இஸ்லாமியர்களை கரித்து கொட்டுபவர்களா
அப்படியானால் இதை மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
இந்தியாவில் எதாவது ஒரு இஸ்லாமியர்
தவறு செய்துவிட்டால் உடனே இந்திய இஸ்லாமியர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று கரித்து
கொட்டி சமுக வலைத்தளங்களில் அதை ஷேர் செய்து கொண்டிருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
அதில் வியப்பு ஏதும் இல்லை.. அப்படி செய்து கொண்டு இருப்பவர்கள் கண்களில் மட்டும் இப்படிபட்ட
செய்திகள் மட்டும் ஏன் படவில்லை என்பதுதான்
எனக்கு வியப்பாக இருக்கிறது...
இப்படிபட்டவர்களின் கண்களில்
படாத செய்தி என் கண்களில் பட்டதால் அதை நாலு பேர்கள் கண்ணில்படவே இந்த செய்தியை பகிர்கிறேன்
வறட்சியில் சிக்கி தண்ணிருக்கு
அல்லோகலம்படு மாநிலமான மாஹாராஷ்டிராவில் உள்ள சிறிய கிராமம்தான் லாட்டூர், இந்த ஊரில்
வறட்சியில் சிக்கி தவிக்கிறது ஆனால் இங்குள்ள இஸ்லாமியர் ஒருவரின் நிலத்தில் மட்டும் தண்ணிர் கிடைக்கிறது. இந்த நிலத்தின் உரிமையாளர்
ஷேக் மத்டீன் மூஸா (Shaikh Mateen Musa) என்பவர். இவர் மட்டும் நினைத்து இருந்தால்
தமிழக தலைவர்களை போல அல்லது இந்திய தலைவர்களை போல கேடுகெட்ட மனநிலையில் இருந்திருந்தால்
இந்நேரம் இந்த தண்ணிரை விற்று பெரிய பணக்காரர் ஆகி இருப்பார். ஆனால் இவருக்கு அப்படிபட்ட
மனநிலை இல்லாததால் கடந்த மூன்றுமாதங்களாக அங்குள்ள மக்களுக்கு வினியோகித்து வருகிறார்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தினம் 10,000 லீட்டர் தண்ணிரை தனியாளராக இருந்து
வினியோகித்து வருகிறார், இவர் அங்குள்ள லோக்கல் பள்ளிக் கூடத்தில் கணக்கு ஆசிரியராக
பணியாற்றி வருகிறார்.
அங்குள்ளவர்கள் அவருக்கு
இந்த தண்ணிருக்கு பணம் கொடுக்க முன் வந்தாலும் அவர் மிகவும் அன்பாக அதை மறுத்துவிடுகிறார்.இப்படிபடவர்கள்
இஸ்லாமிய மதத்தில் மட்டுமல்ல மற்ற மதத்திலும் இருப்பதால்தான் இந்தியா இன்னும் வளர்ந்து
கொண்டிருக்கிறது.
இப்படிபட்டவர்களை நாம் நீண்டகாலம் வாழ வாழ்த்தி பிரார்த்திப்போமே.....
டிஸ்கி : இப்படிபட்ட நல்ல
மனதுடையவர்கள் அவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை இந்த தேர்தல் சமயத்தில் வெற்றி பெற செய்யுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அட!பிழைக்க தெரியாதவராய் இருக்கின்றாரேப்பா!ஹேஹே!
ReplyDeleteநல்ல மனம் வாழட்டும். பொதுவாகவே இஸ்லாமியர்கள் தமக்கென தனிவழியில் செல்பவர்களாயும் வியாபாரதந்திரங்களில் நிறைந்தவர்களாயிருப்பதனால் பெரும் செல்வந்தராயும் இருப்பது தான் எங்கோ ஓரிடத்தில் நடப்பதை அனைவரும் அப்படியே என ஒதுக்கி வைக்க செய்கின்றதோ என யோசித்திருக்கின்றேன்!
ReplyDeleteசூழ் நிலைக்கு ஏற்ப தம்மை வளைக்காமல் மற்றவர்கள் குறித்து சிந்திக்காமல் தனி வழியே செல்வது மனஸ்தாபங்களை உருவாக்குகின்றதோ என்னமோ... மற்றப்படி பழகுவதற்கும் , உதவுவதற்கும் இனியவர்கள் அவர்கள்.
எனக்கும் தமிழா இதைப்போல நண்பர்களே உண்டு...
ReplyDeleteஓடி ஓடி உதவும் என் இனிய நண்பர் பஷீர் அலி பற்றி..ஏராளம் கூறலாம்..மதம்..சாதி யெல்லாம் இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்ற வைத்துக்கொண்டிருப்பது..
வேளாங்கண்ணி,நாகூரென போகாத இந்துக்கள் இல்லை...
நமக்குள் இல்லை எப்போதும் மதங்கள் பற்றிய நினைவு..
ஆனால் தண்ணீர் தேவனின் தகவல் இந்த நேரத்தில் அற்புதமான பதிவு...ஹேட்ஸ் அப் தமிழா...
நல்ல மனம் வாழ்க......
ReplyDeleteபதிவுக்கு நன்றி தமிழா. மகத்தான செயலுக்கு முதலில் இந்த இஸ்லாமிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். பொதுவாகவே எல்லா மதத்திலும் நல்லவர்கள் அதிகம். சில கெட்டவர்கள் செய்யும் செயலுக்கு அந்த மதம் பொறுப்பாகாது. இந்து மதத்தில் இந்துத்துவா காவிகள் செய்யும் செயலுக்கு எப்படி இந்து மதத்தையே குறை சொல்லமுடியாதோ அதேபோல் இஸ்லாமிய மார்க்கத்திலும் சிலர் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது. ஒரு சில ஊடகங்கள் சிறிய பிரச்சனையே பெரிதாக காட்டி முஸ்லிம்களை எதிரிகளாக மக்களிடம் காட்டுகின்றன. இதை நம்பி சில இந்து நண்பர்கள் பலியாகிறார்கள். இர்ஹுதான் யதார்த்தம் மதுரை தமிழா .
ReplyDeleteநன்றி
த.ம +1
M. செய்யது
Dubai
அருமையான் கருத்து. நிஜமானதும் தான். //////////////////////
Deleteஇந்து மதத்தில் இந்துத்துவா காவிகள் செய்யும் செயலுக்கு எப்படி இந்து மதத்தையே குறை சொல்லமுடியாதோ அதேபோல் இஸ்லாமிய மார்க்கத்திலும் சிலர் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது. ஒரு சில ஊடகங்கள் சிறிய பிரச்சனையே பெரிதாக காட்டி முஸ்லிம்களை எதிரிகளாக மக்களிடம் காட்டுகின்றன. இதை நம்பி சில இந்து நண்பர்கள் பலியாகிறார்கள். இர்ஹுதான் யதார்த்தம் மதுரை தமிழா .
அருமை.அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தவித்த வாய்க்கு தண்ணீர் தருபவர் கடவுளுக்கு நிகரானவர்.
ReplyDeleteஎனக்கு தெரிந்து நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள் சார்...இப்படி பட்டவர்களால் தான் மனிதம் வாழ்கிறது..
ReplyDelete