உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 8, 2012

வலைப்பதிவாளர்களுக்கு பதிலடி கொடுக்க திமுக தயாராகிறதா?வலைப்பதிவாளர்களுக்கு பதிலடி கொடுக்க திமுக தயாராகிறதா?
 (பொதுகுழுவில் தீர்மானமா)
நம்மை போன்ற வலைப்பதிவாளர்கள் அரசியல் கட்சிகளை பற்றி விமர்சனம் செய்வது எந்த அளவிற்கு அரசியல் கட்சிகளை பாதிக்கின்றது என்பதை திமுக பொதுகுழுவில் பேசிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சாரான தயாநிதி பேசிய பேச்சில் இருந்து உணர முடிகிறது. திமுக பொதுகுழுவில் தயாநிதி பேசியதாக பிரபல தமிழ் இதழ் கிழ்கண்டவாறு செய்தி தந்துள்ளது.

தயாநிதி மாறன் பேசும்போது தி.மு..வின் பிரசார உத்திகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ''இன்றைக்கு இன்டர்நெட், ஃபேஸ்புக், ஆர்குட் என்று சமூக வலைதளங்கள் வந்துவிட்டன. இதைத்தான் இளைஞர்கள் அதிகம் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். இந்த ஏரியாவையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கேயோ கனடாவில் உட்கார்ந்து கொண்டு தி.மு.-வை திட்டி இணையதளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க நாமும் தயாராக வேண்டும்'' என்று சொன்னார்.
அடுத்துப் பேசிய திருச்சி சிவா, ''ஃபேஸ்புக், ஆர்குட் என்பவை படித்தவர்கள் மீடியம்தான். ஆனால், அனைவர் வீட்டிலும் இருப்பது டி.வி! உங்களிடம் இருக்கும் டி.வி. மூலமாக தி.மு..வுக்கு பிரசாரம் செய்தீர்கள் என்றாலே போதும். தி.மு.. முழு வெற்றி பெறும்'' என்று சொன்னார.

மேலை நாடுகளில் இருந்து இங்கே வலைதளத்தில் கட்சியை விமர்சனம் செய்து எழுதும் பதிவாளர்கள் யாரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ அல்லது ஏதாவது காரியம் சாதிக்கவோ எழுதுவதில்லை. அவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு இன்னும் இருப்பதாலும் தன்னை வளர்த்த நாடான தமிழ்நாடு ஒரு நல்ல வளர்ச்சி பெற்ற நாடாகவும் உலகத்தில் உள்ள நாடுகளில் ஒரு முன்மாதிரி நாடாக வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். அதனால்தான் ஒரு சார்பாக எழுதாமல் நடுநிலமையோடு எழுதுகிறார்கள்.

இவர்கள் ஒரு கட்சியை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அந்த கட்சியை அழிக்க வேண்டுமென்றோ அல்லது மட்டம் தட்டி பேசி எழுத வேண்டும் என்பதோ இவர்கள் நோக்கம் அல்ல. இவர்கள் சொல்லும் நிறை குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்து கட்சியை வளர்த்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டுமே தவிர அவர்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு எதிராக பதிலடி  தருவதாக சொல்லி மிரட்டும் செயலில் ஈடுபட கூடாது.

இங்கே ஓன்றை சொல்ல விரும்புகிறேன். பிரபல ஊடகங்கள் உண்மை செய்தியைகளை தருவதாக் சொல்லி ஒரு பட்சமாக தான் சார்ந்த் கட்சிகளுக்காகவோ அல்லது மதங்களுக்காகவோ அல்லது ஆளும் கட்சிகளிடம் இருந்த பணத்தை பெற்று செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் மேலைநாடுகளில் இருந்து இந்த வலைத்தளங்களில் எழுதுபவர்களோ எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சுயநலம் ஏதும் இல்லாமல் உண்மைகளை அப்படியே போட்டு உடைக்கின்றனர். இது மிகவும் ஆரோக்கியமான நிகழ்வு ஆகும்.

நான் எனது பதிவில் பல கட்சிகளையும் பல கட்சிதலைவர்களையும் நன்கு விமர்சனம் செய்து கிண்டலடித்துள்ளேன் அதனால் அவர்கள் எனது எதிரிகள் அல்ல அது போல நானும் அவர்களுக்கு எதிரிகள் அல்ல. நான் விரும்பும் கட்சியையும் விமர்சித்துள்ளேன்.

வாள் முனையில் அல்ல பேனாவின் முனையால் ஆட்சிகள் பல மாறியுள்ளன ஆனால் இந்த நவின காலத்தில் சமுக வலைத்தளங்கள் மூலம் ஆட்சிகள் கவிழ்ந்து புதிய ஆட்சிகள் மாறி உள்ளன. இதை தமிழக அரசியல் கட்சிகள் மனத்தில் எடுத்துகொள்ள வேண்டும்.

என் மனதில் பட்டதை மிக எளிமையாக சொல்லும் மேலைநாட்டில் வசிக்கும் ஒரு எளிமையான பச்சை தமிழன்தான் இந்த மதுரைத் தமிழன்.

7 comments :

 1. நான் எழுத நினைத்ததை இறுதிவரியில்
  நீங்களே எழுதிவிட்டீர்கள்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நடு நிலையான விமர்சனம் எப்போதும் எவராலும் செய்யப்பட்டதேயில்லை.குறைந்தபட்சம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மொழிக்கும் மண்ணுக்கும் இங்கே கொட்டிக்கிடக்கும் குப்பைகளில் எது சாத்யமாக்கக்கூடும் என்பதை தாங்கிப்பிடிக்கும் அறிவுரைகளே இன்றைய தேவை. அனைவருமே ஊழலில் திளைத்தவர்கள் தாம்.
  வில்லவன் கோதை.( பாண்டியன்ஜி )

  ReplyDelete
 3. It seems these fellows looted Rs.30,000 crores Boss. This money has been earned by allowing mal practices in Govt. work, then what will be the fate of those projects ? God save Tamilnadu.....

  ReplyDelete
 4. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html

  ReplyDelete
 5. ஊடகங்கள் தனிநபரது சொத்து .அது பலரிடம் தனது கருத்துகளை கொண்டு சேர்க்கும் சாதனம்.அது பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவிசயங்களை கொண்டு செல்லும் சாதனம்.ஆனால் அதில் நுகர்வோரின் பங்கு என்ன?வெறும் பார்வையாளரே....திணிக்கப்பட்ட கருத்துக்களை பகுத்தறியும் திறனோடு ஆய்ந்து ஏற்றுக்கொள்வதும்,ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஒதுங்கி போவதைத்தவிர வேறொன்றும் செய்ய இயலாது.விருப்பு வெறுப்போடு செயல்படும் ஊடகங்களை என்ன செய்ய முடியும்.அதனால் தான் அறுபதாண்டுகளாக திரைப்படம் ,உள்ளிட்ட சாதனங்களையும்,ஊடகங்களையும் வைத்து மூளை சலவை செய்த திராவிட இயக்கங்களால் வலைப்பதிவின் தாக்கத்தைக்கூட தாங்க இயலாமல் விமர்சித்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 6. இங்கே வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 7. vidunga baas muttaalgalukku naam badhil solla thevayillai nandri
  surendran

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog