Wednesday, May 18, 2016



தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் மதுரைத்தமிழனின் கருத்து கணிப்பு ரிசல்ட்

 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் இறுதியில்  வெளியிட்டு இருக்கிறேன். எனது கருத்து கணிப்பு மிக சரியாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். இந்தியாவில் உள்ள மீடியாக்களில் வந்த ரிசல்ட் கூட தவறாகும் வாய்ப்புண்டு ஆனால் எனது பதில்களில்  தவறே இருக்காது


தமிழக ப்ள்ஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த எந்த மாணவர்களும் தாங்கள் கடினமாக படித்ததினால் அதிக மதிப்பெண் எடுத்தோம் என்று கூறாமல் பள்ளி நிர்வாகத்தினரும் டீச்சரும் பெற்றோர்களும் ஊக்கபடுத்தியதினால் அதிக மார்க் எடுத்தோம் என்று டிவி பேட்டியில் சொல்லி இருக்கின்றனர். இதை பார்தத்தும் என் மனதில் எழுந்த கேள்வி இதே ஆசிரியரும் நிர்வாக்த்தினரும்தானே மற்ற மாணவர்களுக்கு சொல்லிக் ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும் அப்படியென்றால் மற்றவர்கள்  மட்டும் ஏன் அந்த  அளவிற்கு மார்க் எடுக்கவில்லை.மாணவர்களே உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் அதில் தவறு இல்லை... ஆனால் அந்த உதவியை பெற்று நீங்கள் கடினமாக உழைத்ததினால்தான் நீங்கள் வெற்றி பெற முடிந்தது. அதற்க்காக நீங்கள் பெருமைபடுங்கள்

ப்ள்ஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஒருத்தர்  நான் மேலும் நன்றாக படித்து வருங்காலத்தில் பாரதப் பிரதமராக வர ஆசைபடுகிறார் என்று பேட்டி அளிக்கிறார். இவ்வளவு நன்றாக படித்தும் இவருக்கு பொது அறிவு இல்லையே...டீக்கடை வைச்சவரே பிரதமாராக முடியும் இந்த காலத்தில் பிரதமருக்கு அதிகம் படிக்க வேண்டியதில்லை. பிரதமராக போலி பட்டம் இருந்தால் மட்டும் போதுமே



570 கோடி பணம் கண்டெய்னரில் முடங்கிகிடக்கிறதாம் தமிழ்நாட்டில் இது வங்கியின் பணம்தான் என்றால் அதை இத்தனை நாள் முடக்கிவைக்கலாமா? அது தவறு இல்லையா?



நாளைய தேர்தல் முடிவுகள் இப்படிதான் இருக்கும்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
தமிழக மக்கள் விரும்பி வாக்களித்தபடிதான் இருக்கும். இதுல என்ன சந்தேகம்

நண்பர் விசுவின் தேர்தல் முடிவுகள்

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. சுட சுட.. யார் ஆட்சி அமைப்பார்கள்.. Election Results 2016



அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. ம்க்கும்...இதுதானே சேட்டை..நானும் ஆவலா படிச்சு..இன்னொரு ஏப்ரல் 1 ஆச்சு....ஆனாலும்...இன்று அதுதானே? அருமை தமிழா...

    ReplyDelete
  2. தமிழக மக்கள் விரும்பி வாக்களித்தபடி
    அம்ம்ம்ம்மாவே முதலிடத்தை பிடித்திருக்கிறார்...

    ReplyDelete
  3. ஹஹஹஹ உங்க தலைப்பைப் பார்த்ததுமே இது கலாய்த்தல் என்று தெரிந்துவிட்டது...மதுரைத் தமிழனைப் பற்றித் தெரியாதா என்ன..ஹஹஹஹ்ஹஹ் ஆனால் விசுவின் வீடியோ சர்ப்ரைஸ்.

    ஹும் முடிவுகள் தெரிந்துருக்குமே...மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான்....அட போங்கப்பா..மக்கள் எல்லோரும் அனஸ்தீசியாவுல....நான் கடைசில கூட கொஞ்சம் நம்பிக்கை வைச்சேன்....சமூக வ்லைத்தளங்களின் எழுத்துகள் சிறிது மாற்றம் கொண்டுவரும் என்று ஏமாற்றம்....

    கீதா

    ReplyDelete
  4. மாணவ மாணவிகளைக் குறித்துச் சொன்னது மிகச் சரியே....

    கண்டெய்னர் மர்மம் எப்போ வெளியாகும் தமிழா? உங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி வந்துச்சா...முதல்ல உங்ககிட்டருந்துதானே செய்தி வரும் அதான்...

    கீதா

    ReplyDelete
  5. விசு கணக்குப் பிள்ளையாச்சே அதான் 570க்குக் கணக்குப் போடுறார் போல ஹஹஹ

    கீதா

    ReplyDelete
  6. அடடா! படித்தவர் பிரதமாராகும் வாய்ப்பை கெடுத்துவிடுவீர் போலிருக்கிறதே!
    இதற்கு முன் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரிந்து கொள்ள ஆவல். அதை யாரும் வெளியிட மாட்டேன் என்கிறார்களே.?

    ReplyDelete
  7. சொல்லிக் கொடுத்ததைச் சொன்னோம்ப்பா,,,

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.