உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 16, 2015

சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி

சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


சிக்கலில் மாட்டிய திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி . பாலிமர் செய்தியில் வந்த காணொளி
செய்திகளை வலைத்தளத்தில் தருவது
உங்கள் மதுரைத்தமிழன்

8 comments :

 1. இதன் அடியில் இருக்கும் அரசியல் புரிகிறதா சகா? ராதிகா தலைமையில் சில தமிழ் சீரியல் தயாரிப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்களுக்கு எதிராக அதிரடி போராட்டம் ஒன்றை நடத்த, வடநாட்டு சீரியல்களால் மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கும் பாலிமர் டி.வீ காரர்கள் வேற எப்படிதான் ரிவன்ஜ் எடுக்கிறதாம்!!! ஏதோ என் சிற்றறிவுக்கு இப்படிதான் ஒடனே தோணிச்சு ;)

  ReplyDelete
  Replies
  1. எதை எங்கு கொண்டுபோய் நுழைக்கிறீர்கள்.. Mass production, etc. have their own standards. அயல் நாட்டிலிருந்து இந்த knowledge இன்னும் நம்மால் தெரிந்துகொள்ளப்படவில்லை..அல்லது செலவினால் கடைபிடிக்கப்படவில்லை. வட நாட்டு சீரியல் இல்லைன்ன பாதி தமிழ் தொலைக்காட்சிகளை மூட வேண்டியதுதான். அயல் நாட்டுப் படமோ அல்லது செய்திகளோ கூடாது என்றால், எல்லாத் தொலைக்காட்சிகளையும் இழுத்து மூட வேண்டியதுதான்.

   Delete
  2. நெல்லைத் தமிழன் சார்!!

   உங்களுக்கு இருக்கும் சமூக அக்கறையோடு தான் பாலிமர் தொலைக்காட்சியும் இயங்கி இருக்கும் என என்னால் நம்பமுடியவில்லை! சன் டி.வீ இதுவரை மொழிமாற்ற நாடங்களை ஒளிபரப்பியதில்லை. அவர்கள் viewers குறைய இதுகூட ஒரு காரணம். எனக்கு தெரிந்தவரை பத்துப்பதினைந்து வருடமாய் நெடுந்தொடர் பார்த்துவரும் என் அத்தை, அண்ணி போன்றோர் சன் டி.வி சீரியல்களில் கண்ணீர் விடுவதை நிறுத்தி ரெண்டு வருடங்கள் ஆகிறது. அவர்கள் விஜய் தொலைக்காட்சி ஹிந்தி ரீமேக் நாடகங்களுக்குத் தாவி, இப்போ பாலிமரில் தான் நிலை கொண்டிருகிறார்கள்! இதைப்பற்றி எழுத ஒரு பதிவு அளவு மேட்டர் இருக்கு சார்! மற்றபடி நான் சரத் supporter அல்ல:) தலைப்பாகட்டி பிரியாணி fan நும் அல்ல, பாலிமர் தொலைக்காட்சி எதிரியும் அல்ல:) சீரியல்- பெண்களின் உலகம். விரும்பி பார்க்கவிட்டாலும் அந்த செய்திகள் எங்கள் காதுகளில் விழுந்த படிதான் இருக்கும் -ஆண்கள் அரசியல் பேசுவதைப்போல!!

   Delete
 2. முதலில் இந்த விளம்பரத்தில் நடித்த நடிகர் - நடிகைகளை பிடித்து உள்ளே போடவேண்டும்
  ஆனால் அதற்க்கும் கொடி பிடிப்பான் நம்நாட்டு ரசிகன்.

  ReplyDelete
 3. தலப்பாக்கட்டி பிரியாணிக்கு வந்த சோதனை ?

  ReplyDelete
 4. மூன்று முறை ரெஃப்ரெஷ் செய்தும் காணொளி திறக்காததால் என்னால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

  :)))))

  ReplyDelete
  Replies
  1. காணொளி சரியாகத்தான் வேலை செய்கிறது எனது சைடில் நான் சரிபார்த்துவிட்டேன் மீண்டும் முயற்சி செய்யுங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள் இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான செய்தி அல்ல..

   Delete
 5. "Automation Process" - நம் கடைகளில் (Chain of restaurants) கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேசத் தரம் என்பது, முதலில், கை கழுவுவதிலிருந்து (இதுவே ஒரு process. 90% பேருக்கு மேல் இதைப் பற்றித் தெரியாது. ஒரு தடவை கை கழுவுவது என்பது, 7-10 ஸ்டெப்களை உள்ளடக்கியது), சமையலறையில் தலையைக் கவர் செய்வதிலிருந்து நிறைய Restaurants கடைபிடிப்பதில்லை. ஸ்வீட் தயாரிப்பவர்களும் இப்படித்தான். வெறும்ன கலர் கலரா அட்வர்டைஸ் பண்ணினால் போதுமா? இத்தகையவர்களுக்கு அரசியல் பின்புலமோ அல்லது அவர்களின் பங்குகளோ இருந்தால், ஒருத்தரும் புகார் சொல்ல மாட்டார்கள். இல்லாட்ட இதைக் காரணமாக வைத்து, அதிகாரிகள் காசு பார்த்துவிடுவார்கள். பொதுமக்களுக்கு எப்போதும்போல்..........

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog