Monday, May 2, 2016

இந்தியர்களின் மனது இவ்வளவு அசுத்தமானதா?


கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் போது கனெக்டிங்க் விமானதிற்காக மும்பை விமான நிலையத்தில் வெயிட் பண்ண வேண்டி இருந்தது. அப்போது அங்கிருந்த கடையில் மசாலா டீ என்ற பெயரை பார்த்தது சாப்பிட ஆசையாக இருந்தததால் அதற்கு 100 ரூ கொடுத்து ஆர்டர் செய்துவிட்டு கனவுகளுடன் ஆக நம்ம இந்தியாவில் மசாலா டீ சூப்பராக போடுவார்கள் ஸ்டாரங்கான பாலில் இஞ்சி ஏலக்காய் புதினா எல்லாம் போட்டு சூடாக   இருக்குமே என்று நினைத்த போது அவர்கள் சூடான மிகவும் தண்ணியான பாலில் டிப் டீ பாக்கெட்டை போட்டு சுகர் அங்கே இருக்கிறது போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் இதற்கு 100 ரூபாயாம். அடப்பாவிகளா அதே டிப் டீ பாக்கெட் இங்கே அமெரிக்காவில் 100 பாக்கெட் கொண்டவை 2 டாலருக்கு கிடைக்கும் அதில் ஒரு டிப் டீ பாக்கெட்டை போட்டு  2 டாலருக்கு மதிப்பான இந்திய ரூபாயை கொள்ளை அடித்துவிட்டார்களே என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த சேரில் உடகார்ந்து குடித்து கொண்டு இருந்தேன்..


அப்போது அருகில்  வந்து அமர்ந்த ஒரு இந்திய இளம் தம்பதிகள் அந்த கடையில் சிற்றுண்டியையும் காப்பியையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். நான் டீ சாப்பிட்டு விட்டு அருகில் இருந்த குப்பை கூடையில் எனது டீ கப்பை போட்டுவிட்டு சுற்றி நடப்பவைகளை கவனித்து கொண்டிருந்தேன்...


அப்போது அருகில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் சாப்பிட்ட பின் குப்பைகளை தங்களது பெஞ்சுக்கு அடியில் வைத்தனர் அவர்கள் சாப்பீட்ட போது கிழே சிந்திய கெட்சப்பூம் அப்படியே இருந்தது அதை டிஷ்யூவை வைத்தும் துடைக்கவில்லை. நான் நினைத்தேன் அவர்கள் எழுந்திருக்கும் போது அதை அவர்கள் குப்பை கூடையில் எடுத்து போடுவார்கள் என்று. ஆனால் அவர்கள் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும் எழுந்திருந்து செல்ல முற்படும் போது நான் எக்ஸ்க்யூஸ்மீ நீங்கள் வைத்த குப்பை இன்னும் சேருக்கு அடியில் இருக்கிறது என்று சொன்னேன்.
http://avargal-unmaigal.blogspot.com/2011/11/dirty-mind.html


அதற்கு அவர்கள் இருவரும் நக்கலாக என்னை பார்த்து சிரித்துவிட்டு வேண்டுமானல் நீங்கள் தூக்கி போடுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டனர். அவர்கள் வயதானவர்களோ அல்லது குப்பை கூடை தூரமாகவோ இல்லைனர்.  அருகில் இருந்த மற்றவர்களும் என்னை ப்பார்த்து சிரித்தனரே தவிர அந்த இளம் தம்பதிகளை ஒன்றும் சொல்லவே இல்லை

இப்படி செய்யும் இந்தியாவில் வசிக்கும் இளம் தம்பதியினர்தான் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்ததும் இந்தியாவை டர்ட்டி ப்ளேஸ் என்று கிண்டலும் கேலியும் செய்கின்றனர். இப்படிபட்ட படித்த ஆனால் நல்ல மனது இல்லாதவர்களை வைத்து கொண்டு இந்தியா சொர்க்கம் போல இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறுதான்.

இப்படிபட்ட அசுத்த மனதுள்ளவர்கள்  வசிப்பதினால்தான் இந்தியா நாறுகிறதே தவிர அசுத்தமான தெருக்களால் அல்ல

இந்திய அசுத்தமான நாடு அல்ல அங்கு வாழும் மனிதர்களின் மனம்தான் அசுத்தமானது.

டிஸ்கி: பொது இடங்களை நாம் முடிந்த வரையில் அசுத்தம் செய்யாமல் இருக்கவேண்டும் மேலும் அப்படி அசுத்தம் செய்பவர்களை யாரவது தட்டிக் கேட்டால் முடிந்தால் அருகில் உள்ளவர்கள் சேர்ந்து தட்டி கேட்க வேண்டும் அதைவிட்டுவிட்டு நாம் அவர்களோடு சேர்ந்து சிரிக்க கூடாது..அப்படி சிரித்தால் நம் நாட்டை பார்த்து மற்ற்வர்கள் ஏளனமாக சிரிக்கும் நிலை ஏற்படத்தான் செய்யும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நச்சுன்னு ஒரு பதிவு. வீட்டை சுத்தமா வைக்கனும்னு தெருவில குப்பை போடுவான்.அந்த தெருவில கால் வச்சுத்தானே வீட்டுக்குள்ள வரணும்னு நினைக்க மாட்டான்

    ReplyDelete
  2. நிஜம் தான்!இங்கேயும் ரூரிஸ்டாக வருபவர்கள் நடுத்தெருவில் சத்தமாக பேசுவதும், பாதைகளில் விதிகளை கவனிக்காமல் குறுக்கே நடப்பதும்,குப்பைகளை கண்டபடிஎறிவதும் ஹோட்டல் ரூம்களில் பத்திக்குச்சி முதல் குளியலறை தரையில் நீரை கொட்டி நீச்சடிக்கும் படி அசுத்தம் செய்பவர்களாயும் பல சங்கடங்களை கண்டிருக்கின்றேன்!!

    முக்கியமாக கடைகளில் இவர்கள் உண்வுகளை ஆர்டர் செய்து விட்டு கேன்சல் செய்வதற்காக பிரச்சனை படுத்துவது கடைகளில் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காமல் கண்டபடி சிதறடிப்பது என பலவகைகள், குப்பை போட போட்டிருக்கும் பைகளில் ஊதுபர்த்தி கொழுத்தி வைத்திருப்பார்கள்,அது உருகினால் நெருப்பு பிடித்து விடுமே என யோசிக்க மாட்டார்கள்.

    இந்தியர்களுக்கான குருப் சாப்பாடு என்றாலே முதலில் காசை வாங்கிக்கொண்டு தான் சாப்பாடு கொடுகக் வேண்டும் எனும் படி பேசிய காசை தரவே மாட்டார்கள்.இப்படி நிரம்ப சங்கடங்கள்.

    ஆடைகளிலும் அலங்காரங்களிலும் இருக்கும் பகட்டும் ஆடம்பரமும் செயல்களில் இருக்காது. ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என புரிவதே இல்லை!



    ReplyDelete
  3. வேதனையான உண்மை...

    ReplyDelete
  4. நானும் சிலரை இப்படிச் சொல்லி, அவதிப்பட்டதுண்டு. “வந்துட்டாருய்யா சுத்தம் பத்தி க்ளாஸ் எடுக்க!” என்று சொல்லி சிரித்தபடி செல்வார்கள். நாட்டின் சுத்தம் நம் கையிலும் இருக்கிறது என்பது புரிந்து கொள்ளாதவர்கள்.

    ReplyDelete
  5. மதுரைத் தமிழன்... இந்த மாதிரி ஆட்களோடு நீங்களும் பிரயாணம் செய்து அடுத்த தேசத்தில் அவர்கள் இறங்கும்போது பார்த்தால், அங்குள்ளவர்களைவிட குப்பையை, அதற்குரிய இடத்தில் போடுவார்கள் ('நடிப்பார்கள்).

    லண்டனில் சரவணபவன் அமைந்துள்ள ஈஸ்ட் ஹாமில் ஒருவர் சொன்னார். முன்பு அங்கு நிறைய பிரித்தானியர்கள் இருப்பார்களாம் (80 சதவிகிதத்துக்கு மேல்). பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் (பொதுவாக வடவர்கள்) அங்குவந்து வசிக்க ஆரம்பித்ததும், அவர்கள் கண்ட கண்ட இடத்தில் துப்பும் பான்/வெத்தலைபாக்கினால், கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்ட் ஹாமிலிருந்து கிளம்பிவிட்டனர். இப்போது 40%விகிதத்துக்கும் குறைவாகவே ஒரிஜினல் பிரித்தானியர்கள் வசிக்கின்றனர் என்றார். உண்மையோ பொய்யோ.. நம் மக்கள் காவிக்கலரை வாயிலிருந்து துப்புவது (அதுவும் குறிப்பாக வடவர்கள்) உண்மை.

    ReplyDelete
  6. உண்மை சுத்தம் பிறப்பிலிருந்தே கற்று கொடுப்பதில்லை...சமூகம்...பொறுப்பற்ற தன்மை தான் எங்கும் நீக்கமற....வெளிநாட்டை வியக்கும் நாம் அவர்கள் பண்பை கற்றுக்கொள்ள மறுக்கின்றோம்...உடை மாறினால் போதுமா..?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.