உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, February 9, 2016

ஒபாமாவிடம் அவார்ட் வாங்கிய தமிழன்


avargal unmaigal
ஒபாமாவிடம் அவார்ட் வாங்கிய தமிழன்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிகாலம் இந்த ஆண்டோட முடியப் போவதால் அவருக்கு பதவியில் இருக்கும் போதே பல வித கலாச்சார மக்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். 


அதனால் அவர் முதலில் தமிழ் கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ள முயன்ற போது அவருக்கு மதுரைத்தமிழனைப்பற்றி யாரோ எடுத்து சொல்லி இருக்கிறார்கள். அதனால் அவர் என் வீட்டிற்கு வர விரும்புவதை அரசாங்க அதிகாரிகள் எனக்கு தகவல் தந்தனர். அதற்கு நானும் சரி என்று சொல்லிவிட்டேன்..

 ஒபாமாவும் அவரது மனைவியும் சொன்னபடி எனது வீட்டிற்கு வந்தார்கள். வந்த அவர்களுடன் நாங்கள் பேசிவிட்டு வடைபாயசத்துடன் சம்பார் வத்த குழம்பு ரசம் மோர் கூட்டு பொறியல் என்று பறிமாறி நாங்களும் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டோம். அப்போது நான் ஒரு வடையை எக்ஸ்ட் ராவாக எடுத்து சாப்பிட்டேன் அதை பார்த்த என் மனைவி ஒபாமா இருப்பதையும் கண்டுக்காமல் கண்ணாபின்னா என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.. அப்புறம் என்ன ஒபாமாதான் என் மனைவியை சமாதானப்படுத்தினார். அதன் சாப்பிட்டு முடிக்கும் போது குலோப்சாமுனை சாப்பிடும் போது ஒன்று எக்ஸ்ட் ராவாக எடுத்து சாப்பிட்டேன். அதை பார்த்த என் மனைவி சத்தம்கித்தம் போடாமல் கிச்சனுக்கு போய்விட்டாள். நானும் என்னடா அதிசயமாக இருக்குதே என்று ஒரு நொடி நினைத்துதான் இருந்தேன். எல்லாம் ஒரு நொடி சந்தோஷம்தானுங்க. அந்த ஒரு நொடியில் என் மனைவி கிச்சனில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து என்னை மொத்து மொத்து என்று மொத்திவிட்டாள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒபாமாவும் அவரது மனைவியும் என் மனைவியை சமாதானப்படுத்தினர். என் மனைவி இப்படி நடந்ததிற்கு காரணம் எனக்கு சுகர் இருப்பதால் உணவில் கண்ட்ரோல் வேண்டும் என்பதால்தான்.

கடைசியாக விருந்து ஒபாமா ஒயிட் ஹவுஸிற்கு கிளம்பினார். அவர் கிளம்ப்பும் போது அவரது கார்வரை நான் சென்று அனுப்பி வைக்கும் போது அவர் என்னிடம் கேட்டார். அடேய் தமிழா தமிழர்கள் வீரம் நிறைந்தவர்கள் என கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் நீ என்னடா என்றா உன் மனைவி திட்டும் போது அடிக்கும் போது அமைதியாக இருக்கிறாய் உனக்கு வெட்கமாக இல்லையா என்றார்.

நான் உடனே ஒபாமா நான் என் மனைவி கண்டபடி திட்டும் போது அமைதியாக இருக்க காரணம் நான் என்  மனைவியின் பேச்சுரிமையில் தலையிடுவதில்லை அது போல நான் எந்த பெண்ணை கீண்டல் பண்ணும் போது அவர்கள் பதிலுக்கு திட்டினாலும் அவர்களின் பேச்சுரிமையில் தலையிடுவதில்லை அது போல என் மனைவி பூரிக்கட்டையால் அடித்தாலும் மற்ற பெண்கள் செருப்பால் அடித்தாலும் நான் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று சொல்லி இப்படிதான் தமிழ் ஆண்கள் பெண்களின் பேச்சுரிமையும் சுதந்திரத்தையும் பறிக்காமல் பேணி பாதுகாத்து வருகிறோம் என்றேன்.


அவ்வள்வுதானுங்க அதை கேட்டு சென்ற அவர் ஒயிட் ஹவிஸிற்கு என்னை கூப்பிட்டு பெண்களின் பேச்சுரிமை மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் எனக்கு அவார்ட் கொடுத்தார்...

என்ன மக்களே என்னை போல அவார்ட் வாங்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் வீட்டில் நீங்கள் எந்த அளவிற்கு பேச்சுரிமைக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை வீடியோ எடுத்து ஒயிட் ஹவுஸிற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கும் ஒபாமா அவார்ட் தருவதாக சொல்லி இருக்கிறார்.

அப்ப நீங்கள் ரெடியா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. நினைத்தோம் தலைப்பைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது இது நம்ம தமிழனின் லொள்ளுப் பதிவு என்று....அது சரி பூரிக்கட்டையாவது ஓகே ஆனால் ஒபாமாவிற்கு எங்கள் சகோதரி உங்களைத் திட்டினார் என்பது எப்படித் தெரிந்தது!!!!? தமிழ் புரிந்துவிட்டதா?!!! மிஸஸ் ஒபாமாவும் கற்றுக் கொண்டிருப்பார்...பூரிக்கட்டையால் எப்படி அடிப்பது என்பதை ஹிஹிஹி மதுரைத் தமிழன் வாழ்க என்று சொல்லியிருப்பாரே..ஒபாமா பாவம்!! அதுவும் பதவிக்காலம் முடியும் தருவாயில்...

  கீதா

  ReplyDelete
 2. இப்பத்தான் புரியுது மதுரைத் தமிழனுக்கு ஒபாமா பரிசு கொடுத்ததன் ரகசியம்....எல்லாம் மிஸஸ் பாமாவின் பரிந்துரையாகத்தான் இருக்கும்!! ஹிஹி

  ReplyDelete
 3. அவரும் தங்களைப் போல் தானோ,,,,

  ReplyDelete
 4. ஆஹா...இப்படி ஒரு விருதா....அருமை

  ReplyDelete
 5. அந்தப் பூரிக்கட்டை ஆயுதம் பற்றி
  ஏதும் விசாரிக்கவில்லையா ?

  பிடித்துக் கொள்ளவும்
  நன்றாக அடிக்கவும் வாகாக உள்ள
  அந்த ஆயுதத்தைக் கூட பெண் சுதந்திரத்திற்கான
  லோகோவாக மாற்றி விடலாம எனச் சொல்லவில்லையா ?

  ஏன் பாதி விஷயத்தை மறைக்கிறீர்கள்

  ReplyDelete
 6. வயிறு வலிக்க சிரித்தேன் தமிழரே!

  ReplyDelete
 7. முடியல்ல!நிரம்ப கொள்ளு தின்பதால் இருக்கும் என நினைக்கின்றேன்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog