Monday, May 16, 2016



வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றியவர்களா நீங்கள் அப்ப இதை படித்துவிட்டு செல்லுங்கள்

இன்று சமுக தளங்கள் மற்றும் மீடியா எங்கும்  ஒரே ஒரு செய்திதான் அது தலைவர்கள் சினிமா நடிகர்கள் நடிகைகள் தொண்டர்கள்  மற்றும்  பொது மக்கள் வாக்கு அளிப்பதுதான். இதில் தலைவர்கள் நடிக நடிகைகள் தாங்கள் வாக்கு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் ஏதேதோ உளறிவிட்டு  ஜனநாயக் கடமையை முடித்துவிட்டேன் என்று கூறிச் செல்லுகிறார்கள்

இது போல பொதுமக்களும் ஜனநாயக் கடமையை முடித்துவிட்டேன் என்று தங்கள் படத்தை போட்டு போஸ்ட் போடுகிறார்கள்.


நன்றாக யோசித்து பாருங்கள் இப்படி வாக்கு அளிப்பதன் மூலம் நாம் எல்லாவற்றையும் மாற்றி விட முடியுமா என்ன?

இப்படி வாக்கு அளிப்பதன் மூலம் ஆட்சியைதான் மாற்றி அமைக்க முடியுமே தவிர  ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை நம்மால் மாற்றி அமைக்க முடியாது. அதனால்தான் ஊழல்கள் தொடர்ந்து நடை பெற்று கொண்டு மக்களின் நலன்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.


அதனால் மக்களே இன்று எப்படி நீங்கள் வாக்களித்து ஜனநாயக் கடமையை  செய்தீர்களோ அது போல சமுக நலப் பிரச்சனைகளுக்கும் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடுங்கள்  கட்சி வேறுபாடு இல்லாமல் போராடுங்கள்அப்படி செய்தால்தான் சமுக நலன்கள் பாதுக்காக்கபடும் தவறு செய்யும் அரசு அதிகாரிகள் தலைவர்கள் முதல் அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள் அப்படி செய்துவதுதான் ஜனநாயக் கடமையை ஆற்றுவதாகும்.


உதாரணமாக மதுவிலக்குக்காக , நல்ல கல்விக்காக  , நல்ல  மருத்துவத்திற்காக, அல்லது குடிநீர் போன்றவைகளுக்காக போராடும் போதுகட்சி வேறுபாடுகள் இன்றி பொதுமக்களும் தலைவர்களும் நடிகர் நடிகைகளும் ஒன்று சேர்ந்து  பொதுவிடுமுறை நாளாகிய ஞாயிற்று கிழமையை தேர்ந்தெடுத்து தங்கள் எதிர்ப்பை காட்டி போராட வேண்டும்....அப்படி செய்தால்தாம் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும்.


ஆனால் அப்படி செய்யாமல் வாக்கு அளிப்பது மட்டும்தான் ஜனநாயக் கடமை என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த நாடு முன்னேறவே முன்னேறாது.


டிஸ்கி :தமிழக சட்டசபை என்பது ஒரு நாடக மேடை நடிகர் மாறுவது போல அமைச்சரவை மட்டும் மாறும்  அவ்வளவுதாங்க அதற்குதானுங்க இந்த ஒரு நாள்  தேர்தல் என்ற கூத்து


எனது பேஸ்புக் ஸ்டேடஸில் சில :

தமிழகம் அழிவுப்பாதையில் செல்லப் போகிறதா அல்லது முன்னேற்ற பாதையில் செல்லப் போகிறதா முடிவு மக்கள் கையில்தான் உள்ளது... மக்களின் விருப்பம் என்னவென்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்

குடிகாரர்களுக்கும் தமிழக குடிமக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. குடிகாரர்கள் குடித்துவிட்டு உளறிக் கொடு இருப்பார்கள். தமிழக குடிமக்களோ தவறாக வாக்களித்துவிட்டு அதன்பின் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பார்கள்

தமிழக பெண்களுக்கு நாளை யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதில் எல்லாம் குழப்பம் இல்லை அவர்களது குழப்பமே  வாக்கு  அளிக்கப்போகும் போது என்ன மாதிரி டிரெஸ் அல்லது சேலை அணிந்து போக வேண்டும் என்பதில்தான் குழப்பம் இருக்கிறதாம்
 

டாட்

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. உண்மைதான்.சிந்திக்க வேண்டிய கருத்து ஒட்டு போடுவது மட்டும் ஜனநாயகக் கடமை அல்ல.ஊழல் லஞ்சம் ஒழிப்பதில் பெரும்பங்கு மக்கள் கையில்தான் இருக்கிறது. கடமையை சரியாக செய்வதற்கே லஞ்சம் வாங்கும் நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. தாங்கள் கூறும் அளவு மனநிலை மக்களுக்கு மாறுவது என்பதானது சற்றே யோசிக்கவேண்டிய விஷயம்.

    ReplyDelete
  3. நல்லா சொல்லிட்டு ..கடைசில என்ன ஒரு செருகல்!!! அதனால பாராட்ட திரும்ப எடுத்துட்டுப் போறேன்.

    :)

    ReplyDelete
  4. நல்லா நடிக்கிறாங்க நாடக மேடையில்

    ReplyDelete
  5. மதுரைத் தமிழன் அவர்களுக்கு, உங்கள் அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இந்திய அரசியல் பற்றி உங்களுக்குத் தெரியாதது இல்லை. ஓட்டுப் போடும் யாரும் ஜனநாயகக் கடமையை ’ஆற்றுவதற்காக’ ஓட்டு போடுவதில்லை.

    நமது இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஒரு பிஸினஸ். நமது மக்களுக்கு ஒரு வேடிக்கை. அவ்வளவுதான். (பாப்கார்ன், சமோசா, டீ சாப்பிட்டுக் கொண்டே அன்னா ஹசாரே (இருக்கிறாரா?) உண்ணாவிரதத்தை வேடிக்கைப் பார்ப்பதற்காகவும், பொழுது போவதற்காகவும் கூடிய கூட்டம்தான் இங்கே அதிகம்)

    எனக்கு தேர்தலில் வாக்களிக்க இஷ்டமில்லை. இருந்தாலும், நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு வாக்கு சாவடிக்கு சென்றேன். வாக்குச் சாவடிக்கு சென்ற பின்னரே , எங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பெயர்களை, அங்கு சுவரில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். வந்ததற்கு அவர்களில் ஒருவர்க்கு வாக்களித்து விட்டு திரும்பினேன். எனது அனுபவத்தை ஒரு பதிவாகவும் வலைப்பக்கம் எழுதினேன்.

    ஜாதி, மதம் ஆதிக்கம் நிரம்பிய நம்நாட்டு மக்களிடையே ஜனநாயகம், போராட்டம், புரட்சி என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதவை.

    ReplyDelete
  6. சிந்திக்க வைத்த பதிவு! அருமை!

    ReplyDelete
  7. செம பதிவு தமிழா.

    அதுவும் தமிழ்நாட்டில் போராட்டம் என்பதே கிடையாது. எதற்குப் போராட வேண்டும் என்பதும் இல்லை. போராட்டம் என்றாலும் அன்று ஒருநாள்தான் சும்மா போஸ் கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றார்கள். அந்தப் போராட்டம் நிறைவேற்றப்பட்டு நல்ல முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றதா வேண்டுகோள்கள் தடையில்லாமல் என்பதே இல்லை.

    எங்கள் சட்டசபைத் தொகுதியில் யார் நிற்கின்றார்கள் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. ஆன்லைனிலும் தேடினேன். தொகுதிகள் இருந்தன...ஆனால் முழு வேட்பாளர் பட்டியல் இல்லை. வீட்டிற்கும் யாரும் வந்து தங்கள் சின்னம் என்ன என்று எதுவும் தரவில்லை. சுயேச்சைகள் கூட வரவில்லை. ரோட்டில் அவ்வப்போது கூத்தாடிகள் போல டான்ஸ் ஆடிக் கொண்டு கோமாளித்தனமாக பாடல்கள் ஒலிபரப்பிக் கொண்டு வண்டிகள் திமுக, அஇதிமுக மட்டுமே சென்றன. அதிலும் நிற்பவர்கள் வரவில்லை. எல்லாம் கட்சிக்காரர்கள் மட்டுமே. எந்த வாக்குறுதிகளும் தரவில்லை. முகமே தெரியாமல் யாருக்கு ஓட்டுப் போடுவது? என்றாலும் எனது ஓட்டைப் பதிவுசெய்துவிட்டுத்தான் அன்று காலை எனது பங்களூர் பயணத்தை மேற்கொண்டேன். இங்கி பிங்கி பாங்கி என்றெல்லாம் இல்லை...தெளிவாகத்தான் பதிந்தேன்.

    சரி ஆனா அதென்ன அந்தக் கடைசி நக்கல்?!!!! நாங்கல்லாம் அதில் சேர்த்தி இல்லை தெரியுமா....!!! அதுக்கு உங்க தலைல ஒரு குட்டு!!!

    கீதா

    ReplyDelete
  8. தேர்தலில் நிற்பவர்கள் குழப்பம் இருந்தாலும் ஆன்லைனில் முதல்நாள் கடைசியில் தேடிக் கண்டுபிடித்துவிட்டு அப்புறம்தான் பதிவுசெய்தேன்

    கீதா

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்களாக இருக்கிறார்கள். மக்களில் பலரும் அவரவர் சௌகரியத்தையும், தமது வேலை நடந்தால் போதும் என்ற மனநிலையிலும் தான் இருக்கிறார்கள். நமது நகரம், நமது ஊர், நமது மாநிலம், நமது நாடு என்ற எண்ணங்கள் பெரும்பாலானவர்களுக்கு இல்லை......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.