Wednesday, May 25, 2016



கோடைகாலத்தில் இதை தவிருங்கள் (கண்ணுக்கு குளிர்ச்சி ஆனால் உடம்புக்கு சூடு )


இங்கு (நீயூஜெர்ஸி) இன்று வெயிலின் அளவு 87 டிகிரி ஃபாரன்ஹீட் அடுத்து வரும் இரண்டு நாளும் 91 டிகிரி ஃபாரன்ஹீட்டாம்... அட சாமி தாங்க முடியலைடா என்ன குளிராக இருந்தாலும் தாங்க முடிகிறது ஆனால் இந்த வெயிலின் தாக்கம்மட்டும் தாள முடியலை...... இதை விட அதிகம் வெப்பம் உள்ள தமிழகத்தில் நம் தலைவர்கள் எப்படித்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்களோ பாவம்....



சரி இந்த வெயிலின் வெப்பத்தை எப்படி சமாளிப்பது என்று வீட்டுக்குள்ள ஏசியை போட்டுவிட்டு  கூகுலில் சர்ச் செய்த போது கண்ணுக்கு குளிராக இருக்கும்  படங்களை கூகுல் தேடி தந்தது. உண்மையிலே பார்க்க பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் பார்த்து முடித்த பின் உடல் முழுவதும் தனலாக கொதித்தது. உடனே காய்ச்சல்தான் நமக்கு வந்திருக்கிறது என்று உடனே டாக்டரிடம் சென்றால் அங்கே பெரிய க்யூ இருந்தது வந்திருந்த எல்லோரும் இந்தியர்கள்தான் எல்லோருக்குக் காய்ச்சலாம். என் முறை வந்ததும் டாக்டரிடம் காண்பித்த போது, டாக்டர் கேட்டார் என்ன சார் நீங்களும் கூகுலில் சேலை கட்டி இருக்கும் பெண்களின் படத்தை பார்த்தீர்களா என்று கேட்டார். நான் உடனே அது எப்படி சார் உங்களுக்கு தெரியும் என்று கேட்டதற்கு இங்கே வெயில் அதிகம் இருந்தால் நம் இந்தியர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று இந்த படங்களை பார்த்துவிட்டு உடம்பை சூடாக்கி கொண்டு அதன் பின் தனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது என்று பயந்து போய் ஓடி வருகிறார்கள் இதோட இன்று நீங்கள் நூறாவது ஆள் சென்று சொல்லி சிரித்துவிட்டு ஒரு ப்ரிஸ்க்ரிப்பஷன் எழுதி கொடுத்து ரிசஷ்பசினில் இதை வாங்கி கொண்டு உபயோகப்படுத்தி வாருங்கள் என்று சொல்லி  அனுப்பினார்.






அவர் கொடுத்த  ப்ரிஸ்க்ரிப்பஷனில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தால் நவரத்தின ஆயில் என்று எழுதி இருக்கிறது. எப்படி எல்லாம் டாக்டர் கொள்ளை அடிக்கிறார்கள் பாருங்கள்...


ஹும்ம்......டாக்டரிடம் போனதை மனைவியிடம் சொல்ல முடியாது சொன்னால் பூரிக்கட்டை பறக்கும் அப்புறம் எமர்ஜென்ஸி வார்ட்டில்தான் அட்மிட் ஆக வேண்டி இருக்கும்..செலவும் இதைவிட அதிகமாக இருக்கும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : கிழேயுள்ளது தினகரன் நாளிதழில் படித்தது http://www.dinakaran.com

 கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் உடல் உஷ்ணம், கண் எரிச்சல் பிரச்னைகளை தீர்க்கும் மண் பாண்டங்கள் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. நீரை சேமிக்க, சமையல் செய்வதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுகிறது. இன்றைய அவசர உலகத்தில் பலவகை உணவுகளை எடுத்துக்கொள்வதால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மண்பானை சமையல் அமிலத்தன்மையை போக்குகிறது.

மண் பாத்திரங்கள் வாங்கினால், அதை 7 நாட்கள் நீரில் ஊறவைத்த பின் பயன்படுத்த வேண்டும். இதனால் மண்துகள்கள் இல்லாமல் போகும். உணவில் மண் கலக்காமல் இருக்கும்.கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால் கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல் போன்றவை ஏற்படும். மண் பாத்திரத்தை பயன்படுத்தி இப்பிரச்னைகளை போக்கும் முறைகளை காண்போம்.

மண் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வில்வ இலைகளை சுத்தப்படுத்தி மண்பாத்திரத்தில் சுமார் 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர், வில்வ இலைகளை எடுத்துவிட்டு தண்ணீரில் கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். கண்கள் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும்.கோடைகாலத்தில் கண் எரிச்சல் என்பது தவிர்க்க முடியாதது. காற்றினால் பரவும் கிருமிகள் கண்களை பாதிக்கும். இப்பிரச்னைக்கு வில்வ இலை மருந்தாகிறது.

வெட்டிவேரை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் செய்முறை குறித்து பார்க்கலாம். வெட்டி வேரை நன்றாக சுத்தப்படுத்தி எடுக்கவும். வெட்டிவேரை மண்பானை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இந்த தண்ணீரை குடித்துவர வயிற்றுவலி சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வருவது குணமாகும். சிறுநீர் பாதைக்கு குளிர்ச்சி தரும். உடல் உஷ்ணம் குறையும்.

தாமரை இதழை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் முறை குறித்து பார்க்கலாம். மண்பானையில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் தாமரை இதழ்களை போட்டு இரவு முழுவதும் வைத்து தண்ணீரை குடித்துவர உடல் சோர்வு நீங்கும். அற்புதமான மருந்தாக விளங்கும் தாமரை இதழ் இதயத்தை பலப்படுத்தும்.  உடல் உஷ்ணத்தை குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம் செய்யும்முறை குறித்து பார்க்கலாம்.

ஊறவைத்த பழைய சாதத்தை மண்பாத்திரத்தில் எடுக்கவும்.  இதனுடன் பசுவின் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, நறுக்கிய பச்சை வெங்காயம், சிறிது பச்சை மிளகாய் சேர்த்து நீர்விட்டு நன்றாக கரைக்கவும். கோடைகாலத்தில் இதை சாப்பிட்டுவர நீர் இழப்பு சமன்படுகிறது. புத்துணர்வு ஏற்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அல்சர் இருப்பவர்கள் மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது நல்லது.
 

3 comments:

  1. தினகரன் செய்தி அருமை

    ReplyDelete
  2. அருமையான பதிவு ... சில கருத்துக்களை உள்ளேயே அடக்கி வைத்துள்ளேன் ... மிடியல

    ReplyDelete
  3. ஹஹ்ஹஹஹ் என்ன வெயில் அடித்தாலும் மதுரைத் தமிழனின் லொள்ளு மட்டும் குறையவில்லை.....

    சென்னையில் வெயில் செமையா காய்ச்சுது. கேரளத்தில் மழை...

    தினகரன் டிப்ஸ் யூஸ்ஃபுல்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.