உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, September 10, 2015

அமெரிக்க வாழ் தமிழரின் ஒரு புது முயற்சி தமிழ் ப்ளாக் சங்கமம்avargal unmaigal
அமெரிக்க வாழ் தமிழரின் ஒரு புது முயற்சி தமிழ் ப்ளாக் சங்கமம் Tamil Blog Sangamam


வலைதளங்களை வாசிப்பவர்களுக்காக அமெரிக்க வாழ்  மதுரைத்தமிழர் விஜய் கார்த்திக் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்களுக்க ஒரு பிரயோத்தயமாக  ஆப்ஸ் வெளியிட்டுள்ளார். வெகு விரைவில் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்களுக்கும் இதை வெளியிடப் போவதாக சொல்லி இருக்கிறார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதைப் பற்றிய விபரங்கள் இங்கு வெளியிடப்படுகின்றது. முடிந்தால் அந்த ஆப்ஸை உங்கள் ஆண்ட் ராய்ட் போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி  பாருங்கள். என்னிடம் ஆப்பிள் போன் இருப்பதால் இப்போது இதனை பயன்படுத்த முடியவில்லை அதனால் இதைப்படிப்பவர்கள் அதனை பயன்படுத்தி கருத்தை அவருக்கு சொல்லுங்கள் அது அவருக்கு மேலும் அந்த ஆப்ஸை சிறப்பாக்க உதவும்.


டவுன்லோடு செய்ய இங்கே செல்லவும்


Tamil Blog Sangamam” is an app to read all of your favorite blogs in few clicks. Sure you will enjoy this app.We collected and categorized most of the interesting tamil blogs in our app, Choose any “Categories” and enjoy reading the blogs as you wish.Admired on some bloggers articles and want to follow them? Here's is your option to have it in your "Favorites" list and read in a few click.Got interrupted by any important stuff while reading interesting article? You can mark it as "Bookmarks” and enjoy reading when you are free.

Thought of visiting recently viewed blogs? You can check it in "Recently Viewed" list.We concern on your device storage, hence limited your Favorites, Bookmarks and Recently Viewed count to maximum 20.Found some blogs in wrong category? Couldn’t find any specific blog or category? Please “Contact Us” via Email or Facebook page or Twitter and experience our best customer support.


Please provide your valuable feedbacks and comments to help us to serve you better. “Share the App” with your friends and make Tamil blog writers get more readers.

Android மென்பொருளில் இயங்கும் நுண்ணறிபேசி (Smartphone) உபயோகிக்கும் வாசகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலி  "Tamil Blog Sangamam".

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் , நாம் அனைவரும் நமது நுண்ணறிபேசியிடம் எதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு கொண்டிருக்கிறோம். விடிந்தவுடன் நம் கை தேடுவது , இரவு படுக்கை அருகே இருப்பது நம் நுண்ணறிபேசியே. எதற்காக நாம் இவ்வாறு செய்கிறோம் என்று யோசித்தால் WhatsApp Facebook Twitter போன்ற செயலிகள் காரணமாகின்றன.

இப்படி நமது அன்றாட வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் இந்த நுண்ணறிபேசியில் , வாசகர்களாகிய நாம் விரும்பிய தமிழ் வலைப்பதிவுகளை இலகுவாகவும் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கிய செயலி தான் "Tamil Blog Sangamam". இதில் எங்களுக்கு தெரிந்த தமிழ் வலைப்பதிவுகளை தொகுத்துள்ளோம். அனைவரும் இதை தங்கள் நுண்ணறிபேசியில் பதிவிறக்கம் செய்து , தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
டிஸ்கி : இந்த துடிப்புமிக்க இளைஞரை நமதுதளம் வாழ்த்துகிறது. இது போல யாரும் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தால் தகவல் தரவும். அதை பதிவாக்கி எனது தளங்களில் அறிமுகப்படுத்துகிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments :

 1. என்னிடம் இந்த மாதிரி ஃபோன்கள் இல்லை. கண்னியை உபயோக்கிறேன் அதற்கே பல தடுமாற்றங்கள்

  ReplyDelete
 2. "பல்துறைகளைச் சேர்ந்த - அனைவரது நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த சுவையான விவரங்கள் "நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை"http://programmedirector.blogspot.in/ என்கிற எனது இந்த வலைப் பூ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த உங்களின் அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்." முகநூளிலும் இந்த பக்கங்கள் சேர்க்கப்படும் ..இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.. https://www.facebook.com/Programmedirectors

  ReplyDelete
 3. நல்ல முயற்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
 4. தரவிறக்கிக் கொள்கிறேன்! நண்பருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்!

  ReplyDelete
 5. இதோ முயற்சி செய்கிறேன் ...- இராய செல்லப்பா

  ReplyDelete
 6. சூப்பரஅப்பு சாரி ஆப் ...
  தம +

  ReplyDelete
 7. விஜய் கார்த்திக் போற்றப்பட வேண்டியவர்
  போற்றுவோம்
  ந்ன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
 8. தரவிறக்கம் செய்துள்ளேன்

  ReplyDelete
 9. அட! சூப்பர் ! இனிதான் அன்ட்ராய்ட் ஃபோன் /ஸ்மார்ட் வாங்கணும்....இன்னும் ஸ்மார்ட் ஆகலை!! வாங்கி தரவிறக்கம் செய்துட்டாப் போச்சு...பாராட்ட வேண்டிய முயற்சி! வாழ்த்துகள்! விஜய் கார்த்திக் அவர்களுக்கும் அதை பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 10. Very good app, useful and handy for reading the tamil blogs on the go. Thanks for sharing and thanks to Vijay Karthik for developing such a app. Thangal pani thodara vaazhthukkal!!!

  ReplyDelete
 11. நண்பர் விஜய் கார்த்திக் என்னையும் தொடர்பு கொண்டிருந்தார். சில சிறிய மாற்றங்கள் செய்யச் சொல்லியிருக்கிறேன்.... பிரவுசரில் கொக்கி போலத் தெரியும் எழுத்துக்கள் இந்த ஆப்பில் தெளிவாக காணக் கிடைக்கின்றன....

  ReplyDelete
 12. உயர்திரு மதுரை தமிழன் அவர்களுக்கும் , வாழ்த்திய உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
  "தமிழ் ப்ளாக் சங்கமம்" android செயலிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் iPhone செயலியை உங்களுக்கு விரைவில் வழங்கிட நாங்கள் உழைத்து கொண்டு இருக்கிறோம் என்பதையும் பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 13. விஜய் கார்த்திக் அவர்கள் ஐபோனில் பயன்படுத்தும் விதமாகவும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். https://itunes.apple.com/in/app/tamil-blog-sangamam/id1040739022 சுட்டியை தங்கள் பதிவில் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து அறியத் தந்த உங்களுக்கும், செயலியை உருவாக்கிவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog