Monday, February 27, 2012



நன்றி (The  Hindu)


சட்டத்தை மீறிய காவலர்களும் அதை வேடிக்கை பார்க்கும் சட்ட நீதிபதிகளும்

அட இது என் கவுண்டர் பற்றிய எனது கருத்துக்கள்தான் வேற ஓன்றுமில்லைங்க... வந்ததுதான் வந்தீங்க நான் என்ன நினைக்கிறேன் என்பதை பற்றி படித்துவிட்டுதான் போங்களேன்.

என் கவுண்டர் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து

என்கவுண்டர் தேவையில்லை அதற்கு பதிலாக சட்டம் மிக கடுமையாக்க பட வேண்டும் ,தீர்ப்பும் சீக்கிரம் இருக்க வேண்டும். இதுதான்  என் எதிர்பார்ப்பும், மக்கள் எதிர்பார்ப்பும். தப்பு பண்ணுபவணை சிறையில் வைத்து தாலாட்டுபாடுவதால்தான் மக்கள் இந்த மாதிரி என் கவுண்டரை ஆதரிக்கின்றனர் மேலும் தண்டனை கடுமையாக இல்லாததல் மக்கள் மனதில் குற்றம் செய்ய எண்ணம் தோன்றுகிறது. அதனால் மிக கடுமையான தண்டனைகள் தேவை. அரேபியாவில் தரப்படும் தண்டனைகள் என் கவுண்டர் மாதிரியானவைகளாக இருந்தாலும் அவைகள் விசாரித்த பின்னே தரப்படுகின்றன என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

போலிஸாரின் வேலை சட்டத்தை மீறுபவனை பிடிப்பது மட்டுமே, தீர்ப்பு கூறுவது அவர்கள் வேலை அல்ல. அதனால் நீதிபதியின் வேலையை கையில் எடுத்தவர்களும் தண்டிக்க பட வேண்டியவர்களே!

எவருக்கேனும், என் கவுண்டர் நடத்திய போலிஸாரில், யாரேனும் ஒருவர் வாழ்க்கையில் தவறே செய்யாத லஞ்சம் வாங்காத போலிஸார் என்று சொல்ல தைரியம் உண்டா?


நடுரோட்டில் லஞ்சம் வாங்கும் போலிஸாரை அதே இடத்தில் கையை மட்டும் வெட்டினால் இதே போலிஸார் நம்மை பாராட்டி அவார்டு தருவார்களா கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லுங்களேன்

இல்லை பெரிய அளவில் ஊழல் புரியும் அரசியல் வாதிகளை இப்படி என் கவுண்டரில் போட்டு தள்ள இந்த போலிஸாருக்குதான் தைரியம் உண்டா?

எளியவனும் வேறு மாநிலக்காரன் என்பதாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதால் தானே இந்த என் கவுண்டர் நிகழ்த்தப்பட்டது.

இந்த இளைஞர்கள் தவறு செய்ய காரணம் நம் நாட்டை வழி நடத்தும் தலைவர்களே அவர்கள் நாட்டின் வளத்தை பெருக்காமல் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தாமல் தமது சொந்த வாழ்க்கையை மட்டும் மனதில் கொண்டு செயல்படுவதால் இந்த மாதிரி படித்த இளைஞர்கள் பெற்றோர்களைவிட்டு உற்றார் உறவினர்களையும் பிரிந்து தாம் பிறந்த சொந்த மண்னையும் விட்டு பிரிந்து கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களால் முன்னேற முடியவில்லை இறுதியில் அவர்களுக்கு தெரிந்தது இந்த வழிதான். நல்ல நிலையில் வாழ ஆசைபடுவதில் யாருக்குதான் ஆசை இருக்காது.


கொஞ்சம் மனம் விட்டு யோசித்துதான் பாருங்களேன். என் கவுண்டர் மிக தவறு என்பது புரியும்.

9 comments:

  1. //நடுரோட்டில் லஞ்சம் வாங்கும் போலிஸாரை அதே இடத்தில் கையை மட்டும் வெட்டினால் இதே போலிஸார் நம்மை பாராட்டி அவார்டு தருவார்களா கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லுங்களேன்//

    SUMMA NACHUNU SONNEENGA NANBARE

    ReplyDelete
  2. படித்த இளைஞர்கள் பெற்றோர்களைவிட்டு உற்றார் உறவினர்களையும் பிரிந்து தாம் பிறந்த சொந்த மண்னையும் விட்டு பிரிந்து கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களால் முன்னேற முடியவில்லை ///
    தங்கள் கருத்து மிகவும் சரியே .

    ReplyDelete
  3. அரசியல் விளையாட்டில் அப்பாவி இளைஞர்கள் ஐவர் பலியாகி விட்டதோ என நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  4. ஒரு லட்சம் அடிச்சவன் வெளியே அலவலாவிக் கொண்டிருக்கிறான்.10 ரூபா பிட் பாக்கெட் அடிச்சவன் போலீஸ் லாக்கப்ல இருக்கான்.

    ReplyDelete
  5. என்னமோ நடக்கிறது. ரகசியமா இருக்கிறது

    ReplyDelete
  6. Sariyaga sonnergal. Entha oru manithanum Thavaru seya nenaipathu ellai...Samuthayamae avana avvaru matrugirathu. Arumayana pathivu....

    ReplyDelete
  7. என்கவுன்ட்டர் என்பதன் அர்த்தம் எனக்கு சரிவர புரியவில்லை.......
    சட்டப்படி நடவடிக்கை எடுக்க செல்லும்போது எதிரி தாக்கும்போது வேறு வழியில்லாமல் எதிர்தாக்குதல் நடத்துவது என்று தான் நான் நினைக்கிறேன்.ஒருவேளை தவறாக நான் நினைத்திருந்தால் தயவு செய்து திருத்தவும்.
    ஆனால் இங்கு மீடியாக்களும்,பல மேதைகளும் என்சௌண்டேர் முறையில் குற்றங்களை குறைக்க வேண்டும்,அல்லது குறைக்க முடியும் என்பது போல கருத்துக்களை உருவாக்கியுள்ளனர்.அது எப்படி சரியென்றே புரியவில்லை.அம்மாதிரியே பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.அவர்களில் உண்மையில் பலர் கொடும்குற்றம் கூட புரிந்திருக்க கூடும்.ஆனால் அவர்களை சட்டப்படி பிடித்து நடவடிக்கை எடுத்திருக்கவே முடியாதா?சிறு குற்றவாளிகள் திடீரென பெருங்குற்றவாளிகள் ஆகிவிடுவதில்லை.அவர்களை போற்றி பாதுகாத்து பெரிய அளவில் வளர்த்து விட்டவர்களில் எத்தனை பேருக்கு பங்கிருக்கிறது?
    நான் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை.தமிழகத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வர்களது பட்டியலை மட்டும் நினைவு கூறுங்கள்.அவர்கள் வளர்ந்த காலத்தில் எத்தனை பேர் ஆளும்,எதிர்க்கட்சி செயற்பாடுகளில் பங்கேற்றவர்கள் .எத்தனை காவல்துறை அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் ........
    இன்றைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வட மாநில தேர்தல்களில் பங்கேற்பவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு குற்ற பின்னணி இருக்கிறது....
    அரசியலில் வன்முறை பற்றி ஆய்வு நடத்திய வோரா கமிசன் அறிக்கை என்ன ஆனது?
    போலிஸ் கமிசன் அறிக்கைகள் ,மனித உரிமை கமிசன்கள் அறிக்கை என்ன ஆனது?
    என்கவுன்டர் என்றாலே குற்றவாளிகள் கொல்லத்தான் படுவார்களா? உயிரோடு பிடிபடவே மாட்டார்களா?பிடிபட்டால் நடைபெறும் குற்றங்களில் எத்தனை பேருக்கு பங்கிருக்கிறது என்று தெரியவே போகாதா?
    நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி ............

    ReplyDelete
  8. ///இல்லை பெரிய அளவில் ஊழல் புரியும் அரசியல் வாதிகளை இப்படி என் கவுண்டரில் போட்டு தள்ள இந்த போலிஸாருக்குதான் தைரியம் உண்டா//

    ஊழல் அரசியல் வாதிகள் சொல்லித்தான் என்கவுண்டர் எனும் கொலை நிகழ்தபடுகிறது யாரையும் தீர விசாரிக்காமல் சுட்டுகொல்வது கொலையே!

    ReplyDelete
  9. என்கவுண்டர் தேவை அல்ல..அல்ல அவசியம் என்பதே என்கருத்து

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.