மோட்சம் செல்ல ஜெயலலிதா அழைக்கிறார்
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களில் இது வரை நான்கு பேர்கள் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்த முதல்வர் தேர்தலுக்கு பின் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்..

இப்படி பலியானவர்களை திடீர் உடல்நலக் குறைவு' காரணமாக இறந்தவர்கள் என்று சொல்லி இரங்கல் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
அவரின் கூட்டத்திற்கு வருபவர்களை நீண்ட நேரம் எந்த வித பந்தல்கள் இல்லாமல், வெட்ட வெளியில், பகல் நேரத்தில் அதுவும் இந்த கோடை காலத்தில் ஜெயலலிதா வந்த பேசி செல்லும் வரை அவர்களை எங்கும் செல்லவிடாமல் தடுப்பதால் இப்படி நிகழ்கின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுகளை கிண்டல் செய்யும் விதத்தில் மனதில் எழுந்த போட்டோடூன்தான் இந்த படங்கள்
ஜெயலலிதாவின் தேர்தல் பிராச்சராத்தில் மக்கள் பலியானதற்கு காரணம் இப்படித்தான் இருக்குமோ?

மாற்று கட்சியை பற்றி கொஞ்சமாவது சிந்தியுங்கள் மக்களே
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மைதான் நண்பரே தமிழனுக்கு சூடு சொரணை இருக்கிறதா ? இல்லையா ? என்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும்
ReplyDeleteதொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லாத காலத்தில் பொதுக் கூட்டங்களுக்கு வரவேற்பு இருக்கும்.மக்கள் விரும்பி தலைவர்களையும் திரை நட்சத்திரங்களையும் காண வருவார்கள். இப்போதும் அப்படி வருவதாக காட்ட மக்களின் வறுமையை பயன்படுத்தி காசு செலவழித்து கூட்டம் வரவைத்து அவர்களை வெயிலில் அவதிப் பட வைப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்தாலும் நல்லதுதான்.
ReplyDeleteபடங்களின் டயலாக் அருமையான நகைச்சுவை ...
ReplyDeleteநிச்சயமாக மாற்றுக்கட்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மழை வெள்ளத்தின் போது வெளியிலேயே வராத ஜெஜெ மக்களை வெள்ளம் அடித்துக் கொண்டுச் சென்ற போது வெளி வராத ஜெஜெ....ஹும்...அம்மாவாம் அம்மா? அம்மா என்ற மிகப் புனிதமான வார்த்தையையே, அர்த்தத்தையே கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. அரசியல்வாதிகள் எல்லோரும் ஏசி அறையிலும், ஏசி காரிலும் வந்து பேசுவார்களாம் ஆனால் பாவப்பட்ட மக்கள் மட்டும் இவர்கள் உளறல்களை கோடைதகிக்கும் வெயிலில் வந்து கேட்கவேண்டுமாம். நல்லாருக்குப்பா நியாயம். மக்கள் காசிற்கு மயங்காமல் சிந்திக்க வேண்டும். இந்த அரசியல்வாதிகள் இவங்கதான் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள்...மக்கள் நிச்சயமாகச் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteநட்சத்திர கிரிக்கெட்டைப் புறக்கணித்தார்கள் அதற்குச் சமூக வலைத்தளங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அது போன்று இப்போது இந்தச் சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்துகள் முன்வைப்பதை உணர்ந்து மக்கள் இந்தத் தேர்தலில் அதை நிரூபிக்க வேண்டும்... நிரூபிப்பார்கள் என்ற ஒரு சிரு நம்பிக்கை வந்துள்ளது பார்ப்போம்...
தேர்தல் ஆணையம் இன்னும் சில கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்தால் நல்லது,,
கீதா