Tuesday, May 3, 2016



avargal unmaigal
அமெரிக்காவில் சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட போவது எதற்க்காக?


அமெரிக்காவில் உடம்பை அளவோட வைத்து கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள் போகும் ஹோட்டல் சரவணபவன்தான்...அங்கே போனால்தான் அதிகம் சாப்பிட மனம் இருக்காது காரணம் டேஸ்ட் அவ்வளவு அருமையாக இருக்கும் ஹீஹீஹீ


இந்தியாவில் இருந்து புதிதாக கல்யாணம் ஆகி வந்த என் அண்ணாவுடைய பெண் இங்கே வந்ததும் சரி ஊரில் இருந்து வந்தவர்களுக்கு நம்ம ஊர் உணவு பிடிக்கும் என்று சரவணாபவனுக்கு அழைத்து சென்றேன். அதன் பின் அந்த பெண் என்னை மீண்டும் பார்க்க வரவே இல்லை..( ஒரு வேளை உணவு டேஸ்டாக இருப்பதால் அந்த பெண் தனியாக போய் சாப்பிடுகிறதோ என்னவோ)


அமெரிக்காவில் அதிக குண்டாக இருக்கும் இந்திய மக்களுக்கு உடம்பு வெயிட்டை குறைக்க டாக்டர்கள் ரெகமண்ட் பண்ணுவது இந்த ஹோட்டலைதானாம்..

எங்க பக்கத்து வீட்டில் இருக்கும் தமிழ் பெண்மணி  எப்ப ஹோட்டலுக்கு  போனாலும் சரவணபவன் ஹோட்டலுக்கு போய் சாப்பிட போகிறேன் என்று மாமியாரிடம் சொல்லுவாராம் அதை கேட்ட மாமியார் மருமகளிடம் நீ சந்தோஷமாக போய் சாப்பிட்டுவிட்டு வாமா எனக்கு இப்ப இல்லாம் நடக்க முடியலைன்னு சொல்லி வீட்டி இருந்துவிடுவார்களாம். ஆனால் இந்த பெண்ணோ சமத்தாக வேற ஹோட்டலில் போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவாராம் சொல்லி சொல்லி சிரிக்கிறார்.


அதுமட்டுமல்ல வீட்டு உணவை ஒழுங்காக சாப்பிடாத சிறுவர்களிடம் நீ ஒழுங்காக சாப்பிடவில்லையென்றால் உன்னை சரவணன்  பவன் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்தான் சாப்பாடு வாங்கி தருவேன் என்றதும் குழந்தைகள் சத்தம் போடாமல்  வீட்டு உணவை சாப்பிட்டுவிடுவார்களாம்

எங்க வீட்டும்மா அங்கேதான் போய் சாப்பிடுவார்கள்  அதனாலதான் அவர்கள் 95 lb = 43.092 kg. வாக இருக்கிறார்கள். நான் அங்கே எல்லாம் சாப்பிடமாட்டேன் என்று ஸ்டிரைக் பண்ணி ஏதாவது காரணம் சொல்லி போகாமல் இருந்துவிடுவேன். காரணம் எனக்கு நாக்கு நாலு முழம்...

அன்புடன்
மதுரைத்தமிழன்
படிக்கவில்லை என்றால் இதையும் படித்துவிட்டு போங்க
03 May 2016

17 comments:

  1. மிகச் சரியாகப்
    புரிந்து கொள்ளமுடியவில்லை
    இது நம் உணவுமுறைக் குறித்தா
    அல்லது நிஜமாகவே சரவண பவன் குறித்தா ?

    ReplyDelete
    Replies
    1. சரவணபவனின் டேஸ்ட் குறித்து....டேஸ்ட் படு மட்டம் பெயரை பார்த்து ஏமாந்தவர்கள்தான் அதிகம் இதில் நானும் எனது நண்பர்களும் அடங்குவார்கள்.

