Monday, June 9, 2014



@avargal unmaigal




இது எப்படி இருக்கு?



மலம் என்பது ஆசனவாய் மூலம்தான் வரவேண்டும் ஆனால் அது சிலரின் வாய்மூலம் வார்த்தைகளாக வருகிறது

டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதாம் ஆனால் நாம் சொல்வதை மனைவி கேட்க ஒரு ரிமோட் கண்டுபிடிக்க இயலாத ஒரு டெக்னாலஜி வளர்ந்தால் என்ன வளராவிட்டால் என்ன?

கல்யாணமான பெண்கள் துணிகளை அடித்து துவைக்கிறார்களோ என்னவோ ஆனால் கணவரை அடித்து துவைப்பதில்,பிழிவதில்வெளுத்துக்கட்டுவதில் மிக வல்லவராகவே இருக்கிறார்கள்

உனக்கு அறிவில்லை என்பதற்காக வருத்தப்படாதே ஆனால் உன்னை போல நிறைய பேருக்கு அறிவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படு

மாட்டுச் சண்டை கோழி சண்டைக்கு தடை போடும் நீதிமன்றம் ஏன் பொண்டாட்டி புருஷன் கூட போடும் சண்டைக்கு மட்டும் தடை போட மாட்டேங்கறாங்க...இது மதுரைத்தமிழன் வீட்டு பிரச்சனை மட்டுமல்லீங்க எல்லார் வீட்டுப் பிர்ச்சனையும் கூடதாங்க

வளர்ந்த பெண்களிடம் மாறாத ஒன்றே ஒன்று அவர்களின் காலணி சைஸ்தான் ப்ளவுஸ்ஸை மாற்றுவது போல அல்ல எவ்வளவு குண்டானாலும் காலணி சைஸை மாற்ற தேவையே இல்லை

எந்த பெண்ணும் ஒரு ஆணைப்பார்த்தவுடன் காதலை சொல்லிவிடமாட்டார்கள் அவர்களின் பர்ஸை பார்த்த பின் தான் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்

அவனை இரண்டாவது தடவை பார்த்த போது தான் காதலித்தாள்.முதலில் பார்த்த போது அவன் பணக்காரன் என்று அவளுக்கு தெரியாது .

சில பேர் காரியங்களை அரைகுறையாக செய்ய மாட்டார்கள் ;முழுவதையும் குறையாகவே செய்வார்கள்.

நான் எல்லாம் நண்பர்கள்கிட்ட போன் நம்பர் கேட்டு வாங்கி என் மொபைலில் சேமித்து வைப்பது எதற்காக தெரியுமா? அந்த நம்பரில் இருந்து போன் வந்தா எடுக்க கூடாது என்பதற்காகத்தான் ஹீ.ஹீ

நானெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மட்டும்தான் பேஸ்புக்கில் இருப்பேன் ஆனால் பல பேர் நாள் முழுவதும் பேஸ்புக்கில் இருக்காங்க. அவங்களால் எப்படிதான் அப்படி இருக்க முடியுதோ?

இந்திய பெண்கள் ஆன்லைனில் ஏன் ஷாப்பிங்க செய்வதில்லை தெரியுமா? அங்கு அவர்களால் பேரம் செய்ய முடியாததால்தான்

ஜெயலலிதா அவர்களால்தான் தமிழ்நாட்டில் பாதி பேர் உண்மை பேசுறாங்க..என்ன புரியலையா குடிச்சவங்க எப்போதும் உண்மையைத்தான் பேசுவாங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இது எப்படி இருக்கு!?
    >>>
    சூப்பரப்பு!

    ReplyDelete

  2. சிறந்த அலசல் பதிவு

    visit http://ypvn.0hna.com/

    ReplyDelete
  3. ரெண்டு விஷயம் சொல்லணும் சகா..
    இப்போ எனக்கு சந்தோஷம் நம்மை போல இருக்கும் மற்றவர்களை பார்த்து:))
    நீங்க தமிழில் மட்டும் எழுதினதால தான் தமிழ்நாட்டுல அம்மா வென்றதாகவும், மோடி தோற்றதாகவும் ஒரு டாக் இருக்கே அது உண்மையா?! ;)

    ReplyDelete
  4. வாழ்க்கையில் அடிபட்டவர்கள் தான் பிற்காலத்தில் பெரிய தத்துவ ஞானியா வந்திருக்கிறார்கள்....... நீங்கள் எப்படி????

    ReplyDelete
  5. குடிச்சவங்க உண்மை தான் பேசுவாங்க! :)))))

    மற்றவையும் ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.