Sunday, May 15, 2016



யாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமா?

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று குரல் தமிழகமெங்கும்  ஒலிக்கின்றது. அதற்காக அதிமுக ஆட்சியில் இருந்து மீண்டும் திமுக ஆட்சிக்கு மாற்றம் கொடுத்துவிடுவதால் எந்த வித நன்மைகளும் இல்லை. அப்படியானால் யாருக்கு வாக்குகளிப்பது என்பதில் உங்களுக்கு மிக குழப்பமாக இருக்கலாம். அந்த குழப்பத்தில் இருந்து வெளி வந்து சரியாக யாருக்கு ஊட்டுப் போடலாம் என்று சொல்லுவதே இந்த பதிவின் நோக்கம்..


மக்களே இந்த கட்சிதான் ஜெயிக்கும் என்று நினைத்து ஜெயிக்கப் போகும் கட்சிகளுக்கு உங்கள் வோட்டுகளை போட்டுவிடாதீர்கள் அல்லது  சாதியை  வளர்க்கும்  கட்சிகளுக்கும் உங்கள் வாக்குகளை போட்டுவீடாதீர்கள் அது போல உங்கள் பகுதியில் உள்ள சாதிக்காரர்களின் வாக்கை அள்ளிவிட பெரிய கட்சிகள் உங்கள் சாதிக்காரர்களை நிறுத்தினால் அவர்களுக்கும் உங்கள் வாக்குகளை போட்டு விடாதீர்கள். இலவசங்களை அள்ளித்தரும் கட்சிகளுக்கும் உங்கள் வாக்குகளை அள்ளி போட்டுவீடாதீர்கள். அல்லது வாக்காளர்கள் நம்ம சாதிக்கான் அதானல் அவனுக்கு வாக்குகளை போடுவோம் என்று நினைத்து போட்டுவீடாதீர்கள். எங்கள் குடும்பம் பரம்பரம் பரம்பரையாக் எங்கள் குடும்பம் இந்த கட்சிக்குதான் வாக்களிக்கும் அதனால் நானும் இந்த கட்சிக்குதான் வாக்களிப்பேன் என்று சொல்லி வாக்களிக்காதீர்கள்.

அதற்கு பதிலாக உங்கள் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களில் யார் மிக நல்லவர் அதில் யார் இந்த தொகுதிக்கு நல்லது செய்வார் அல்லது தமிழகத்திற்கு நல்லது செய்வார் என்று நினைத்து  வாக்களியுங்கள் அது போல உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் தன் தொகுதி மக்களின் நன்மைக்களுக்காக தன் கட்சி தலைவர்களையும் எதிர்த்து போரடாடி தன் தொகுதி மக்களுக்கு நன்மை செய்பவரா என்று நினைத்து அதற்கேற்றவாரு வாக்களியுங்கள்.கடந்த முறை வெற்றி பெற்று ஆட்சி செய்த கட்சியின் வேட்பாளார்கள் தாங்கள் சொன்னபடி ஏதும் சிறிதளாவாவது செய்தார்களா என கவனித்து  அப்படி செய்யாதவர்களை அல்லது அவரது கட்சியினை  சுத்தமாக மறந்துவிடுங்கள், அது போல  உங்கள் தொகுதியில் நிற்கும் புது நல்ல வேட்பாளர்கர்கள் மற்ற பெரிய கட்சியின் வேட்பாளர்களைவிட தகுதி சற்று குறைவாக இருந்தாலும் அவருக்கு வாக்களியுங்கள்,இப்படி செய்வதன் மூலம் நல்லவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் இது போன்ற நல்லவர்கள் எதிர்காலங்களில் தைரியமாக வர  ஒரு வாய்ப்பை தரும் அதன் மூலம் ஒரு மாற்றம் நிச்சயம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு, இப்படிபட்டவர்கள் முன் வரவர நாட்டை ஆளுபவர்களுக்கும் அந்த தொகுதி எம் எல் ஏக்களுக்கும் நாமும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் இல்லையென்றால் மக்கள் நம்மை தூக்கி ஏறிந்துவிடுவார்கள் என்று சிறிதளவாவது ஒரு பய உணர்ச்சி வரும்.

அதனால் மக்களே ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் உங்களுக்கு உங்கள் உரிமைகளுக்காக பேச வாய்ப்பு கிடைக்கிறது. அதை மிக சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படும்.

மக்களே அடியாத மாடு படியாது என்று சொல்லுவார்கள் அதனால் உங்கள் தொகுதியில் உள்ள நல்ல வேட்பாளர்களுக்கு அல்லது மாற்று கட்சிக்கு வாக்களியுங்கள். இந்த தேர்தலில் நீங்கள் கொடுக்கும் அடி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மிக சரியானபாடத்தை கொடுக்க வேண்டும். மக்களை மடையர்கள் என்று நினைப்பவர்கள் மாற வேண்டும். அதனை உங்களால்தான் செய்ய முடியும் அதனை நீங்கள் செய்வீர்களா?


உங்க தொகுதி வேட்பாளர்களைப் பற்றி கடைசி நேரத்துலயாவது தெரிஞ்சுக்கிட்டு, அப்புறமா ஓட்டுப் போட போங்களேன்..!வேட்பாளரின் கிரிமினல் கேஸ் விவரம், படிப்பு, சொத்து விவரம் எல்லாம் அடங்கி இருக்கிறது. தொகுதிப்பெயர் கொடுத்து தேட மிக வசதியாக இருக்கிறது.


டிஸ்கி : எது எப்படியோ இந்த தமிழக தேர்தலின் முடிவுகள் தமிழக மக்கள் தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறார்களா அல்லது முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லப் போகிறார்களா என்பதை தெள்ள தெளிவாக சொல்லிவிடும்

எனது நண்பர் பாடிய பாடல் மறக்காமல் கேட்டு செல்லுங்கள்
சொந்த செலவில் சூனியம்....I Dont know why...



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. அது எப்படிங்க...பக்கத்துல இருந்து பார்க்கிற மாதிரி எழுதுறீங்க?

    ஆனாலும் தமிழா...பரபரப்பான உங்கள் வேலைகளுக்கிடையேயும் சிந்தித்து நீங்கள் எழுதும் எழுத்துகள் வரங்கள்....

    இன்னும் இன்னும் எழுதுங்கள் தமிழா....

    ReplyDelete
  2. Just Check this candidate assets

    http://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=93

    ReplyDelete
  3. SUPER SONG. WELL WRITTEN AND SUNG

    ReplyDelete
  4. எல்லாம் சரி! இந்த பாட்டை விசுவின் மனைவி கல்யாணத்திற்கு முன்பு கேட்டு இருக்கமாட்டர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! பாட்டைக்கேட்டோம்! நாங்களும் சொந்த செலவில் சூனியம்...

    அதானே! விசு மட்டும் தான் கலாய்ப்பாரா என்ன?

    ReplyDelete
  5. கடைசி நேரத்திலாவது வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது......

    ReplyDelete
  6. சிந்திப்போம். அவ்வாறே செய்வோம்.

    ReplyDelete
  7. அடியேனின் பாடலை இங்கே வெளியிட்டதற்கு மிக்க நன்றி. தாங்கள் என்னை இதற்க்கான வீடியோ செய்து வெளியிடும்படி தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தீர்கள். நேரமின்மை காரணத்தினால்.. அது முடியவில்லை. இதே பாட்டு 2021 தேர்தலுக்கும் தேவை படும் அல்லவா. அப்போது வீடியோ போட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  8. யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் உண்மைதான் மதுரைத் தமிழா. இதை நான் தேர்தல் நாளின் முதல் நாள் இரவு அதுவும் அவசர அவசரமாக அதுவும் மறு நாள் பயணமும் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் பார்த்து ஓட்டு அளித்தேன். வலைப்பக்கம் வர முடியாமல் இருந்ததால் உங்கள் பதிவை மிஸ் செய்துவிட்டேன். உங்கள் பதிவை முன்னரேயே இதைப் பார்த்திருந்தால் இன்னும் சற்று ஆராய்ந்திருக்கலாம். நல்ல பதிவு...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.