      Delete
  2. நீங்க வேறே !என்னுடைய ஜப்பானியத் தோழி சரவணா பவன் கா ஃ பிக்கு அடிமை .
    அவரின் tenure இங்கே இரண்டு வருடம் தான் எனவே சில சமயங்களில் கூச்சம் பார்க்காது அவர் இரண்டுமுறை (in one sitting )கா ஃ பி குடிப்பார்.
    ஒரு வயதான பெரியவரை அவரின் மகள் 15 நிமிடம் நடத்திக் கொண்டுவந்து சரவணா பவன் ஓட்டலில் கா ஃ பி சாப்பிட வைப்பார் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஜப்பானிய தோழி சுவைபற்றி அதிகம் அறியாதவராக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் அதுவும் காபி சரவணபவனில் ஹும்ம்

      Delete
  3. சரவணபவன் ஓட்டல் சாப்பாடு அவ்ளோ ருசியா....!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இதன் சுவை நன்றாகத்தான் இருக்கும்

      Delete
  4. சுவை அதிகமா இருக்கும் போல.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரோ சூப்பர் எனக்கு இலவசமாக தந்தால் கூட சாப்பிடமாட்டேன்

      Delete
  5. ஓட்டலின் சுவை அவ்வளவு பிரமாதமாகவா இருக்கு சார்[[[[[

    ReplyDelete
    Replies
    1. நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இதன் சுவை நன்றாகத்தான் இருக்கும்

      Delete
  6. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுகிற ரேஞ்சுக்கா சரவண பவன் நிலை இருக்கு? பாவமே...

    ReplyDelete
  7. மதுரைத் தமிழன்... சரவண பவன் பெருமை உங்கள் ஊருக்கு மட்டும் கிடையாது. நான் சமீபத்தில் பாரிஸில் சரவண பவனில் சாப்பிட்டேன். நன்றாகவே இல்லை. பஹ்ரைனில் எப்போதுமே சரவண பவன் சாப்பாடு நன்றாக இருக்காது. துபாய், ஷார்ஜாவில் ஓகே லெவெல்தான். கத்தாரிலும் ஓமானிலும்கூட எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒரு காலத்தில் (87-93 வரை) தி.நகர் சரவண பவனில் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். மாதத்துக்கு 20-30 தடவைகளாவது சாப்பிடுவேன். நான் சொன்ன நாடுகளிலெல்லாம் காரணம் கேட்டால், தண்ணீரைக் குறை சொல்லிவிடுகிறார்கள். அது உண்மையாகவும் இருக்கக்கூடும். ஏனென்றால் அவர்களது ரெசிப்பி ஸ்டான்டர்ட். அதுவும், மசாலாக்களும் மாறாது.

    ReplyDelete
  8. Fremont,CA Saravanabhavan was good. Consistent with Indian Sarvanabhavan.

    ReplyDelete
  9. தில்லியிலும் சரவணபவன் உண்டு - இரண்டு இடங்களில். அதன் வாயிலில் அத்தனை கூட்டம் காத்திருக்கும். உங்களுக்காகவே தில்லி சரவணபவன் பற்றி, விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்! :)

    ReplyDelete
  10. இங்குள்ள சரவணா பவன்கள் ருசிக்கு பேர்போனவை. அதே வேளையில் நம் பர்சும் காலியாகும். அதே சரவண பவன்கள் வெளிநாடுகளில் நன்றாக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
  11. அம்புட்டு மோசமாவா இருக்குது.....?

    ReplyDelete
  12. ஒரு தடவை முருகன் இட்லி கடையில் l சாப்பிட்டு பாருங்கள் . அப்போதுதான் சரவண பவன் எவ்வளவு மேல் என்பது தெறியும் சென்னையில் கேவலமான முருகன் இட்லி கடையில் சாப்பிடுவதற்கு கூட்டம் அலை மோதுகிறது .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.