரிய மனுசங்களா உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்குறேன் மனசாட்சி இருந்தா பதில் சொல்லுங்க?

சரக்கு கடையை ஆரம்பித்த முதல்வரையோ அல்லது அதனை மேலும் வளர்த்து கொண்டிருக்கும் இந்நாள் முதல்வரையோ அல்லது சரக்கை அடித்துவிட்டு மேடை ஏறிப் பேசம் வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொள்பவரையோ எதிர்த்து குரல் கொடுக்காமல் சும்மா பேஸ் புக்கிலும் வலைத்தளத்திலும் கருத்துகள் என்று கிறுக்குவதால் என்ன பயன் என்று உங்களால் சொல்ல முடியுமா என்ன?

குடிக்கிறவந்தான் சிரழிகிறான் அதனால் உங்களுக்கு என்ன வந்துச்சு....இல்லை நாங்கள் இந்த சமுகத்தை பற்றி கவலைப்படுபவர்கள் அப்படிதான் நாங்கள் குரல் கொடுப்போம் எங்களுக்கு இந்த சமுகத்தின் மீது அக்கறை உண்டு என்று வாய்கிழிய பேசுபவர்களா? அப்ப ஒன்று முதலில் பண்ணுங்க.. உங்க வீட்டுக்கு வெளியே குப்பையை கொட்டி தெருவை நாறடித்து பல வித நோய்களுக்கு வழி கோலாக இருக்கும் செயலை நிறுத்துங்கள் இன்று முதல் உங்கள் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி அதனால் சமுதாயம் நோயற்ற சமுதாயமாக மாற உதவிவிட்டு அதன் பிறகு இதைபற்றி எவ்வளவு வேணுமானாலும் பேசுங்களேன். பாடி முடியாத பட்சத்தில் பொத்திக்கிட்டு போங்களேன்
அமெரிக்காகாரன் சொன்ன உங்களுக்கு பிடிக்காது. லண்டன்காரன் எப்படி எவ்வளவு குடிக்கலாம் என்று சொல்லுவதை இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்சிரியஸா படிச்சிட்டோம் அதனால் கொஞ்சம் சிரிப்போமா?


டிஸ்கி : தினமலரில் ஒரு வாசகர் சொன்ன கருத்து : மாநாடு முடிந்த பின் தண்ணி கூட சேத்திக்காம rawவோட rawவா சென்னை திரும்பினார் கேப்டன்.

கேப்டனுக்கு புடிச்ச ஆந்திராகாரர் யார் ? ராவ் தான் ராவா இருந்தாதான் கேப்டனுக்கு புடிக்கும்


ஆண்கள் பயப்படும் இரண்டு விஷயங்கள்..! 1) மாரடைப்பு. 2) பார(Bar)டைப்பு.அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments :

 1. நல்ல அருமையான கேள்விகள்தான்! யோசிக்க வைக்கும் கேள்விகளே ! வறுமை, நோய்கள் (ஒரு சில தவிர) எல்லாம் நாமாகத் தேடிக் கொள்பவை அல்லவே! இது நாம் பழகிக்க் கொள்(ல்)வ்து தானே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் தானே!
  த.ம.

  ReplyDelete
 2. உங்கள் இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் பெண்கள். இருந்தாலும் சகோதரிகளுக்காக எனது அன்புக் காணிக்கை.

  தமிழகத்தில் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால்தான் பெருமளவு விபத்துக்கள் நடக்கின்றன. இது நான் கேள்விப்படுவது மட்டுமே.

  அதுமட்டுமல்ல, தமிழகத்தில் எப்போது கணவர் வருவார், அப்பா வருவார் என்று ஒரு குடும்பமே இரவில் காத்திருந்த நிலை மதுவால் மாறிவிட்டது. இங்கே பெரும்பாலும் ஏழை மக்கள்தான் டாஸ்மாக் வரிசையில் நிற்கிறார்கள். ஒரு சகோதரி கூறியதுபோல் 50000 சம்பாதிப்பவன் 1000 ரூபாய்க்குத் தண்ணி அடிப்பதும் 2000 சம்பாதிப்பவன் 100 ரூபாய்க்கு தண்ணி அடிப்பதும் ஒன்றாகுமா.

  இந்த நாட்டில் ஏழைகள் யாரும் பேஸ்போக் பக்கம் போவதில்லை. நீங்கள் தண்ணியடித்துவிட்டு வந்த டாக்டர்களைப் பற்றியா பேசுகிறீர்கள்.

  நீங்கள் இருக்கும் நாட்டில் தண்ணியடிக்கும்போது தரமான உணவு சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சிகளும் செய்கிறார்களா.

  நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் தண்ணி அடிப்பவர்கள் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டா இருக்கிறார்கள்.

  எனது தமிழக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். நீங்கள் குறிப்பிட்ட மூன்று பேரில் அவர் இல்லை.

  இங்கு உங்கள் போல் சிலர் தாங்கள் தண்ணியடிப்பதற்கும் பா........கள்தான் காரணம் என்றும் கூறலாம்.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. சரியா நெத்தியல அடிச்சி சொன்னீங்க இன்னொரு பாய்ண்ட் சேத்துக்கோங்க பெண்கள் நிம்மதியா நடமாட கூட முடியல ஒரு சில இடங்களில் ஒட்டு துணிகூட இல்லாமல் சாலையோரங்களில் விழுந்து கிடக்கிறார்கள் இந்த குடிகாரர்கள். பா ம க வுக்கு வாழ்துக்கள்

   Delete
  2. தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓடுபபவர்கள், மனைவியை அடிப்பவர்கள், பிரச்சனை பண்ணுபவர்கள் சுய கட்டுப்பாடு அற்றவர்கள் ஆவார்கள். தனது தாரதரம் தெரியாமல் குடிப்பவர்கள் செய்யும் தவறு இது. அளவுக்கு மீறி எது செய்தாலும் தவறுதான். அது அமிர்த்மாக இருந்தால் கூட. எது செய்யும் போதும் தன்னிலை அறிதல் வேண்டும்.

   வெற்று சுவரை அசிங்கம் செய்பவர்கள் எவ்வளவு சுகாதார கேடு செய்கிறார்கள்.

   Delete
 3. பின் வரும் பகுதியை பாரா 2 ஆகச் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  பூரிக்கட்டயால் துன்பப் படுபவர்கள் யாருமே பூரிக்கட்டை தயாரிப்பதை நிறுத்தணும் என்றா குரல் கொடுக்கிறார்கள் ?
  இப்படிக்கு
  பூரிக்கட்டயால் துன்பப் படுவோர் சங்கம்

  ReplyDelete
 4. excellent buddy...இவனுங்க சாப்பிடுற அரிசி, எண்ணெய் , ஊறுகா இத்யாதில இல்லாத கேடா ? அத மட்டும் "முள்ளி முள்ளிச் சாப்டாதடா.. அள்ளிச் சாப்பிடு"ம்பானுக ... தின்னுட்டு அட்டாக்-ல சாவுரவன் இந்த நாட்டுல கோடி பேர் ..அது இவனுகளுக்கு கேவலம் இல்ல...எங்கேயோ எவனோ ஓவரா குடிச்சிட்டு செத்துப்போனா வரிசையா வந்திருவானுங்க அட்வைஸ் பண்ண...

  இங்கேயும் வருவானுக பாருங்க..

  ReplyDelete
 5. உண்மைதான் குடிப்பழக்கம் கெடுதி என்றால் அரசே ஏன் நடத்துகிறது! குடிப்பவனை திட்டாமல் கெடுப்பவனை திட்ட வேண்டும்! நல்லா கேட்டீங்க? டிஸ்கி ஜோக்ஸ் சூப்பர்! நன்றி!

  ReplyDelete
 6. டிஸ்கிதான் சூப்பர்

  ReplyDelete
 7. மதுபானக்கடை என்ற படத்தில் தண்ணியடிக்கும் ஒருவர் பேசும் வசனம் -
  "நாங்க ஸ்டடியா நிக்காம இருந்தா தான் அரசாங்கம் ஸ்டடியா நிக்கும். இதுவே நாங்க ஸ்டடியா நின்னுட்டா, அரசாங்கம் தள்ளாட ஆரம்பிச்சுடும்"
  அதனால எப்படிங்க முதல்வர்களையெல்லாம் திட்ட முடியும்????

  ReplyDelete
 8. டிஸ்கி செம காமெடி!

  ReplyDelete
 9. டிஸ்கி படிச்சு சிரிச்சி சிரிச்சு உருண்டுட்டு இருக்கேன், ச்சே கேப்டனை இப்பிடியுமா பலமா காலை வாரிவுட்டு கிண்டல் பண்ணுறது அவ்வவ்...

  ReplyDelete
 10. நீங்க சொல்றதும் சரியாத் தான் இருக்கு
  இங்கு பிரச்சனையே குடிக்கிறதுனால இல்ல
  குடிக்கத் தெரியாம குடிக்கிறதுனாலயும்
  தன் நிலை புரியாமல் அதற்கு அடிமையாவதும்தான்னு
  நினைக்கிறேன்
  அரசியல் வாதிகள் குடி குறித்து அதிகம்
  அலட்டிக் கொள்வதே பெண்கள் ஓட்டுக்காகத்தான்

  ReplyDelete
 11. சென்னையில் பார் முடிந்ததும் சந்துக்குள் வைத்து விற்பனை செய்கின்றார்கள். ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் அதிகமாம். எப்பூடி?

  ReplyDelete
 12. ஆண்கள் பயப்படும் இரண்டு விஷயம் - :))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog