நேற்று என் கூட
வேலை பார்க்கும் பெண் ஒருத்தி, நான் காலையில்
வேலைக்கு சென்றதும் மதுரைத்தமிழா நான் உங்க கூட தனியாக பேசணும் அதனால் லஞ்ச் டைமில்
வெளியே போய் சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்று கேட்டாள்.
இப்படி ஒரு பெண்
கேட்டால் இல்லையென்றா சொல்ல முடியும் .அதனால நானும் சரி என்று சொன்னேன்.
அந்த பெண் என்னைவிட
வயதில் இளமையானவள் அழகானவள் ,கல்யாணம் ஆகி ஆறுமாதங்கள்தான் ஆகி இருக்கிறது. அப்படிபட்டவள்
என்னிடம் தனியாக பேசணும் என்றதும் மனதில் சந்தோஷ அலைகள் வந்து அடித்த போதிலும் சிறிது
குழப்பமும் என்னிடம் வந்தன.
காரணம் அந்த
பெண் என்னிடம் வந்து நீங்கள் மிக இனிமையானவர் நல்லவர் வல்லவர் அதனால் உங்களை எனக்கு
பிடித்டிருக்கிறது என்று சொல்லி உங்கள் மேல் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கண் என்று சொன்னால்
அப்போது நாம் என்ன செய்யவேண்டும் எப்படி ரியாக்ட் பண்ண வேண்டும் என நினைத்து நினைத்து
குழம்பி போனேன்.
இப்படி அந்த
பெண் சொன்னால் இல்லம்மா நான் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருப்பவன் நான் அப்படி
எல்லாம் இல்லைன்னு சொல்லலாமா அல்லது நான் உன்னை என் தங்கை மாதிரிதான் நினைத்து பழகி
வந்தேன் என்று சொல்லலாமா அல்லது என் மனைவிக்கு துரோகம் செய்வது எனக்கு பிடிக்காது என்று
சொல்லலாமா அல்லது இல்லைம்மா கணவன் மனைவிக்குள் சண்டைகள் அல்லது மாற்று கருத்துக்கள்
இருக்கதான் செய்யும் அதனால் கணவன் மேல் கோபம் கொண்டு இப்படி எல்லாம் பேச கூடாதும்மா
என்று சொல்லலாமா என்று பலவாறு நினைத்து குழம்பி கொண்டிருந்தேன்...
லஞ் டைம் வந்ததும்
அவள் வந்து கூப்பிட பெரும் குழப்பதினுடன் அவளுடன் சென்று உணவை ஆர்டர் செய்து சாப்பிட்ட
போது ஒரு பெரும் இடியை தூக்கி என் மீது போட்டாள் அதுதாங்க மதுரைத்தமிழா நான் உங்களை
என் சகோதரனாக பாவித்து இதை சொல்லுகிறேன் என்றாள் இப்படி அவள் சொன்னதும் என் இதயத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வலி தோன்றியது.
அதை அப்படியே தாங்கி கொண்டு நீ சொல்ல வந்ததை
சொல்லும்மா என்றேன்.
உடனே அவள் உங்களுக்கு
நல்ல டைவோர்ஸ் லாயர் யாரையாவது தெரியுமா என்றாள். எதுக்கும்மா கேட்கிரே என்றேன்.
அதற்கு அவள்
மதுரைததமிழா கல்யாணம் ஆனதில் இருந்து இன்று வரை என் கணவர் என்னை மிக குண்டு குண்டு
என்று சொல்லி மிக அதிகமாக கிண்டல் கேலி செய்து என்னை மிகவும் மட்டம் தட்டுகிறார் அப்படி
செய்யாதீர்கள் அது என்னை மிகவும் காயப்படுக்கிறது என்று பல முறை சொல்லியும் அவர் கேட்கவில்லை
அதனால் அவரை டைவோர்ஸ் பண்ணுவது என்று முடிவு செய்துவிட்டேன் என்றாள்.
அதை கேட்ட நான்
அப்படியானல் குழந்தையை யார் வைத்து பார்த்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவீட்டீர்களா
என்றேன்
அதற்கு அவள்
குழந்தையா யார் குழந்தை என்ன குழந்தை என்றாள்..
உடனே நான், ஓ
ஸாரிம்மா நீ உண்டாகி இருக்கிறாய் என்று அல்லவா நான் நினைத்துவிட்டேன் அப்படி தப்பா
நினைத்து கொண்டதற்கு மன்னித்து கொள் என்றேன்
அப்படி நான்
சொல்லியதற்கு அப்புறம் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதன்பின் கண் விழித்து
பார்த்த பொழுது நான் ஹாஸ்பிட்டல் பெட்டில் இருந்தேன். என் எதிரில் டாக்டர் இருந்தார்.
நான் கண்முழித்ததும் சிரித்து கொண்டே அந்த டாக்டர் மதுரைத்தமிழா உனக்கு ஆயுசூ ரொம்ப
கெட்டியப்பா என்று சொன்னார்.
வீட்டிற்கு வந்த
பின் நான் யோசித்து பார்த்த பின்தான் எனக்கு புரிந்தது குண்டாக (overweight) இருந்த பெண் உண்டாகி(pregnant) இருக்கிறாள் என்று
நான் கருதி அவளிடம்சொல்லி இருக்கிறேன்
இதற்கு அவளை போய் என்ன குற்றம் சொல்ல முடியும், அட என்னான்னு
சொல்வேணுங்க.....
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஏன் ஐயா... குண்டா இருக்க பெண்ணுக்கும் குண்டா இருக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாம அடிபட்ட நண்டா மாறி இப்படி துண்டு துண்டா வந்து நிக்கிரளே....
ReplyDeleteஎனக்கு நேரம் சரியில்லைங்க விசு உண்டா இருந்த பெண்ணிடம் ஏனுங்க நீங்க குண்டா இருக்கிறீங்க என்று தெரியாமல் கேட்டுட்டேன் அது போல குண்டா இருக்கும் பெண்ணிடம் நீங்க உண்டா இருக்கிறீங்களா என்று கேட்டு மாட்டிக்கிட்டேன். எப்ப பார்த்தாலும் தவறாகவே நினைத்து பேசிவிடுகிறேன் என் நாக்கில் சனிபகவான் குடி இருக்கிறார் போல ஹும்ம்ம் என்னத்த சொல்ல
Deleteபூரிக்கட்டை வைத்தியம் நாக்குச்சனிக்கு நல்லது சகோ!!!
ReplyDeleteஎல்லாமே எஸ்கு பிசகா ஆகிப் போகுதே!
ReplyDeleteஹா.. ஹா... எதிர்பார்த்தது ஒண்ணு கிடைத்தது ஒண்ணா...
ReplyDeleteநான் போட்ட கமென்ட் வரலியோ...சே இந்த ப்ளாகர் வஞ்சனை சரி சரி ..இன்னைக்கு நிலவரம் எப்படி???!!!!!!ஹஹஹ்
ReplyDeleteஹஹஹஹ தமிழா உங்களுக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..
ReplyDelete"நேத்துதானே அடி வாங்கினீங்க…. ஆஸ்பத்திரி பெட்ல...அடுத்து இப்படி பொண்ணுங்ககிட்டப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு மறுபடியும்.....உங்கள ..." என்று சகோதரி சொல்லிக் கொண்டு பூரிக்கட்டையுடன் வருகிறார். நாளைக்கும் ஆஸ்பத்திரிதானா...ஹஹஹஹ்ஹ பேசாம ரூம் புக் பண்ணி வைச்சுடுங்க தமிழா..
கீதா
இதுதான் நேத்து போட்ட கமென்ட்
இதுக்கு ஒன்னும் சொல்ல முடியாது தான்,,,
ReplyDeleteஆனாலும் எதிர்பார்ப்பை எகிரவைத்துவிட்டு...
ReplyDeleteஎங்கள் சாபமாகக்கூட இருக்கலாம்..அப்படி ஒரு வெயில்...
நான் வெயிலச்சொல்லல...
உண்டானாலும் குண்டாகணும் என்பதை விட குண்டானாலும் உண்டாகக்கூடாது என்பதில் தான் கவனமாக இருந்திருப்பாள் அந்த பெண், இது தெரியாமல் நீங்கள் கேள்வி கேட்டால் அவ என்னன்னு சொல்வா?
ReplyDelete