உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, February 16, 2012

முத்துச் சிதறல் -04 ( செல்லா காசின் அலம்பல் சத்தம் - யார் அந்த செல்லகாசு? ராமதாஸ்,விஜயகாந்த்,ரஜினிகாந்த்)

முத்துச் சிதறல் -04 ( செல்லா காசின் அலம்பல் சத்தம் - யார் அந்த செல்லகாசு? ராமதாஸ்,விஜயகாந்த்,ரஜினிகாந்த்)


முத்து சிதறல் என்ற தலைப்பில் சிறு செய்திகள், படங்கள், தகவல்களை நான் தருகிறேன். அது பல்சுவை கொண்டதாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.சிரிக்க வைக்கும் செய்தி :

காமெடி பண்ணுகிறதுக்கென்றே கடவுள் கிட்ட வரம் வாங்கிட்டு வந்து இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்இவரால் மட்டும் எப்படி கொஞ்சம் கூட சிரிக்காம அசால்ட்டா எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுதோ தெரியவில்லை..

மதுரையில் கட்சியின் "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' செயல் திட்டத்தை வெளியிட்டு ராமதாஸ் கூறியதில் ஒரு பகுதி .

மதுரை: ""தே.மு.தி..,வுடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.., தேர்தல்களில் வெற்றி பெறாது. தி.மு..,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது,'' என மதுரையில் பா..., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

இதைபடித்ததும் என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை அப்ப உங்களுக்கு ?

------
விஜயகாந்த் கேட்ட ஞாயமான கேள்வி ????

விஜயகாந்த். கடந்த 12-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடந்த  தே.மு.தி.. பிரமுகர் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சில வார்த்தைகள் பேசிவிட்டு, கண்கள் சிவக்க ஜெயலலிதாவை பார்த்து நன்றாக நாக்கை புடுங்குமாறு கேள்வி கேட்டார். அவர் கேட்டது இதுதான்


சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக 26 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு நியமிச்சு இருக்கீங்க. 'தானேபுயல் பாதிச்ச இடங்களுக்குக்கூட இவ்வளவு அமைச்சர்களை அனுப்பலை. எங்களைப் பார்த்து பயப்படுறதுனாலதானே இவ்வளவு அமைச்சர்களை சங்கரன்கோவிலுக்கு நியமிச்சு இருக்கீங்க. இப்போ சங்கரன்கோவில் தொகுதியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வேகவேகமாக் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. எல்லாம் சரி... மிக்சி, கிரைண்டரைப் பயன்படுத்துறதுக்கு கரன்ட் வேணாமா..? இதை எல்லாம் பேசினா, உங்களுக்குக் கோபம் வருது. வேண்டாம்... என்னை சீண்டிப் பார்த்தால், கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாகிடும்.
இது ஞாயமான கேள்விதானே படித்த முதலைமைச்சர் என்று பாராட்டப்படும் ஜெயலலிதா இதற்கு பதிலளிக்க தயாரா?


ரஜினி தெளிவாகத்தான் இருக்கிறார்.

அவருடைய மண்டபத்தில் நடந்த சந்திப்பு என நினைக்கிறேன்-. அந்த சந்திப்பில் ஒரு ரசிகர் கேட்ட கேள்வி: தலைவா இவ்வளவு காலம் உங்களுக்கு ரசிகர்களாக இருந்ததற்கு எங்களுக்கு என்ன செய்தீர்கள்?

ரஜினியின் பதில் : நீங்க நினைத்தைப் போல் மனம் மகிழ படங்களில் நடித்தேன். இதைவிட ஒரு கலைஞன் தன் ரசிகர்களுக்கு என்ன செய்துவிட முடியும்.

அன்று ரஜினி சொன்னது கேலிக்குரியதாக இருந்தாலும் - ஒரு நடிகரிடம் வேறு ஒன்றை எதிர்பார்ப்பது மிக மிக தவறு தானே
======================================= ****=======================
படித்ததில் பிடித்தது:  நன்றி ஜூ.வி

வாழ்க்கை எந்த மாறுதலும் இல்லாமல் வெறுப்பாக இருக்கிறதே?

இருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம்.
நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம்.
அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்படுகிறோம்.
எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம்.
இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம்.
இது எல்லோருக்கும் பொதுவானது!

சிந்திக்க :

நீங்கள் ஏழையாக பிறந்தது உங்கள் தவறல்ல
ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு( பில் கேட்ஸ் )

தத்துவம் :
 யார் ஒருவன் கேள்வி கேட்கிறானோ அவன் அந்த நிமிஷம் மட்டும்தான் முட்டாள் , ஆனால் கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் வாழ்நாள் முழுவதும்  முட்டாள்.

4 comments :

 1. அருமையான பதிவு... சிரிக்க... சிந்திக்க வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. முத்துச் சிதறல் தலைப்புக்கு ஏற்றார்ப்போல அருமை
  குறிப்பாக வாழ்வு குறித்துச் சொன்னது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சுவையானப் பல்சுவைப் பதிவு.
  படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.
  "பெரிய இதயமுள்ளப் பெரியப் பணக்காரனாகனும் .
  அறிவார்ந்த கேள்விகள் கேட்கணும்."
  உண்மை. மெய் . சத்தியம் . நிஜம்.!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog