அழுகையா வருதுங்க...
நேற்று பதிவர்
மீரா செல்வக்குமார் எழுதிய அழுகையா வருதுங்க... என்ற பதிவை படித்தேன், அது என்னை மிகவும் கவர்ந்தது...
நாட்டில் நடக்கும் பலவிஷயங்கள் நமக்கு சோர்வினையும் மன அழுத்தத்தையும் தருகின்றன்.
அப்படி நடக்கும் விஷ்யங்களை மிக அருமையாக தமது எழுத்தில் வடித்து நமக்கு ஒரு நல்ல
பதிவை தந்து இருக்கிறார். அதை இங்கே தந்து இருக்கிறேன் அவரிடம் அனுமதி பெறாமலே..
நிச்சயம் அதற்காக அவர் கோபபடமாட்டார் என நினைக்கிறேன். அவரது பதிவை படித்த பின் அவரை
பாராட்டி கருத்து சொன்ன பிறகும் என் மனது
கிறுக்க தொடங்கியது அந்த கிறுக்கல்தான் இன்றைய எனது பதிவு.
இடது பக்கம் பதிவர் மீரா செல்வக்குமாரின் சிந்தினைகளும் வலது புறத்தில் அதன் விளைவாக என்மனதில் தோன்றிய கிறுக்கல்களும் உங்கள் பார்வைக்காக.. மீரா செல்வக்குமாரின் வலைபக்கத்தை புக் மார்க் செய்ய மறக்க வேண்டாம்.
நிறைய அருமையான சிறு சிறு பதிவுகள்....எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது
பதிவுகளை படிக்காமல் இருந்ததில்லை,
என்னை திட்டாமல் இருக்க மீராக் குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், நன்றி நன்றி |
|
அழுகையா வருதுங்க...
ஒரு சிறிய
இடைவெளி தேவைப்பட்டது..
வாசிப்பில்
மூழ்கிவிட்டதாய் பொய் சொல்லி தப்பமுடியவில்லை.
அரசியல்,நடைமுறைச்
செய்திகள்
மிகுந்த சோர்வினைத்தான் தந்து கொண்டிருக்கின்றன..
நகர்த்திக்கொண்டிருக்கும்
நாட்களின் அழுத்தத்தில் பதிவுகள் என்னும் மிதவைகள் தான் சற்றேனும் நிம்மதி..
காதுகளுக்கும்,கண்களுக்கும்
வந்துசேரும் செய்திகள் மன அழுத்தம் தவிர யாதொன்றும் தருவதாயில்லை..
உற்சாகமாய்
இருப்பதாய் எல்லாரும் நடித்துக்கொண்டிருப்பதயே அறிகிறேன்..
அவரவர் சுமக்கும்
அளவினைத் தாண்டியே சுமந்துகொண்டிருக்கிறார்கள் கவலை மூட்டைகளை..
செல்பி எடுப்பவர்கள்
எல்லாம் சந்தோசமாய் இருப்பதாய் ஏமாந்து போகாதீர்கள்.
முகப்புத்தகங்களும்,
இணையமும் இல்லையெனில்
பலர் பைத்தியமாகி இருப்பார்கள்.
காலை விடியாத
வேளையில் ஊரே நடந்து கொண்டிருக்கிறது..
காய்கறிக்கடை
என்றாலும்,கறிக்கடை என்றாலும் நீண்டே இருக்கிறது வரிசை..
பள்ளிக்கட்டடங்கள்
வளர்வது போல் மருத்துவமனைகளும் பெருத்துக்கொண்டுதான் இருக்கிறது..
காத்திருப்பின்றி
காணமுடிவதில்லை..கடவுளைக்கூட..
அத்தனை பேருந்துகளும்
நிறைமாதக்கர்ப்பினியாகத்தான் விரைகின்றன...
முப்பதுவருடங்கள்
குடிப்பவன் இன்னும் சாலையில் விழுந்து கிடக்கிறான்...
முப்பது வயது
நிறையாதவன் மூச்சடைத்து சாகிறான்..
ஒற்றையாய்
சாகும் மனிதனின் செய்திகளை ஊடகம் விரும்புவதில்லை...கொத்துக்கொத்தாய் சாகுமிடங்களில்
கூடிவிடுகிறார்கள்..
பிழைக்கவைக்க
வேண்டி கோவிலுக்குப்போனவர்கள் குவியலாய்ச்செத்தால் ,
கோவிலுக்குள்
இருப்பதை என்ன பெயர் சொல்லி அழைப்பது?
எங்கே நடக்கிறது
மாற்றம்?
ஆட்சியின்
மாற்றம் புதிய தலைமுறையால் வந்துவிடலாம் என்கிறது புள்ளிவிவரங்கள்..
சுதந்திரம்
கிடைத்த இத்தனை வருடங்களுக்கும் தேவைப்படுகிறது வாக்களிக்க கெஞ்சும் விழிப்புணர்வுகள்..
ஒரு மாய உலகில்,
எல்லாக்குற்றங்களும்
கண்ணுக்குத்தெரிந்தே நடக்க கையாலாகாத வாழ்க்கை தான் வாய்த்திருக்கிறது என்னைப்போன்றோர்க்கு..
ஒரு மவுனமான
வேளையில் மனசு தடதடக்கிறது..
ஒரு செல்போன்
எத்தனை உயரிய பிராண்டாக இருந்தாலும் அதன் அடக்கம் 200 ரூபாயிலிருந்து 1000க்குள்
தான் இருக்குமாம்...
சர்வ சாதாரணமாக
10000 ல் தொடங்கி 70000 வரை விற்றுத்தீர்க்கிறார்கள்..
மொத்தவிலையில்
15 ரூபாய்க்குள் வாங்கும் வீட்டுக்கான டைல்களின் விலையை 40க்கு குறையாமல் விற்கும்
மனநிலையை என்ன சொல்லி அழுவது?
பணம்..பணம்
என்னும் காகிதம் தேடி ஆன்மாவை கறையாக்கும் முயற்சிதான் நடந்துகொண்டிருக்கிறது..
சிகரெட் ஆபத்தென்றாலும்..
மக்களின் மனோநிலையை
காசாக்கத்தான் நினைக்கிறார்கள் ஒருபோதும் ஏற்றிய விலையை இறக்குவதில்லை..
விடியலில்
தொடங்கும் நாள் நள்ளிரவு தாண்டித்தான் முடிகிறது..
எழுத ஆயிரம்
வந்து சேர்கிறது..
எழுத உட்கார்ந்தால் தான் அழுகை வருகிறது..
|
சிரிப்பா வருதுங்க...
எல்லா மதங்களும்
அன்பை விதைத்தாலும் அதை பின்பற்றுபவர்கள் விரோதத்தைதான் இன்று விதைத்து கொண்டிருக்கிறார்கள்
நாடு முன்னேற
வேண்டும் என்று நினைப்பவர்கள் தவறு செய்யும் தங்கள் தலைவர்களை தண்டிப்பதற்கு பதிலாக
அவர்கள் செய்த தவறுகளுக்காக சப்பை கட்டி அவர்களை போற்றிக் கொண்டிருக்கிறார்கள்
சிந்தனை மற்றும்
அறிவை வளர்க்கும் கல்வியை தவறாக புரிந்து கற்றுக் கொண்டு தங்கள் சிந்தனை மற்றும்
அறிவை புதைகுழியில் புதைத்து கொண்டிருக்கிறார்கள்.
உடல் நலத்தை
கெடுக்கும் மதுவை அளவோட குடிக்க வேண்டிய மக்கள் அளவிற்கு அதிகமாக குடித்தும் உடல்
நலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பாலை அளவிற்கும் குறைவாகவே குடிக்கிறார்கள்
உடல் நலம்
பலமாக இருக்கும் இளமை பருவத்தில் கார் பைக்கை உபயோக்கிக்கும் மக்கள் உடல் பலம் குறைந்த
முதிய பருவத்தில் உடல் நலம் கருதி தட்டு
தருமாறி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார்கள்
வறுமையில்
வாடும் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் தங்களுக்கு படி அளக்கும் இறைவனை தரிசித்து அவனுக்கும்
வாரி வழங்குகிறார்கள்.
குழந்தைகளுக்கு
குட் டச் பேட் டச் என்று சொல்லி தரும் பெண்கள் பேஸ்புக்கில் நல்ல உறவு ஏது மோசமான உறவு எது என்று தெரியாமல்
தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்
ஹிந்தியை எதிர்போம்
என்று சொல்லிக் கொண்டே தமிழை அழித்து கொண்டிருக்கிறார்கள்
தங்கள் நாட்டில்
உள்ள வளங்களை அழித்து கொண்டே மேலை நாடுகளில் பாதுக்காக்கும் வளங்களை பற்றி வாய் ஒயாமல்
பேசிக் கொண்டிருப்பார்கள்
முழுமையாக
கற்றுக் கொள்லாமலே மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்தான் இன்று அதிகமாக
காணப்படுகிறார்கள்
வீட்டை சுத்தமாக
வைத்து கொள்ள தெருக்களை அசுத்தபடுத்தி கொண்டிருக்கும் மக்களுக்கு புரியவில்லை அந்த
தெருவில்தான் அவர்களது வீடு இருக்கிறது என்று..
அருகில் இருப்பவர்களிட
நட்பு பாராட்ட முயற்சிக்காமல் அகில உலகம் முழுவதும் எங்கோ கண்காணாத இடங்களில் வசிப்பவர்களிடம்
போலித்தனமான நட்பு பாராட்ட முயற்சிக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
|
Home
»
»Unlabelled
» அழுகையா வருதுங்க Vs சிரிப்பா வருதுங்க..
Wednesday, April 13, 2016
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
அட செல்வா சாருக்கு இலவச விளம்பரமோ? அவர் உங்களை திட்டவெல்லாம் மாட்டார், இப்பதிவிஅ படித்ததும் வானத்தில் மிதந்து அப்படியே ஜாலியாக பறந்து கொண்டிருப்பார். இல்லையா நான் ஒன்று சொல்வேன் சார்?
ReplyDeleteஅருகில் இருப்பவர்களிடம் அன்பைக்காட்டாமல் எங்கோ தூரத்தில் இருப்போரிடம் அன்பை தேட வேண்டிய நிலையில் தான் இன்றைய கால கட்டம் இருக்கின்றது சார்? அவரவர் அனுபவங்கள் தான் ஆசான்கள் எனும் போது அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வது எளிது,அதை நாமே கடைப்பிடிப்பது தான் அரிது!
என்னைப்பொறுத்த வரை என் அருகில் இருப்போருக்கு நல்லது கெட்டது நேரம் என் உயிரை கொடுத்து துக்கம் மறந்து உதவி செய்வேன். ஆனால் எமக்கென வரும் நேரம் அனாதியாய் அந்தரித்து போய் தவிர்த்து நின்றிருக்கின்றோம். பணம், நகை நட்டை விட நான் மனதுக்கு உகந்ததாய் நான்கு நல் ஆறுதல் வார்த்தைகள் தர யாருக்கும் மனசில்லை எனும் நிஜம் புரியும் போது தான் தூர இருப்போரின் அன்பைத்தேடி மனம் அலைபாய்கின்றது.
என் அனுபவத்தில் எனக்கு உயிர்ப்பாய் இருக்கும் சுரேஷ் அண்ணா, முஸம்மில் அனைவரும் இணைய நட்புக்கள் தான். இணையத்தில் அறிமுகமானாலும் எங்கள் வாழிவில் இன்றியமையால் போனதுடன் நான் உயர வழிகாட்டியானவர்களும் அவர்களே!
அதனால் எங்கும் நன்கையும் தீமையும் உண்டென உணர்ந்து நமக்கு சரியானதை தேவையானதை பற்றி அளவோடு இருந்திட்டால் எல்லாம் சுகமே! கடந்த பத்து வருட இணைய அனுபவத்தில் நான் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதையும் கற்றுணர்ந்தே இருக்கின்றேன்.அது தான் ஆரம்பத்தில் சொன்னேன், அனுபவமே நமக்கு நல்ல ஆசான!
ஹலோ யார் இது இங்கே கருத்து போடச் சொன்னா பதிவு எழுதுவது.... ஹீஹீ இங்கே நான் சொன்னது பொதுவான கருத்து அது உங்களைப் போல உள்ள தனிப்பட்டவர்களுக்கு பொருந்தாது... அரசியல் சாக்கடை என்று சொலும் போது அதில் சில வைரங்களும் இருக்கின்றதுதானே
Deleteஇது இலவச விளம்பரம் அல்ல செல்வா அவர்களின் எழுத்து மற்றும் சிந்தனையால் கவரப்பட்டு அவர் எழுத்திற்கு அளிக்கும் பாராட்டுக்கள்
Deleteஅவர் வானத்தில் ஜாலிய பறந்து கொண்டிருந்தால் பரவாயில்லை ஆனால் அப்படி காற்று அடிக்குதுன்னு அமெரிக்கா பக்கம் பூரிக்கட்டையை எடுத்து வராமல் இருந்தால் சரி
அந்தப்பூரிக்கட்டை அவர் தலை நோக்கி திரும்பாமல் இருந்தாலே போதும் சாரே? அதாவது நல்லா எழுதுறார் என அவருக்கு நிரம்ப ரசிகைகள் கிடைத்தால் அவர் வீட்டம்மாவும் உங்க ஆத்துக்காரியை பாலோ பண்ணலாம் என செவி வழி செய்தி காற்று வாக்கில் வந்து விழுந்ததுங்க! ஹாஹா!
Deleteஇப்பதிவினை எனவும் ,எங்கள் வாழ்வில் என திருத்தி படித்துகொள்ளுங்கள்! நேரடி தட்டச்சு வேகத்தில் தவறாகி விட்டது.
Deleteநாங்கள் பதிவை ஆதி முதல் அந்தம் வரை படித்து உள் வாங்கி த்தான் கருத்திடுவோம் சார், சும்மா மேலோட்டமாய் அருமை, எருமை எனவெல்லாம் போட்டு விட்டு போவதில்லை என்பதனால் எங்கள் கருத்துக்கள் உங்களுக்கு பதிவாய் தான் தோன்றும். அதுவும் நல்லது தானே...? எனக்கு பிடிக்காத ஒரே விடயம்,, கருத்துக்கு நன்றி சொல்கின்றேன் என உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி என மட்டும் எல்லோருக்கும் போட்டு எஸ்கேப் ஆகுவது தான், அதற்கு நன்றி சொல்லாமலே இருந்து விடுவேன்ல..! நன்றிக்கே இப்படி எனில் கருத்துக்கு எப்பூடி என யோசியுங்களேன் அவர்கள் உண்மைகள் சாரே?
Deleteபெண்களுக்கு நல்லது கெட்டது தெரியாமல் பேஸ்புக்கில் தம்மை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என சொல்லிக்கொண்டே கடைசியில் அழ் வேண்டும் எனில் உங்களை நாட சொல்லி விளம்பரம் செய்திருக்கின்றீர்களே அவர்கள் உண்மைகள்சார்? நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
ReplyDeleteஅதிலும் எங்களுடன் சேர்ந்து அழ நீங்கள் எதுக்குங்க சார்? அதுக்கு நாங்கள் கண்ணாடி முன்னால் நின்று அழுது கொள்ளலாமே? நீங்கள் இன்னும் சரியான ஸ்டெடியான, வைராக்கியமான சட்டென இளகாத, கரையாத பெண்களை சந்திக்கவில்லை என நான் நினைக்கின்றேன்.பெண்கள் என்றால் ஏமாளிகளாயும், அழுமூஞ்சிகளாயும் தான் இருக்க வேண்டுமோ?
நான் நல்லவனா கெட்டவனா என்பதை என்னுடன் பழகுபவர்கள்தானே சொல்ல வேண்டும்..என்னிடம் கேட்டால் நான் உலகமகா அயோக்கியன் என்றே சொல்லுவேன்.
Deleteசந்தோஷமாக இருக்கும் போது பலர் நம்முடன் சேர்ந்து இருப்பார்கள் ஆனால் கஷ்டப் பட்ட அழுது போது தோள்கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் நான் தோள் கொடுப்பதுடன் சேர்ந்து அழுவேன் காரணம் சிரிக்க வைத்தால் என்னடா இவன் நேரம் காலம் தெரியாமல் சிரிக்க வைக்கிறான் என்று நினைப்பீர்கள் ஆனால் அதே சமயத்தில் நான் கூட சேர்ந்து அழுதால் என்னடா இவன் அழுகிறானே என்று நினைத்து நீங்கள் சமாதனப்படுத்து போது உங்கள் அழுகை அப்படியே நின்றுவிடும்மல்லாவா
நிஜம் தான்! இங்கே எல்லாம் இப்போது போட்டியும் பொறாமையும் தான் அதிகமாய் இருக்கின்றதுப்பா! தாய் பிள்ளைகளாய் அன்னிய நாட்டில் பழகியோர் கூட நம் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு முதுகில் குத்தும் நிலை தான். அதிலும் இரத்த உறவுகள் பணத்துக்கு கொடுக்கும் மதிப்பை உணர்வுக்கும் உயிருக்கும் கொடுப்பதில்லை, கொடுத்தால் தான் ஊரும் உறவும் எனும் நிலையில் அயலும் அருகும் இருக்க அன்னியரை முகம் தெரியாதோரை அன்புக்கு தேடும் நிலையில் தான் பலர் வாழ்க்கை இருக்கின்றது.மனப்பிதறல்களும்,போராட்டமுமான புலம் பெயர் வாழ்வில் இணையமெனும் வலையில் விட்டில் பூச்சிகளாய் பலர் விழுகின்றார்கள். இதில் யாரையும் நோக முடியாது. இது கூட இல்லாவிட்டால் தம் உயிரை மாய்த்திடுவோர் எண்ணிக்கையும் அதிகமாயிருக்கும்.
Deleteஎனக்கு அழும் ஆண்களை பிடிப்பதே இல்லை. ஆண்கள் என பெண்களானாலும் சட்டென ஏதோ உலகமே இருண்டு முடிந்தது போல் எல்லாவற்றுக்கும் அழும் பெண்களையும் பிடிக்காது. அதனால் எனக்கு கஷ்டம் என நான் சொன்னால் அழுது என்னை சமாதானப்படுத்தலாம் என நினைத்து விடாதீர்கள் சார்!
Delete1.நீங்க எப்போவுமே சிரீயஸாகத்தான் இருப்பீர்களா அல்லது இந்தபதிவை படித்த பின் சிரீயஸாக ஆகிவிட்டீர்களா?
2. ஆமாம் நீங்க பண்ணப்போகும் பிரியாணிக்கு நான் தான் இன்று ஆடாகிவிட்டேனோ??
1. சீரியஸ் ஆக வேண்டிய விடயத்தில் நான் சீரியஸாய் தான் இருப்பேன், அதிலும் பெண்களை குறித்த ஒன்னுமே தெரியாது எனும் பதிவுகளில் எனக்கு நியாயமென பட்டதை நான் சொல்வேன்.யாரோ,யாருக்கோ,எவரோ,எங்கோ தானே எனும் அசட்டைத்தனம் என்னிடம் கிடையாது. ஏன் எனில் நான் எழுதும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எங்கோ ஓரிருவருக்காவது வாழ்க்கைப்பாடமாகும் என்பது என் அனுபவப்புரிதல். நானும் கூட பலரின் எழுத்தைப்படித்தே என்னை வளர்த்திருக்கின்றேன் என்பதால் எழுத்தில் நான் அசட்டுத்தனம் செய்வதில்லை.
Deleteநான் செலவழிக்கும் ஒவ்வொரு வினாடியும் எனக்கு பொக்கிஷமானது சார்.அதனால் சீரியஸுக்கு சீரியஸ் தான்.
2.அரசியல் பதிவுகள் அல்லாமல் இந்த மாதிரி சமூகத்துக்குகந்த பதிவுகளை எப்போதாவது இடும் உங்களை பிரியாணி செய்வேனா சார்? அதிலும் எழுதவே நேரம் இல்லாமல் இருக்கும் என்னை அமர வைத்து கருத்து போட வைக்கும் உங்களையெல்லாம் பிரியாணி செய்ய மாட்டேன் சாரே நம்புங்கள்!
This comment has been removed by the author.
ReplyDeleteபொதுவாக மதங்கள் அன்பை போதிக்கின்றதே தவிர அதனை செயல் படுத்துவதில்லை! அதிலும் எல்லா மதமும் உன்னைபோல் உன் சகோதரனை நேசி, அன்பு செய்யென சொல்லும் போது அதை செய்யாமல் பெற்ற தாய் பட்டினியில் இருக்க கோயிலில் அன்னதானமும், உடன் பிறந்தான் பிழைக்க வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கைப்போராட்டமுமாயிருக்க கோயிலுக்கு காணிக்கையுமாய் அள்ளிக்கொடுத்தால் வன்மமும் விரோதமும் வ்ராமல் அன்பா வளரும்.அடப்போங்க சார்? நான் இந்த பதிவைப்படிக்கவே இல்லை. எனக்கு எல்லா மதமும் சம்மதம் தான். ஏன் எனில் நான் மனதை மட்டும் தான் நேசிக்கின்றேன், எவர் மதத்தையும் அல்ல!
ReplyDeleteநாம் அழலாம் நம் சந்ததிகள் அழாமல் இருக்க நம்மாலான முயற்சிகள் எடுப்போம்....
ReplyDeleteநண்பரே நீங்க சிரிக்க வைக்கிறீங்களோ என்னமோ
ReplyDeleteஆனால் சிந்திக்க வைப்பீர்கள்....
என்னை பொறுத்தவரை நான் என் வேதனையிலும்
சிரிப்பவன் என்னை நீங்கள் சிந்திக்க
வைப்பீர்கள் என நம்புகிறேன்....
இந்த டீல் பிடிச்சிருக்கு
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Open minded ஆக மற்றவர்கள் பதிவையும் பாராட்டும் மனது எல்லோருக்கும் வராது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteமீரா செல்வகுமாரின் ஃபாலோவர் என்பதால் படித்து விட்டேன். நல்ல பதிவை அறிமுகப் படுத்தியதோடு கூடுதால தன் கருத்துகளையும் இணைத்து சுவைபட அளித்தமைக்கு மதுரை தமிழனுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteபதிவின் வடிவமைப்பு சூப்பர்
அடடா.அத்தனை மகிழ்ச்சி...
ReplyDeleteமீரா செல்வகுமாரின் பதிவைப் படிச்சுட்டமே...நாங்க ஒவ்வொரு நாளும் இந்த அரசியல் கூத்துகளைப் பார்த்து நமக்கு ஒரு நல்ல தலைவர் இல்லையே நு ஓட்டு எப்படிப் போடுவதுனு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டுருக்கோம்....உங்கள் வலப்பக்கக் கருத்துகள் செம தமிழா...உங்க டீல் ஓகே!!! சரி அழுவாச்சி இருக்கட்டும் கொஞ்சம் முன்ன மாதிரி கண்ணுல தண்ணி வர அளவு (இதத்தான் அழுகைனு சொன்னீகளோ!!!) சிரிக்கவும் வையுங்களேம்பா...
ReplyDeleteகீதா
தங்களின் பதிவை படித்து விட்டு அங்கே சென்று படித்தேன். மிகவும் அருமையாக எழுதி இருந்தார்.
ReplyDelete