உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, September 18, 2015

ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?
ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் ஒரு விறுவிருப்பு காட்சி  இப்படிதான் படமாக்கப்படுகிறதாம். வில்லனை ரஜினிகாந்த் அடித்து உதைத்து அவனை தமிழக அரசு பஸ்ஸில் உட்காரவைத்து ஒட்டி வருகிறார். அப்போது வில்லன் கதறி அழுது என்னை பஸ்ஸில் இருந்து இறக்கி காரிலாவது கூப்பிட்டு போ என்னை தமிழக அரசு பஸ்ஸில் மட்டும் உட்காரவைத்து கூப்பிட்டு செல்லாதே   இனிமேல் நான் தப்பே பண்ணமாட்டேன் என்று கதறி அழுவது போல காட்சி அமைக்கப்படுகிறதாமே? ஹீஹீ  இது ஒரு கற்பனைதான்)


மத்திய அரசு அறிவிப்பு:

இனிமேல் தூக்கு தண்டனை கைதிகளை தூக்கில் இடுவதற்கு பதிலாக அவர்களின் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி தமிழக பஸ்ஸில் உட்கார வைத்து கேரளாவிற்கு ஒரு டிரிப் அனுப்பி வைப்போம் அவர்கள் உயிருடன் திரும்பி வந்தால் அவரகளுக்கு அந்த தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்போம்...

மனைவியை கொல்ல முயற்சி:

கணவன் தன்னை கொல்ல முயற்சித்தாக மனைவி போலிஸாரிடம் புகார். போலீஸார் அந்த பெண்மணியின் கணவரை அரெஸ்ட் செய்து கோர்ட்டில் நிறுத்தினார்கள். கோர்ட்டில் அந்த மனிதன், தனக்கு மனைவியை கொலை செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்று மறுத்து வாதாடினார். ஆனால் பெண் தரப்பு வக்கில், அந்த கணவன் மனைவிக்கு தமிழக அரசு பஸ்ஸில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்ததுக்கான ஆதாரத்தை காட்டியதும் நீதிபதி அந்த கணவருக்கு ஆயுள் தண்டனையை கொடுத்தார்

மருமகளின் சதித்திட்டம்

மனைவி: என்னங்க உங்க பெற்றோர்களை பார்த்தால் கஷ்டமாக இருக்குங்க..எப்பா பார்த்தாலும் வீட்டிலேயும் அடைஞ்சு கிடக்குறாங்க அதனால அவங்க இயற்கையை ரசித்து பார்த்து எஞ்சாய் பண்ண கேரளாவிற்கு நம்ம தமிழக அரசு பஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணி டூருக்கு அனுப்புங்க. பாவமுங்க அவங்க..

கணவன்: அடியே உனக்கு என் பெற்றோர்கள் என்னடி கொடுமை செஞ்சாங்க அவங்களை இப்படி சாக அடிக்க முயற்சி செய்கிறாயே நீ எல்லாம் நல்லா இருப்பியா?.


என்னங்க மேலே உள்ள நகைச்சுவைகள் உங்களுக்கு புரியலைன்னா கிழே உள்ள வீடியோவை பாருங்கள் அப்போது உங்களுக்கு நன்றாக புரியும்

செய்தி :தமிழக அரசு பஸ்ஸின் அடிப்பாகம்  உடைந்து ஒடும் பஸ்ஸில் இருந்து கேரளாவை சேர்ந்த பெண் கிழே விழுந்தாள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

நையாண்டி,ஜெயலலிதா,நகைச்சுவை

6 comments :

 1. அட பாவி .. மதுரை தமிழா.. கிட்ட தட்ட 30 வருடம் களைத்து ரஜினி அவர்வயசுகேத்த ஒரு பாத்திரத்தில் நடிக்கின்றார். இத்தனை வருடம் கழித்து ரஜினி படம் பார்க்கலாம் என்ற நப்பாசையில் இருக்கேன். நீங்க என்னானா இதை அரசியல் பண்ணி சொதப்பிடுவிங்க போல இருக்கே !

  நல்ல நகைசுவை பதிவு.. நோய் விட்டு போச்சி.. அதுதாங்க வாய் விட்டு சிரித்தேன்.

  ReplyDelete
 2. மதுரைதமிழன் .போட்டு தாக்கிவிட்டிர்கள் ,அதிலும் மனைவிக்கு டிக்கட் புக் பண்ணிய ஆதாரம் காட்டியதும் கணவனுக்கு ஆயுள் தண்டனை அபாரம் .சிரித்து சிரித்து வயிறு வலிக்குது .

  ReplyDelete
 3. பாவம் அந்த பெண்மணி. பொதுவாக இந்தியாவின் வட பகுதிகளில் பேருந்துகள் பராமரிப்பு என்பதே குறைவு. தமிழகத்தில் நன்றாக இருக்கும் என நான் சொல்லிக் கொள்வேன். அந்த நினைபினை மாற்றிக் கொள்ள வேண்டும் போல!...... :(

  ReplyDelete
 4. பாவம் ரஜினி. படம் வெளியிட்டபிறகு, வினியோகஸ்தர்கள் அவர் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார்கள். நீங்கள் படப்பிடிப்பு நடக்கும்போதே அவர் நிம்மதிக்கு உலை வைக்கிறீர்களே..நியாயமாரே....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog