உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 19, 2012

பெண்கள் தேவதைகளா அல்லது நாம் தேடிய வதைகளா?பெண்கள் தேவதைகளா அல்லது நாம் தேடிய வதைகளா?


தேவதைகள் இப்பூவுலகில் பிறப்பதில்லை  ஆண்கள்  காதல் வசப்படும் போது உருவாக்கபடுகிறார்கள். ஆண்கள் அந்த தேவதைகள் மீது அதிக அளவு நேசம் கொள்ளும் போது அந்த தேவதைகள் அவன் தானாக தேடிய வதைகளாக மாறுகின்றன.

ஒரு சாதாரண பெண்ணை ஆண்கள் தேவதை என்று அழைக்கும் போது அந்த பெண்கள் தேவதை என்றால் மிக அழகானவர்கள் என்று பொருள் கொண்டு மிகவும் கர்வம் கொள்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணை தேவதை என்று அழைக்கும் போது அன்பின் வடிவானவள் என்று பொருள் கொண்டு அவளிடம் அன்பை அதாவது காதலை எதிர்பார்க்கிறான்.

இறுதியில் அது அன்புக்கும் அழகுக்கும் நடக்கும் போராட்டமாக மாறி அந்த தேவதைகள் அவன் தேடிச் சென்ற வதைகளாக மாறுகின்றன.

பெண்களே எந்த ஒரு ஆண் உங்களை தேவதை என்று அழைக்கும் போது அழகு என்று எடுத்து கொள்ளாமல் அன்பு என்று எடுத்து அவனிடம் அன்புகாட்டுங்கள் .அதன் பின் காதல் என்பது யாரும் அணைக்க முடியாத தீயாக உங்கள் உள்ளத்தில் என்றென்றும்  நிலைத்து இருந்து வாழ்வில் விளக்காக பிரகாசிக்கும்.


பெண்களே நீங்கள் ஆண்கள் விரும்பும் அன்பு தேவதைகளாக மாற விருப்பமா அல்லது எளிதில் அழியக் கூடிய அழகு தேவதையாக மாற விருப்பாமா உங்களுக்கு?

நீங்கள் அன்பு தேவதையாக மாறும் போது நீங்கள் ஆண்களின் கண்களுக்கு  அழகு தேவதையாகவும் மாறிவிடுவீர்கள்.


இங்கே எனக்கு பிடித்த கவிஞர் முகமது. மேத்தா அவர்களின் கவிதை வரிகளை இணைத்துள்ளேன் நீங்களும் ரசிக்க......

வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்தபோது தூங்கி விட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்

நன்றி : கவிஞர் முகமது. மேத்தா

ஆண்களே நாம் அன்பு தேவதைகளின் வரவிற்காக விழிப்பாக இருப்போமா?நாம் சொல்லுவதை நகைச்சுவையோடு முடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் நான் நெட்டில் படித்த ஒரு ஜோக்கை சொல்லி முடிக்கிறேன்

மக்காஸ் நீங்க சுமாரா லவ் பண்ணினா 35 மார்க்! சூப்பாரா லவ் பண்ணினா 90 மார்க் ! ஆனா சின்ஸியரா லவ் பண்ணினா "டாஸ்மார்க்"தான் மக்கா


மக்காஸ் நீங்க வாங்கிய மார்க் என்ன என்பதை முடிந்தால்  சொல்லுங்கள் !


அன்புடன்
உங்களின் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக.

11 comments :

 1. லவ்‌வே பண்ணாத(பு்த்திசாலி)வனுக்கு எத்தனை மார்க்குன்னு நீங்க சொல்லவே இல்லையே... ஹி... ஹி...

  ReplyDelete
 2. @கணேஷ்

  லவ்வே பண்ணாதவனை கல்யாண என்ற அன்பு சிறையில் தான் "பிடித்து தள்ள" வேண்டும் இது தண்டனை அல்ல டபுள் ப்ரோமோஷன்.

  ReplyDelete
 3. மக்காஸ் நீங்க சுமாரா லவ் பண்ணினா 35 மார்க்! சூப்பாரா லவ் பண்ணினா 90 மார்க் ! ஆனா சின்ஸியரா லவ் பண்ணினா "டாஸ்மார்க்"தான் மக்கா//

  ஆஹா இதையெல்லாம் முன்னமே சொல்லித்தரா
  ஆளில்லாமல் போனார்களே
  இப்படிக்கு
  வழுக்கை விழுந்த பின் கிடைத்த சீப்பை
  வைத்து கண் கலங்குவோர் சங்கம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. லவ் அப்படின்னா என்ன? எங்கே கிடைக்கும்? கிலோ எம்புட்டு?

  ReplyDelete
 5. மக்காஸ் நீங்க சுமாரா லவ் பண்ணினா 35 மார்க்! சூப்பாரா லவ் பண்ணினா 90 மார்க் ! ஆனா சின்ஸியரா லவ் பண்ணினா "டாஸ்மார்க்"தான் மக்கா//

  எலேய் எவம்லேய் அது என்னை உள்குத்தா குத்துறது..?

  ReplyDelete
 6. உண்மையா ரெண்டு பேரும் காதலித்தால் அதன் சுவையே சுவை ஆஹா....!

  ReplyDelete
 7. nanpaa !
  nalla thakaval!

  mu.meththaa avarkalin muzhumaiyaana perai-
  ippozhuthuthaan arinthen!

  ReplyDelete
 8. ஐயாவின் மொழியே நானும் சொல்கிறேன் இதெல்லாம் முன்னமே சொல்லக்கூடாதா ?

  ReplyDelete
 9. தேவதைகள் இப்பூவுலகில் பிறப்பதில்லை ஆண்கள் காதல்வசப்படும் போது உருவாக்கபடுகிறார்கள்.

  தேவதைகள் தேடிய வதைகள் அனுபவமா நண்பா

  அருமையான அன்பிற்கான பதிவு

  பாச்மர்க்கா டாஸ்மார்க்கா என்று முடிவு செய்ய தேவதை வேண்டுமே நண்பா. !!!!!!!!!!!  படித்துப் பாருங்கள்
  சென்னையில் ஓர் ஆன்மீக உலா

  ReplyDelete
 10. //வரம் கொடுக்கும் தேவதைகள்
  வந்த போது தூங்கினேன்
  வந்தபோது தூங்கி விட்டு
  வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன் //”
  நல்ல எடுத்துக்காட்டு
  கல்யாணத்துக்கு முன் தேவதை
  கல்யானத்துக்குப்பின் வதை

  ReplyDelete
 11. //வரம் கொடுக்கும் தேவதைகள்
  வந்த போது தூங்கினேன்
  வந்தபோது தூங்கி விட்டு
  வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன் //”
  நல்ல எடுத்துக்காட்டு
  கல்யாணத்துக்கு முன் தேவதை
  கல்யானத்துக்குப்பின் வதை

  OF COURSE ME TOO "TASMAC"

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog