Friday, April 29, 2016




avargal unmaigal

கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சொர்க்கதிலும் இடமில்லையா?



இரண்டு வேவ்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள நண்பர்களுடன் கோயிலுக்கு சென்று கொன்டிருந்த போது கீழ் ஜாதிகாரப் பயல் மேல் ஜாதியையே சேர்ந்த நம்ம வீட்டு பெண்ணை மணம் செய்வது நமக்கு இழுக்கு கெளரவக் குறைச்சல் என்று நினைத்து அவர்கள் இருவரையும் வெட்டி போட்டுவிட்டார்கள்.

அப்படி இறந்தவர்களை எம தூதன் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றான். சொர்க்க வாசலில் காத்து இருந்த சித்ரகுப்தன் அவர்களை வரவேற்ற போது அவர்கள் இருவரும் சித்ர குப்தனிடம் நாங்க்ள் இருவரும் சொர்க்கத்தில் திருமணம் செய்து கொள்ள இயலுமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் இதுபற்றி எனக்கு தெரியவில்லை சற்று பொருத்து இருங்கள் நான் உள்ளே சென்று எந்த மத குருவிடமாவது கேட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றார்.

அப்படி அவர் தேடி சென்றவர் ஒரு மாதமாகியும் திரும்ப வரவில்லை. சொர்க்கத்தீரற்கு வெளியே காத்து இருந்த அந்த காதலர்கள் இப்போது சிந்திக்க தொடங்கினர். ஒரு வேளை நாம் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு வேளை நமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் விவாகரத்து பண்ணிக் கொள்ள முடியுமா என்று யோசித்து பின் சித்ரகுப்தன் வந்த பின அவரிடம் கேட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.

கடைசியாக இரண்டு மாதம் கழித்து வந்த சிதரகுப்தன் சொர்க்கம் முழுவதும் அலைந்து திரிந்து என்னால் ஒரே ஒரு மத குருவைமட்டும் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது அவர் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை சொல்லி கிழே உட்காரப் போன போது இந்த காதலர்கள் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால் நாங்கள் விவகாரத்து பண்ணிக் கொள்ள சொர்க்கத்தில் இடம் இருக்கிறதா என்று கேட்டனர்.


அதை கேட்ட சித்ரகுப்தன் கோபபட்டு யோவ் உங்களுக்கு அறிவு இருக்கா சொர்க்கத்தில் ஒரு மத குருவை கண்டுபிடிக்கவே எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகீருக்கிறது இதில ஒரு வக்கிலை கண்டு பிடித்து அவரிடம் பதிலை பெற என்னால் முடியவே முடியாது அதனால் எனக்கு இந்த வேலையும் மயிரும் வேண்டாம் நீங்கள் பேசாமல் நரகத்திற்கே போய்விடுங்கள் என்று சொல்லி மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பிவிட்டார்.


அன்புடன்
மதுரைத்தமிழன்



8 comments:

  1. என்னால் நம்ப முடியலே ,அந்த ஒரு மதகுருவும் எப்படி சொர்க்கத்துக்கு சென்றார் என்று :)

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஐ காமெடி

    ReplyDelete
  3. அந்தக் கடைசி வரி..
    மிக மிக அருமை

    ReplyDelete
  4. நகைச்சுவையாக இருந்தாலும் கருத்தும் இருக்கிறது

    ReplyDelete
  5. உண்மைதானே,, அருமை அருமை,,

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.