உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 28, 2015

படிக்க சிரிக்க மோடிஜி ஜோக்ஸ்avargl unmaigal
படிக்க சிரிக்க மோடிஜி ஜோக்ஸ்


பிஜேபி கட்சியில தலைவரா வருவதுக்கு ஒரு  பால் கறக்கற ஒரு போட்டி வச்சாங்களாம் அதில மோடிஜி அத்வானி மற்றும் பலரும் கலந்துகிட்டாங்க. அந்த போட்டியில் யார் அதிகமா பால் கறக்கறாங்களோ  அவர்தான் வெற்றி பெற்றவர்கள் என  அறிவிச்சார்கள் . போட்டி ஆரம்பமாச்சி எல்லாரும் வேக வேகமா கறக்க ஆரம்பிச்சாங்க. போட்டி நேரம் முடிஞ்சதும் ஒவ்வொருத்துவரும் எவ்வளவு கறந்தாங்கன்னு பார்வையிட்டார்களாம். பலர்  ஒரு குடம் பால் சேகரித்தது இருந்திருக்காங்க அதில அத்வானிமட்டும் மற்றவர்களை விட  அதிகமா கறந்துருக்கார் அதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள் போட்டியாளர்கள். பரவாயில்லையே நம்ம ஆட்கள் மிக நல்ல திறமையோடதான் இருக்காங்கன்னு நினைச்சுட்டு அத்வானியை தலைவராக அறிவிக்கும் போது கடைசியாக மோடிஜி ஒரு சின்ன சொம்புல கொஞ்சூண்டு பாலை கறந்து கொண்டு வந்தாரம். அதை பார்த்த போட்டியாளர்கள் சிரித்தவாறே மோடிஜி  ஏன் இவ்வளவு  கொஞ்சமாக இருக்குன்னு கேட்டாரார்களாம். அதற்கு மோடி  எல்லாருக்கும் நீங்க பசுமாடு கொடுத்திங்க ஆனா எனக்கு மட்டும் காளை மாடு கொடுத்திட்டிங்களே என்றாராம்.joker modi, humour, jokes ஜோக்ஸ்,நகைச்சுவை,

மோடிஜி பிரதமர் ஆனா பின்  ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிறதுக்காக ரயிலில் டில்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். அவர் பயணம் செயத பெட்டி ரயிலின்  கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருந்திருக்கிறது ...அதோட தூக்கி தூக்கி போட்டுச்சு.  அதனால் ரொம்ப கடுப்பாகிப் போன மோடிஜி  ரயில்வே அமைச்சரை கூப்பிட்டு இனி எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட்டார்

மோடிஜியும் அதானியும் ஓட்டலுக்கு சாப்பிட போனாங்களாம். மோடிஜி சாப்பிட்டு முடிச்சிட்டு கை கழுவுற இடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம். அதனை பார்த்த அதானி எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்கன்னு கேட்டாராம். அதுக்கு மோடிஜி  சொன்னாராம் "என்னை என்ன இங்கிலீஷ் படிக்க  தெரியாத கேணையான்னு நெனச்சியா...இங்கே பாரு இந்த இடத்துல "வாஷ் பேசின்"னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்காங்க  இதை கூட எனக்கு படிக்க தெரியாத என்ன அப்படின்னாராம்

joker modi, humour, jokes ஜோக்ஸ்,நகைச்சுவை,

மோடிஜி ஐபேட் வித்துட்டு இருந்தாரா அப்ப ஐபேட் வாங்க வந்த மன்மோகன்சிங் என்ன மோடிஜி! ஆயிரக் கணக்குல ஐபேட் அடுக்கி வச்சிருக்கீங்க. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா அப்படின்னு  கேட்டாராம். அதுக்கு மோடிஜி  அட போப்பா! ஒரு மாசத்துல ரெண்டு அல்லது மூன்று தாம்பா விப்பேன். நான் ஒன்றும் அவ்வளவு நல்ல ஐபேட் வியாபாரி இல்லை அதுமட்டுமல்ல இது டீ விற்பது மாதிரி இல்லை என்றார். அதை கேட்ட மன்மோகன்சிங்க் குழப்பமாகி அப்புறம் எதுக்குங்க இத்தனை ஐபேட்  வாங்கி  வச்சிருக்கீங்க"ன்னாராம். அதுற்கு மோடிஜி என்னப்பா பண்றது  எனக்கு விற்ற ஆப்பிள் கம்பெனிகாரன் மிக   நல்ல வியாபாரியாச்சே என்றாரம்


மோடிஜி தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல செல்லும் போது அவர் விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொன்னாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல மோடிஜி "போயிங்! போயிங்! போயிங்!"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சாரு. இவர் கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து "பீ சைலண்ட்" அப்படின்னாரு. உடனே மோடிஜி  "ஓயிங்! ஓயிங்! ஓயிங்!"  என்று கத்த ஆரம்பிச்சுட்டாரு


 மோடிஜி   பாரதப் பிரதமாரகமட்டுமல்ல இப்போது ஜோக்கராகவும் ஆகிட்டார். இனிமேல் சர்தார்ஜி ஜோக்ஸ் மறைந்து போய் மோடி ஜோக்ஸ் வலம் வர மதுரைத்தமிழன் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

உங்களுக்கு தெரிந்த மோடி ஜோக்ஸ் ஏதும் இருந்தால் இங்கே பின்னுட்டத்தில் சொல்லி செல்லுங்கள்

சிரிச்சா மட்டும் போதுமா கொஞ்சம் சிந்திக்க
திருட்டு கொலை கொள்ளை பலாத்காரம் திவிரவாதம் போன்றவைகளை கண்டுபிடிக்க அல்ல மாட்டி இறைச்சி வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்கவே போலீஸ் படையை மாற்றி அமைத்திருக்கிறார் திருவாளர் #மோடி. கூடிய சீக்கிரம் மாட்டி இறைச்சி தின்பவர்களை கண்டுபிடிக்க இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சிரியம் இல்லை . இந்தியா நிச்சயம் வல்லரசு ஆகிவிடும் #modi #beef #india

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. :)))))

  எல்லாமே ஏற்கெனவே படித்த ஜோக்ஸ் - வேறு பெயர்களில்!
  தம +1

  ReplyDelete
  Replies

  1. உஷ்.......இந்த மோடிஜி ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குபோல இருக்கிறது என்ற ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லிடாதீங்க.....

   Delete
  2. மிஸ்டர் எக்ஸை மறந்துட்டீங்களே....!!

   Delete
  3. மிஸ்டர் எக்ஸும் சர்தார்ஜிதானே?

   Delete
 2. சர்தார்ஜி ஜோக்குகளை மோடிஜி ஜோக்காக உருமாற்றி மோடியின் பயணத்தில் மேலும் ஒரு மணி மகுடத்தை சேர்த்த மதுரைத் தமிழனுக்கு அகில உலக மோடி நகைச்சுவை மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. இவரும் முந்தைய சர்தாஜி மன்மோகன் செய்ததை போலவேதானே இவரும் செய்கிறார்

   Delete
 3. இருந்தாலும் ரொம்போ தைரியம் தான் மதுரை தமிழனுக்கு. எச்சி. ருசா கலர் படையை ஏவுவார் U.S. சில் நடமாடதவரு பண்ணிவிடுவார் பத்திரமாக இருக்கவும்.

  tha.ma + 1

  M. செய்யது
  Dubai

  ReplyDelete
 4. பழைய ஜோக்குக்களை மோடிக்கு ஏற்றவாறு மாற்றி அசத்திவிட்டீர்கள்! ஹாஹாஹா!

  ReplyDelete
 5. கழுவி கழுவி ஊத்திடின்களே!

  ReplyDelete
 6. இதெல்லாம் ஒரு பிழைப்பா?

  ReplyDelete
 7. பழைய ஜோக்குகள் புதிய வடிவில்.... :) என்றாலும் ரசித்தேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog