உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 20, 2017

பன்னீர் செல்வமும் மோடியும் சந்தித்த போது

avargal unmaigal
பன்னீர் செல்வமும்  மோடியும் சந்தித்த போது


மோடி : வாய்யா பன்னீர் எப்படி இருக்கிறே?


பன்னீர் : உங்க தயவில் நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிறேன் அடுத்த வருஷம் விஜய்டிவி அவார்ட் நிகழ்ச்சியில் எங்க்கு சிறந்த சோக நடிகருன்னு  விருது தருப் போவதாக எனக்கு சொல்லி இருக்காங்க


மோடி :  சிரித்து கொண்டே சரி சரி இப்படி பக்கத்தில் வந்து இந்த சேரில் உட்காரு


பன்னீர் : எஜமான் எனக்கு நிற்க அல்லது யாரவது காலடியில் விழுந்து கிடக்கமட்டும் தெரியும்  பெரியவங்க முன்னாள் சேரில் உட்காரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி என்னை வளர்த்து இருக்கிறாங்கமோடி  : சரி சரி இப்ப நான் உன்னை இங்க வரஸ் சொன்னதது ஏதற்காக தெரியுமா?


பன்னீர்: நீங்க கூப்பீட்டா வேற எதுக்கு கூப்பிட போறீங்க எனக்கு பொட்டியை கொடுத்துட்டு வேண்டிய இடத்தில் கையெழுத்து வாங்குவீங்க ஆனால் அதி என்ன எழுதி இருக்கிற்து என்று கூட எனக்கு தெரியாதே?


மோடி : இந்த அளவீற்க்கு உனக்கு தெரிஞ்சதே போதும் இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னா வருகிற குடியரசு தலைவர் தேர்தலில் அதானி அம்பானி மற்றும் வெளிநாட்டு கார்போரேட் கம்பெனி முதலாளிகள் யாரை குறிப்பிட்டு சொல்லுறாங்களோ அவர்களை ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியாக நாம் தேர்ந்தெடுக்கனும் அதுக்காக உனக்கு அட்வான்ஸாக பணம் தருகிறேன் வழக்கம் போல உங்க கட்சி எம்பிக்காளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து  காரியத்தை கச்சிதமாக முடிக்கனும் அம்மா உடல் நலம் சரியில்லாத போது எப்படி அம்மா மறுத்த தீர்மானங்களை ரகசியாமாக நிறை வேற்றினோமோ அதைப் போல இதையும் சத்தமில்லாமல் முடிச்சிடனும் சரியா?


பன்னீர் : உங்க பேச்சிற்கு மறு பேச்சு இந்த அடிமைக்கிட்ட கிடையாது எஜமான்


மோடி : சரி சரி உங்க சின்னம்மா எப்படி இருக்கிறாங்க


பன்னீர் : எங்க சின்னம்மா இப்ப நன்றாக மேக்கப் போட்டு சின்னபாப்பாவா மாறிக்கிட்டு வாராங்க


மோடி : அப்படியா  எல்லாம் நல்லதுக்குதான் ஆமாம் கலைஞர் எப்படி இருக்கிறார்? ஆள் சத்தமே கேட்கவில்லையே?


பன்னீர்; அவர் எமங்கிட்டே இருந்து தப்பிச்சு வந்திருக்கிறார் அதனால் அம்மாவிற்கு அப்போலோவில் கொடுத்த சிகிச்சையை அவர்கள் வீட்டிலே கொடுக்கிறார்கள் அதனால் 75 நாட்களுக்கு அப்புறம்தான் அவரை பற்றி சொல்லமுடியும்.


மோடி: அது சரி கலைஞருக்கு பின்னால் அந்த கட்சிக்கு யார் தலைவராக வருவார்?


பன்னீர் : ஸ்டாலின் தம்பிதான்


மோடி : அப்ப அதிர்ஷ்டம் நமக்குதான்னு சொல்லு அந்த தம்பி துருதிர்ஷ்டம் பிடித்த ராசியில்லாத தம்பிதான் அப்ப நம் காட்டுல நல்ல மழைதான்னு சொல்லு அப்புறம் தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்


avargal unmaigal
பன்னீர் : அவங்களா நீங்க கொண்டு வந்த பணப்பிரச்சனையை மறந்துவிட்டு இப்ப  ஜல்லிகட்டு விஷயத்தில் மிகவும் கோபமாக இருக்கிறார்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் அது பற்றி உங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்றுதான் நினைத்து வந்தேன்


மோடி: பன்னீர் ஜல்லிகட்டு விவகாரம் கோர்ர்டில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாது.


பன்னீர் : என்னங்க எஜமான் ஜல்லிகட்டு விவகாரம் கோர்ட்டில் இருக்கிற்தா அது எனக்கு தெரியாதே அது தெரியாமல் மக்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைச்சிருக்காங்க பாருங்க அவங்க எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் அது சரி எஜமான் நான் இப்ப என்ன பண்ணட்டும்


மோடி : நீ வழக்கம் போல அமைதியாக இருந்து மிக்ஸர் சாப்பிட்டு கொண்டிரு அது போதும்


அன்புடன்
மதுரைத்தமிழன்


கொசுறு :


சுவாதி கொலைக்கு கூவிக் கொண்டிருந்த ஒய்ஜி மகேந்திரன் எஸ்வி சேகர் போன்ற ஆட்கள் எல்லாம் இப்ப ஜல்லிகட்டு விவகாரத்தின் போது மூடிக் கொண்டிருப்பது எதற்கு?


///ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது ///


தமிழக அரசுக்கே அதிகாரம் இருக்கும் பொது மத்திய அரசுக்கும் அதிகாரம் உண்டல்லவா அப்படி மோடி இந்த அவசர சட்டத்தை கொண்டு வரலாமே


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கும் நடிகர் சங்கம் ஜல்லிகட்டிற்கு ஆதாரவாக தீர்ப்பு வரும் வரை எங்கள் படங்கள்  திரையரங்குளில் ஒடாது என்று அறிவிப்பார்களா?


மெரினாவில் கூடி இருக்கும் கூட்டத்தை கலைக்க அரசு புதிய முயற்சியை கையாளப் போகிறதாம் அதற்காக மெரினாவில் நடிகர் விஜய் நடித்த பைரவா படத்தை இலவசமாக மெரினா பீச்சில் போட ஏற்பாடு நடக்கிறதாம்....


முதல்ல பீட்டாவில்  மெம்பர்களாக  இருக்கும்  நடிகர் நடிகைகளை  சங்கத்துல இருந்து நீக்கிவிட்டு அல்லது பீட்டாவில் இருந்து அவர்களை விலக சொல்லிவிட்டு நடிகர்கள் போராட்டத்தில் இறங்கலாம்களத்துக்கு வாங்க

11 comments :

 1. அவர்கள்.. பொய்கள். என்று பெயர் மாற்றலாம். உங்களைப் போன்ற அமெரிக்கர்கள் கொஞ்சம் இந்திய விவகாரங்களில் மூக்கைநுழைக்காமல் இருந்தாலே அது உதவியாக இருக்கும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரொம்ப அறிவு ஜீவியாக இருப்பீங்க போல இருக்கே இந்த பதிவு ஒரு நகைச்சுவை பதிவு என்று கூட உங்களூக்கு புரியவில்லையா என்ன?

   Delete
  2. அமெரிக்கன் என்று சொல்லிவிட்டு முக்கை நுழைக்காதே என்று சொன்னால் எப்படி மூக்கை நுழைப்பதுதானே எங்கள் வேலை

   Delete
  3. இது நகைச்சுவை அல்ல.. நஞ்சு.

   Delete
  4. இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் சொல்லுகிறேன். சுகர்,சாக்லேட் மற்றும் பாதம் பருப்புகள் மனிதர்களுக்கு விஷம் அல்ல ஆனால் அவைகள் அனைத்து நாய்களுக்கு விஷம்.

   Delete
 2. ஒரு அரசியல் பகடி ரசித்தேன் இது என் மின் அஞ்சலில் டெலிவெரி ஃபெயில்ட் என்று வரும் அதில் ஜீமெயில் முகவரிக்குச் செல்வதை அறிகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அட்லீஸ்ட் உங்களை போன்றவர்களுக்காகவது இது பகடி என்று புரிந்ததே அதுவே எனக்கு சந்தோஷத்தை தருகிறது நன்றி

   Delete
 3. ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
  தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

  ReplyDelete
 4. ஹஹாஹ்ஹஹ்ஹ மதுர சகோ சிரிச்சு முடிலப்பா....இதுக்குத்தான் மேல இருக்கற எங்க அம்மா உங்களுக்குத்தான் சப்போர்ட் மகளே நீ சிரித்துக் கொண்டே இரு அப்படினு...ரொம்பவே ரசித்துச் சிரிச்சுட்டேன் பா....மெயில்ல இப்பத்தான் பார்த்தேன் லேடு...துளசியா பார்த்தா உண்டு இல்லைனா நான் இப்ப சொல்ல முடியாது...நாளைக்குத்தான் சொல்லணும் இல்லைனா ரெண்டுபேரும் சேர்ந்து சிரிச்சுருப்போம்..சொல்லிச் சொல்லி....

  கொசுறு சீரியஸா இருக்கேனு பார்த்தா அதுலயும் கடைசி பைரவா.. ஐயோ.....சிரிச்சு ...முடில.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பு உடலுக்கு நல்ல மருந்து அதை உங்களுக்கு தருவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog