Saturday, May 21, 2016




ஜெயலலிதாவின் வெற்றியும் ஒரு தோல்விதான் ஸ்டாலினின் தோல்வியும் ஒரு வெற்றிதான்


ஜெயலலிதாவின் வெற்றி அவர் செய்த சாதனைகளால் அல்ல எதிர்கட்சியினர் மக்களின் மனதை புரிந்துகொள்ளாமல் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்று மட்டும் கருதலாம்...மாறி மாறி வெற்றி வாய்ப்பை கொடுத்த தமிழக மக்கள் இந்த தடவையும் அதே மாதிரியாக கொடுக்க நினைத்தாலும் அதை பெற்று கொள்ள தயாராகமல்  தலைமை இடத்தை சார்ந்த கலைஞரும்  #ஸ்டாலினும் அடுத்த முதல்வர யார் என்று தங்களுக்குள் குழப்பி   தொண்டர்களையும் குழப்பம் அடைய செய்து மேலும் தவறனவர்களுடன் கூட்டணி வைத்துதோல்வியை தழுவி உள்ளனர்.மாற்று கட்சியினருக்கும் கூட்டணியில் சிறிது பங்கு தருவோம் என்று சொல்லி அவர்களை அணைத்து சென்று இருந்தால் இப்படி ஒட்டுக்கள் சிதறாமல் மிக எளிதில் வெற்றி பெற்று இருக்கலாம்  காரணம்  இப்ப பல இடங்களில் மிக குறைவான  வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்று போயிருக்கிறார்கள்.. இல்லையென்றால் இப்பொழுது கலைஞரோ அல்லது ஸ்டாலினோ இப்போது அரியணை ஏறி இருக்கலாம்.


கடந்த தேர்தல் ரிசல்ட்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுக இப்போது வெற்றி பெற்று இருந்தாலும் அதற்கு இறங்குமுகமாகவே இருக்கிறது ஆனால் திமுகவை இப்படி ஒப்பிடும் போது அது தோல்வி அடைந்திருந்தாலும் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட அதிகம் பெற்று இருக்கிறது என்பதுதான் உண்மை.

திமுகவின் இந்த வெற்றியை தோல்வி என்று சொல்வதை விட திமுக இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்று இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் அதுதான் நியாயம்.. முதலாக வந்தாலும் இரண்டாவதாக வந்தாலும் சட்டமன்றத்திற்குள் செல்லவேண்டும் என்ற போட்டியில் இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்று உள்ளே நுழைந்து இருக்கின்றது.தமிழ் சமுகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதல்வராக மட்டுமல்ல எதிர்கட்சி தலைவராக இருந்தும் நல்லது  பலவற்றை செய்யமுடியும். இந்த தேர்தலில் தோல்வியை தழுவிய கட்சிகள் என்றால் திமுக அதிமுக தவிர மற்ற கட்சிகளைத்தான் சொல்ல வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் சிறப்பாக பணியாற்றுவதைவிட ஸ்டாலின் நினைத்தால்  அவரைவிட மிக சிறப்பாக எதிர்கட்சி தலைவராக இருந்து பணியாற்ற வேண்டும் அதற்கு அவர் செய்யவேண்டியதெல்லாம்  சட்டசபையில் இருந்து எதற்கும் வெளிநடப்பு செய்யாமல் பொருமையாகவும் அமைதியாகவும்  இருந்து நினைத்தை சாதிக்க வேண்டும்.

சட்டசபை கூட்டங்கள் நடக்கும் போது அங்கு பேச அனுமதி மறுக்கப்படும் போது அங்கு பேச வேண்டிய விஷயங்களை அன்றே டிவியில் பேசி நாட்டு மக்களுக்கு விளக்கி இதை பேச சட்டசபையில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று சொல்லி பொதுமக்களோடு விவாதிக்க வேண்டும்.


ஜெயலலிதா மற்றும் கலைஞருக்கு அடுத்து தமிழகத்தில் இருக்கும் தலைவர்களில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த தேர்தலில் ஸ்டாலின்தான் கதாநாயகனாக வலம் வருகிறார். அதனால் இனிமேலும் கலைஞர் தாமதம் செய்யாமல் கட்சியின் தலைமை பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்து மகுடம் சூட்டிவிட்டு கட்சியின் ஆலோகராக கலைஞர் செயல்படுவதுதான் சிறந்த வழியாகும்....

M.K.Stalin Verified account
@mkstalin
We respect the peoples verdict & will work as a responsible opposition party. I take this opportunity to congratulate Selvi J.Jayalalitha
இப்படி சொன்னதற்காகவே ஸ்டாலின் அவர்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.


டிஸ்கி:  இணையம், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அதிகாரவர்க்கத்திற்கு எடுத்து சொல்வதற்கு பயன்படுமே தவிர அதிகார வர்க்கம் நினைப்பதை  மக்களுக்கு எடுத்து சொல்லி மாற்றத்தை செயல்படுத்துவதற்கு பயன்படுத்த முடியாது என்பதை தமிழகம் இரண்டாவது தடவையாக நிறுபித்துள்ளது


டிஸ்கி 2 : நோட்டோ வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளை விட மிக அதிமாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரி அந்த தொகுதியை பார்த்து கொள்பவராக இருக்க சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் நோட்டோ வாக்குக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்பது என் கருத்து

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. உண்மையான வார்த்தைகள்!

    ReplyDelete
  2. சரிதான் தமிழா அதுவும் உங்கள் டிஸ்கி 1 நான் முதலில் சமூக வலைத்தளங்களின் கருத்துகளால் நட்சத்திர கிரிக்கெட்டை மக்கள் ஆதரிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட தேர்தலுக்கும் அவ்வாறு நிகழலாம் என்று நினைத்தேன். இறுதியில் அதுவும் மாறியது கருத்துக் கணிப்புகளினால்...ஆனால் உங்கள் டிஸ்கி சரியே என்று இப்போது தோன்றுகின்றது.

    டிஸ்க்கி 2 எனது கருத்தும் அதுவே.....

    கீதா

    ReplyDelete
  3. ஸ்டாலின் அவர்களைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளது ஏற்கத் தக்கது. தக்க சமயத்தில் கருணானிதி செய்யாமைதான் இந்தத் தோல்விக்கு ஒரு பெரும் காரணம் என்று நினைக்கிறேன். பெருந்தன்மையாக கருணானிதி விலகி ஸ்டாலினை முன்னிறுத்தியிருந்தால் இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

    ஆனால், ஜெவைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. 5 வருடம் ஆட்சி, நிறைய எதிர்ப்புக்குரல்கள், மீடியாவில் விளம்பரங்கள், அவருடன் கூட இருந்த தேதிமுக எதிர்ப்பு, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு, இவை எல்லாரையும் மீறி ஜெ. வெற்றிபெற்றுள்ளார். இது மக்கள் அவர்மேல் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.