Monday, April 25, 2016

வைகோ தேர்தலில் போட்டியிடாதாதற்கு இது தான் காரணம்.



கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யாமல் புறகணித்து மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார். ஏன் இன்று மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சாதி ஓட்டுகளை முன்னிறுத்தி திமுக வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு நான் நேற்று மாலை அணிவிக்க செல்லும்போது என்னை தடுத்து நிறுத்தினார்கள் என்று வைகோ குற்றம்சாட்டினார். இந்தத் தேர்தலில் என்னை மையமாக வைத்து தேவர்- நாயக்கர் இடையே சாதி மோதல் ஏற்படுத்த திமுக சதியில் ஈடுபட்டுள்ளதாக எனக்கு நம்பகத்தகுந்த தகவல் கிடைத்தது. எனவே சாதி மோதலை தவிர்க்கும் வகையில் நான் போட்டியில் இருந்து விலகிறேன் என வைகோ தெரிவித்தார்.

http://avargal-unmaigal.blogspot.com/2016/04/summer-special-class.html

கழக தலைவரின் கலகம் ஆரம்பம் தன் கட்சி தோல்வி அடைவது நிச்சயம் என்று தெரிந்த போதிலும் அது மிக மோசமான தோல்வியை அடைய வைகோதான் காரணம் என்பதால் தனது சாணக்கியதனத்தை வெளிபடுத்தி இருக்கிறார் என்பது அப்பட்டமான உண்மை. இதையேத்தான் பாமக கட்சி முதல்வர் வேட்பளார் அன்புமணியும் உறுதிபடுத்தி இருக்கிறார். தான் பதவிக்கு வரமுடியவில்லை என்றால் தமிழகத்தில் அமைதி நிலவக் கூடாது என்று நினைக்கும் நல்ல கழகதலைவர் இவர்தான் போல


போட்டியிட்டு தோல்வி அடைந்து அவமானப்படுவதை விட விலகி நின்று பெயரையாவது காப்பாற்றுவோம் என்று வைகோ செயல்பட்டு இருப்பதாக பல உடன்பிறப்புக்கள் வைகோ பற்றி இணையதளத்தில் சொல்லி வருகிறார்கள்.வைகோ தோல்வியை பற்றி என்றும் கவலைப்பட்டதில்லை ஆனால் தன் கண்முன்னாலே தான் வளர்த்த கட்சி இப்படி அழிந்து போயிட்டதே என்று கலகதலைவர் ஆரம்பித்துவைத்த சதியில் சிக்காமல் வைகோ தப்பித்துவிட்டதாகவே பலரும் கருதுகிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. வைகோவின் அரசியல் நேர்மை கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தன்னை காரணமாக வைத்து கலகம் மூளும் என பின்வாங்குவது இன்றைய அரசியல் சூழலில் சரியா ?

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  2. அய்யா..தமிழா....இவருக்கெல்லாம் பதிவு எழுதி உங்கள் நேரத்தை வீணடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...நீங்களே மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கள் அவரை நேர்மையான அரசியல்வாதி என்பதை ஒத்துக்கொள்வீர்களா?

    வரவர அவர் பெயரைக்கேட்டாலே எரிகிறது...அதனால் தான் கொஞ்சம் ஓவராய்ட்டேன்...நண்பன்...இந்த மேட்டர்ல பீலாய்ட்டேன்...ஒரு பூரிக்கட்டை பதிவு போடுங்கப்பா...கூலாய்டுவேன்..

    ReplyDelete
    Replies
    1. அட! செல்வா நீங்களுமா...அஹஹ்ஹ பூரிக்கட்டைக்கு ஃபேனா....நாங்களும் ரொம்பவே .....மதுரைத் தமிழன் வாழ்க!!! அவரது பூரிக்கட்டைச் சின்னம் வாழ்க! பதிவுகள் வளர்க!!!! ஹிஹிஹி இது அரசியல் கோஷம் அல்ல...ஐயையோ பூரிக்கட்டைப் பதிவுகள் வளர்கனா தமிழன் சொல்லுவாரு, "ஹும் நான் பூரிக்கட்டை அடி வாங்கி நான் எப்படிக் காமெடிப் பீசாகிருக்கேன் உங்களுக்கெல்லாம்...நல்லாருங்கப்பு" அப்படினு..ஹிஹீஹீ

      எனக்கும் ஏனோ இப்போது தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றிப் பேசி போரடித்துவிட்டது. நிலைமை நன்றாக இல்லை. ஒரு நல்ல கேரிஸ்மாட்டிக் தலைவர் இல்லை என்பதால் அலுப்பு வருகிறது...

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.